பொள்ளாச்சி அருகே இரண்டு இடங்களில் குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல் - போக்குவரத்து பாதிப்பு

சாலை மறியலில் ஈடுபட்ட பெண்களிடம் காவல்துறையினர் சமாதான பேச்சு வார்த்தை நடத்தியும், சமாதானம் ஆகாத பெண்கள், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் வரும் வரை சாலை மறியல் போராட்டம் தொடரும் என திட்டவட்டமாக தெரிவித்துவிட்டதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.


கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள சுந்தரகவுண்டனூர் மற்றும் மரம்பிடுங்கி கவுண்டனூர் ஆகிய கிராமங்களில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.



இந்த இரண்டு கிராமங்களுக்கும் கடந்த ஆறு மாத காலமாக குடிநீர் விநியோகம் சரி வர கொடுக்கவில்லை எனவும், கடந்த 30 நாட்களாக முழுவதுமாக குடிநீர் வராததால் குடிப்பதற்கும் மற்றும் கால்நடைகளுக்கும் குடிநீர் இல்லாததால் ஆத்திரம் அடைந்த ஊர் பொதுமக்கள் சுந்தரகவுண்டனூர் மற்றும் மரபிடுங்கி கவுண்டனூர் ஆகிய கிராமத்தை பெண்கள் பொள்ளாச்சி தாராபுரம் பிரதான சாலையில் அடுத்தடுத்து இரண்டு இடங்களில் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.



இதனால் இரண்டு மணி நேரமாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.



தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மறியலில் ஈடுபட்ட பெண்களிடம் சமாதான பேச்சு வார்த்தை நடத்தியும் சமாதானம் ஆகாமல் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் வரும் வரை தொடர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவதாக தெரிவித்து காலி குடங்களுடன் சாலையில் அமர்ந்து போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.



சாலை மறியல் போராட்டத்தால் பொள்ளாச்சியில் இருந்து தாராபுரம் செல்லும் வாகனங்களை மாற்று பாதையில் செல்ல திருப்பிவிடபட்டது.

Newsletter

இரவில் மர்ம நபர்கள் தாக்கியதாக ரத்தக் காயங்களுடன் போலீசாரிடம் வாலிபர் புகார்

கோவை ரேஸ் கோர்ஸ் காவல் நிலையம் அருகே கையில் ரத்த காயங்களுடன் கூலித் தொழிலாளி ஒருவர் தன்னை சிலர் தாக்க முயன்றதாக போலீசாரி...

கோவையில் ரயில் மோதி 2 பெண் தூய்மைப் பணியாளர்கள் உயிரிழப்பு

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் ரயில்வே தண்டவாளத்தில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு பெண் ஒப்பந்தப் பணியாளர்கள் ரயில...

கள்ளிமடை துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை

கள்ளிமடை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் காமராஜ்...

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை அறிவிப்பு

சோமையம்பாளையம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக ஆகஸ்ட் 14ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வர...

கோவை பீளமேடு வார்டு 27-ல் அங்கன்வாடி மையம், தூய்மைப் பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேட்டில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் அங்கன்வாடி மையம், சாலையோர தூய்மை, குப்பை அகற...

ராகுல் காந்தி தான் 2029 பிரதமர் வேட்பாளர்; தவெகவும் ஏற்றுக்கொள்ளும்: கோவையில் அமைச்சர் ராஜேஷ்குமார்

கோவையில் நடைபெற்ற சர்வதேச சுற்றுலா மாநாட்டில் பேசிய அமைச்சர் ராஜேஷ்குமார், தமிழகத்தில் சுற்றுலாத்துறையை வேகமாக வளர்க்க ப...