வெள்ளக்கோவிலில் கிணற்றில் தவறி விழுந்து இரண்டு சிறுவர்கள் பலி - காவல்துறை விசாரணை

கிணற்றில் விழுந்து உயிரிழந்த இரண்டு சிறுவர்களின் உடலை சுமார் 1.30 மணி நேரத்திற்கும் மேலாக தேடி தீயணைப்புத்துறையினர் மீட்டனர். பின்னர் சிறுவர்களின் உடல்களை காங்கேயம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.


திருப்பூர்: காங்கேயம் அடுத்த வெள்ளகோவில் உப்புபாளையம் காலனியை சேர்ந்த பிரகாஷ் என்பவரது மகன் கோகுல் (8), ஜெயக்குமாரின் மகன் அஸ்வின் (8) ஆகிய இரு சிறுவர்கள் 3 வகுப்பு படித்து வருகிறார்கள். தற்போது பள்ளி கோடை விடுமுறை என்பதால் தங்களுடைய சைக்கிள் வைத்து விளையாடிக் கொண்டிருந்தனர். அபெபோது திடீரென காணவில்லை என அக்கம்பக்கம் தேடிய நிலையில் வெள்ளகோவில் காவல் நிலையத்தில் சிறுவர்களின் பெற்றோர்கள் புகார் அளித்துள்ளனர்.

இந்நிலையில் இவர்கள் வீட்டிலிருந்து சுமார் 1 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தனியாருக்கு சொந்தமான கிணற்றின் அருகே சைக்கிள் மற்றும் சிறுவர்களின் துணிகள் கிடந்துள்ளது. இதை அடுத்து சிறுவர்கள் கிணற்றில் உள்ளே இறங்கி இருக்கலாம் என்ற கோணத்தில் வெள்ளகோவில் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.



சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு நிலைய அலுவலர் பிரபாகரன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் கிணற்றிற்குள் இறங்கி தீவிரமாக தேடினர். பின்னர் சுமார் 1.30 மணி நேரத்திற்கு பிறகு இரண்டு சிறுவர்களின் உடலையும் சடலமாக மீட்டு காங்கேயம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

ஒரே பகுதியில் இரண்டு சிறுவர்கள் கிணற்றில் விழுந்து பலியானது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. வெள்ளகோவில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். தற்போது கோடைவிடுமுறை என்பதால் பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகள் மற்றும் சிறுவர்களை பாதுகாப்புடன் வைக்க வேண்டும், இதுபோல் நீர்நிலைகள் குறித்தும் அதில் உள்ள ஆபத்துக்கள் குறித்தும் எடுத்தது கூறவேண்டும், ஒவ்வொரு ஆண்டும் இதுபோல் பள்ளிகள் கோடை விடுமுறை விடும் போதும் இது போல் குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் பலியாவது வேதனையளிக்கின்றது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...