மூலக்காடு மலைக்கிராமத்தில் தண்ணீர் தொட்டியில் குட்டிகளுடன் நீர் அருந்திய யானை கூட்டம் - வைரல் காட்சிகள்

மூலக்காடு மலைகிராமத்தில் மக்களின் ஊர் எல்லையில் அமைக்கப்பட்டுள்ள தண்ணீர் தொட்டியில் நேற்று மாலையில் குட்டிகள் உடன் வந்த 10க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் ஒன்றாக சேர்ந்து தண்ணீர் அருந்தின. இதனை அங்கிருந்த ஒருவர் வீடியோ பதிவு செய்து வெளியிட்டுள்ளார்.



கோவை: தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. கோவை மாவட்டத்தில் 100°Fயை தாண்டி வெயில் பதிவாகி வருகிறது. இதனால் நீர் நிலைகளில் தண்ணீர் குறைந்திருப்பதால் வனவிலங்குகள் வனப்பகுதியில் இருந்து வெளியேறுகின்றன.



இந்நிலையில் தடாகம் வீரபாண்டிபுதூரை அடுத்த மூலக்காடு எனும் மலைகிராமத்தில் வசிக்கும் மக்களின் ஊர் எல்லையில் வனவிலங்குகள், பறவைகள் நீர் அருந்துவதற்கு தண்ணீர் தொட்டி ஏற்பாடு செய்து தண்ணீர் நிரப்பி வைக்கின்றனர். இந்நிலையில் நேற்று மாலை அப்பகுதிக்கு குட்டிகள் உடன் வந்த 10க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் தண்ணீர் தொட்டியில் ஒன்றாக சேர்ந்து தண்ணீர் அருந்தின. இதனை அங்கிருந்த ஒருவர் வீடியோ பதிவு செய்து வெளியிட்டுள்ளார். தற்பொழுது அந்த காட்சிகள் வைரலாகி வருகிறது.

Newsletter

கோவை நீலாம்பூரில் வாலிபர் குத்திக்கொலை; உடலை பள்ளத்தில் வீசியதாக கூறி தொழிலாளி சரண்

கோவை நீலாம்பூரில் இளைஞர் ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்து உடலை சாலையோர பள்ளத்தில் வீசியதாக கூறி காவல் நிலையத்தில் ச...

மீலாதுன் நபி விழாவையொட்டி கோவையில் நாளை அனைத்து மதுபான கடைகளும் மூடல்-ஆட்சியர் அறிவிப்பு

மீலாதுன் நபி விழாவையொட்டி நாளை (26.08.2026) Dry Day அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து வகையான ம...

கோவை கவுண்டம்பாளையத்தில் "மறு நெசவு" திட்டம் - புதன்கிழமை தோறும் துணிக் கழிவு சேகரிப்பு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு 33-ல் "மறு நெசவு" திட்டத்தின் கீழ் துணிக் கழிவு சேகரிப்பு தொடங்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட்...

கோவை பீளமேட்டில் குடிநீர் குழாய் பழுது உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சாக்கடை சுத்தம், குடிநீர் குழாய் பழுது, மழைநீர்...

கோவை மாநகராட்சி ஆணையர் வாகன நிறுத்துமிடம் மற்றும் குடிநீர் பணிகளை ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, ஆர்.எஸ்.புரம் பல்நிலை வாகன நிறுத்துமிடம் மற்றும் மத்திய மண்டல பகுதிகளில்...

மாநில அளவில் முதலிடம் பெற்ற கோவை மாநகராட்சி: அலுவலர்கள், களப்பணியாளர்களுக்கு மேயர் நன்றி..!

மாநில அளவில் சிறந்த மாநகராட்சிக்கான முதல் பரிசைப் கோவை பெற்றதற்காக, மாநகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள், தூய்மைப் பணியாளர...