பொய் வழக்கு பதிவு செய்து வாலிபரை தாக்கிய காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்ககோரி உறவினர்கள் போராட்டம்

விசாரணைக்காக அழைத்து சென்ற வாலிபரை கடுமையாக தாக்கி, பொய் வழக்கு பதிவு செய்த கோவை சரவணம்பட்டி காவல்துறை ஆய்வாளர் ராஜ்குமார் மீது நடவடிக்கை எடுக்க கோரி உறவினர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.



கோவை கணபதி பகுதியை சேர்ந்தவர், ஆனந்த் இவரையும் அவரது அண்ணன் அரவிந் என்பவரை கொலை வழக்கு தொடர்பாக கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதில் மார்ச் மாதம் ஜாமீனில் வந்த ஆனந்தை , கொலை முயற்சி வழக்கு தொடர்பாக சரவணம்பட்டி காவல்துறையினர் கடந்த வாரம் விசாரணை என்ற பெயரில் அழைத்து சென்றுள்ளனர். இதனையடுத்து ஆனந்த் மீது வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், அவரை தாக்கியதில் கால் உடைந்த நிலையில் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மனமுடைந்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட ஆனந்தின் தாயார் உயிருக்கு ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.



இந்நிலையில் தன் சகோதரரை தாக்கி பொய் வழக்கு பதிவு செய்த சரவணம்பட்டி காவல்துறை ஆய்வாளர் ராஜ்குமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி ஆனந்தின் தங்கை மற்றும் அவர்களது உறவினர்கள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் சரவணம்பட்டி காவல்துறையினர் வேண்டும் என்றே தன் சகோதரன் மீது பொய் வழக்கு தொடுத்து சித்தரவதை செய்துள்ளதாகவும், இது குறித்த கேட்ட தன்னையும் தனது தாயாரையும் சாதி பெயரை கூறி தாகாத வார்தையில் திட்டியதாகவும் குற்றம்சாட்டினார். இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் காவல்துறையினர் பேச்சு வார்தையில் ஈடுபட்டதை அடுத்து, சரவணம்பட்டி காவல்துறை ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்து கலைந்து சென்றனர்.

Newsletter

புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மக்கள் தேர்வு செய்த அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்ட...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், Coimbatore-ல் சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு ஆகியவற்றில...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அங்கக வேளாண்மை பயிற்சி மே 13ல் நடைபெறுகிறது

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் மே 13ல் அங்கக வேளாண...

Wild Elephant Electrocuted in Coimbatore; Severe Burn Injuries on Trunk Raise Safety Concerns

A male wild elephant, estimated to be around 25 years old, was found dead after an apparent electrocution incident at a...

கோவையில் மின்சாரம் தாக்கி ஆண் காட்டு யானை உயிரிழப்பு : தும்பிக்கை கருகிய நிலையில் மீட்பு.

மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட கரடிமடை பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில், சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை...

கோவை மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வுக்கு பாராட்டு விழா: ஆட்சியர் விருது வழங்கினார்

கோவை IMA ஹாலில் நேற்று நடைபெற்ற பாராட்டு விழாவில், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் விழிப்புணர்வு பணியில் ச...