கட்டாந்தி மலை அடிவாரம் அருகே கனிம வளக்கொள்ளை - ஏழு லாரிகளை சிறைபிடித்த பொதுமக்கள்

கனிம வளக்கொள்ளையில் ஈடுபட்ட லாரிகளை கட்டாந்தி மலை காணுயிர் பாதுகாப்பு சங்கம் மற்றும் ஊர் பொதுமக்கள் சிறைப்பிடித்து வருவாய்த்துறை மற்றும் காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். லாரிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்து காவல் நிலையம் கொண்டு சென்றனர்.


கோவை: கோவை மாவட்டம், வடக்கு தாலுகாக்கு உட்பட்ட கூடலூர் நகராட்சி மலை தளப் பாதுகாப்பு அதிகாரம் கொண்ட பகுதியாகும். இந்தப் பகுதியில் கட்டாந்தி மலை அடிவாரம், செல்வபுரம் வடக்கு பகுதியில் உள்ள வினோபா தான பூமியில் சட்டத்திற்கு புறம்பாக கனிம வளங்கள் இன்று (ஏப்ரல்.26) அதிகாலையில் ஏழு டிப்பர் லாரிகள் மற்றும் இரண்டு ஜே.சி.பி எந்திரங்கள் மூலமாக சட்டத்துக்கு புறம்பாக கனிம வளங்களை தோண்டி எடுத்துக் கொண்டு செல்லப்பட்டது.

அதனை அங்கு உள்ள கட்டாந்தி மலை காணுயிர் பாதுகாப்பு சங்கம் மற்றும் ஊர் பொதுமக்கள் அந்த லாரிகளை சிறை பிடித்து வருவாய்த்துறை, காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதை அடுத்து காவல் துறையினர் அங்கு ரோந்து வாகனத்தை கொண்டு வந்து தடுத்து நிறுத்தி லாரிகளை பறிமுதல் செய்து காவல் நிலையம் கொண்டு சென்றனர்.



மேலும் கடந்த தேர்தல் நாள் அன்று சட்ட விரோதமாக கனிம வளம் கொள்ளை அடிக்கப்பட்டது. உயர்நீதிமன்ற உத்தரவையும் மீறி கனிம வள கொள்ளையை வருவாய்த் துறை மற்றும் கனிம வளத்துறை எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை. யானைகள் வழித்தட பாதையில் நடக்கும் கனிம வளக் கொள்ளை வனத்துறையினர் தடுத்து நிறுத்தவில்லை எனவும், அந்த கட்டாந்தி மலை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபடுவதில்லை எனவும் அப்பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

Newsletter

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...

வேளாண் பேராசிரியர்களுக்கு TNAU-வில் மூன்று நாள் சிறப்புப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில், வேளாண் இணை பேராசிரியர்களுக்கான மூன்ற...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...