மேட்டுப்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் A.K.செல்வராஜ் பேச்சுவார்த்தை - போராட்டத்தை வாபஸ் பெற்ற ஜடையம்பாளையம் ஊராட்சி மக்கள்

சீரான குடிநீர் கேட்டு இரண்டாவது நாளாக மேட்டுப்பாளையம் - சத்தி சாலையில் மறியலில் ஈடுபட்டுள்ள மக்களுடன் மேட்டுப்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் A.K.செல்வராஜ் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இதனையடுத்து மறியலை கைவிட்டு மக்கள் கலைந்து சென்றனர்.


கோவை: மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி, காரமடை, ஜடையம்பாளையம் ஊராட்சியில் முறையாக குடிநீர் விநியோகம் செய்யாததை கண்டித்து ஆலங்கொம்பு பகுதியில் அப்பகுதியை சேர்ந்த பெண்கள் உட்பட 200க்கும் மேற்பட்டோர் நேற்று (ஏப்ரல்.29) காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.



பின்னர் தகவல் அறிந்து விரைந்து சென்ற போலீசார் மற்றும் ஊராட்சி தலைவர் ஆர்.கே.பழனிச்சாமி உள்ளிட்டோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அதில் சுமூக முடிவு எட்டியதையடுத்து கலைந்து சென்றனர்.



இந்த நிலையில் நேற்று போலீசார், வருவாய்த்துறையினர் உடன் பேச்சுவார்த்தை நடத்தியும் உரிய பலனளிக்காததால் இன்று (ஏப்ரல்.30) காலை இரண்டாவது நாளாக அப்பகுதி பொதுமக்கள் மீண்டும் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.



இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பின்னர் மேட்டுப்பாளையம் - சத்தி சாலையில் மறியலில் ஈடுபட்டுள்ள மக்களுடன் மேட்டுப்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் A.K.செல்வராஜ் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட பின்னர், போராட்டத்தை மக்கள் வாபஸ் பெற்றனர்.

Newsletter

ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

‘ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை’ – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

சட்டவிரோத குப்பைக் குவியல்கள்: 4 பேருக்கு தலா ஒரு லட்சம் அபராதம் - கோவை மாநகராட்சி நடவடிக்கை

கோவை சிங்காநல்லூரில் சட்டவிரோதமாக குப்பைகளை குவித்த நான்கு பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் என ஒரே நாளில்  மொத்தம் ரூ.4 லட...

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற...

அமராவதி அணையில் நீர்மட்டம் 51.45 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 379 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 22ஆம் தேதி நிலவரப்படி 51.45 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...