ரயில் நிலையங்களில் மலிவு விலை உணவு விற்பனை தொடங்கப்பட்டது

ஐஆர்சிடிசி மூலம் தெற்கு ரயில்வேயில் 34 ரயில் நிலையங்களில் மலிவு விலையில் உணவு விற்பனை துவங்கப்பட்டுள்ளது. கோவை, மேட்டுப்பாளையம் உள்ளிட்ட நிலையங்களில் உணவு கிடைக்கிறது.


கோவை: இந்திய ரயில்வே உணவு வழங்கல் மற்றும் சுற்றுலா கழகம் (ஐஆர்சிடிசி) தொடங்கிய முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளில் பயணிகளுக்கு கோடை காலத்தில் மலிவு விலையில் உணவு விற்பனையை செய்யும் திட்டம் துவங்கப்பட்டுள்ளது. சென்னை, திருச்சி, சேலம், ஈரோடு, கோவை மற்றும் மேட்டுப்பாளையம் உள்ளிட்ட 34 ரயில் நிலையங்களில் இந்த திட்டம் ஏப்ரில் 24 அன்று துவங்கியது.

கோவை மற்றும் மேட்டுப்பாளையம் ரயில்நிலையத்தில் 200 கிராம் எடை கொண்ட எலுமிச்சை சாதம், புளியோதரை, தயிர்சாதம், கிச்சடி ஆகியவற்றை எகனாமி மீல்ஸ் என்ற பெயரில் ரூ. 20க்கு விற்பனை செய்கின்றனர். மேலும், 325 கிராம் எடையிலான பூரி மாசல் மற்றும் பஜ்ஜி ஜனதா கானா என்பதில் ரூ. 20க்கும், 350 கிராம் மசால் தோசை ஸ்னாக் மீல்ஸ் என்ற பெயரில் ரூ. 50க்கும், 200 மில்லி தண்ணீர் பாட்டில்கள் ரூ. 3க்கு விற்பனை செய்யப்படுகின்றன. பொது பெட்டிகளுக்கு அருகே உணவுகள் எளிதில் கிடைக்க வசதியாக நடைமேடையில் உணவகங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

கோவை ரயில்நிலையத்தில் முதலாவது நடைமேடையில் மேலும் உணவகங்கள் நிலையமைப்பு மூலமும், இந்த சேவைக்கு பயணிகள் நல்ல வரவேற்பையும் அளித்துள்ளனர்.

Newsletter

கோவை மாநகராட்சியில் 700 சமூக நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேற்கு மற்றும் கிழக்கு மண்டலங்களில் நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி முகாமில் 700 சமூக நாய்களுக்க...

கோவை மாநகராட்சியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு 90% முடிவு; விடுபட்ட வீடுகளுக்கு ICCC உதவி எண்கள் அறிவிப்பு

கோவை மாநகராட்சி பகுதிகளில் மக்கள் தொகை கணக்கெடுப்பு-2027 முதற்கட்ட வீட்டுக் கணக்கெடுப்பு பணிகள் 90% நிறைவு. விடுபட்ட வீட...

அமராவதி அணை நீர்மட்டம் 57.52 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணை 33.79 அடியாக பதிவு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் நீர்வரத்தால் 57.52 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணை 33.79...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளது....

சட்டப்பேரவையில் வார்த்தை ஜாலங்களுக்கு இடமளிக்காமல் ஆக்கப்பூர்வமாக விவாதிக்க வேண்டும்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், பேரவைத் தலைவர் மற்றும் தமிழக முதல்வர் தெரிவித்ததை...

கோவை மாவட்ட வாள்வீச்சு போட்டி: சித்தாப்புதூர் பெண்கள் பள்ளி மாணவிகள் வெண்கலம் வென்று பெருமை

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற மாவட்ட அளவிலான வாள்வீச்சுப் போட்டியில் சித்தாப்புதூர் மாநகராட்சி பெண்கள் உயர்ந...