தமிழக கேரள எல்லையான வாளையார் பகுதியில் ரூ.14,20,000 பணம் பறிமுதல் – போலீசார் அதிரடி நடவடிக்கை

கோவையிலிருந்து திருச்சூருக்கு சென்று கொண்டிருந்த பேருந்தில் ஏறி பயணிகளிடம் போலீசார் பரிசோதனை செய்தனர். அப்போது, ஜெராகி பகுதியை சேர்ந்த வினோ என்பவர் ஆடையில் மறைத்து வைத்து கொண்டு சென்ற 14 லட்சத்து 20 ஆயிரம் ரூபாயை போலீசார் பறிமுதல் செய்தனர்.


கோவை: கேரளா, தமிழக எல்லையான வாளையார் பகுதி வழியாக சென்று கொண்டிருந்த பேருந்துகளில் பயணிகளிடம் கேரள போலீசார் நேற்று ஏப்ரல்.22 பரிசோதனை மேற்கொண்டனர். அப்போது கோவையிலிருந்து திருச்சூருக்கு சென்று கொண்டிருந்த பேருந்தில் பயணிகளிடம் பரிசோதனை செய்தனர்.பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்த எர்ணாகுளம் அருகே ஜெராகி பகுதியைச் சேர்ந்த வினோ என்பவரை பரிசோதித்த போது அவரது ஆடையில் ரகசிய அறைகள் தயார் செய்யப்பட்டு அவற்றிற்குள் பணம் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.



இந்த பணத்திற்கான ஆவணங்கள் எதுவும் இன்றி கொண்டு சென்றதால், அவர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார், அவர் மறைத்து வைத்திருந்த 14 லட்சத்து 20 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.

Newsletter

கோவை ரயில் நிலையம் அருகே சாக்கடை கால்வாயில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்; போலீசார் விசாரணை

கோவை ரயில் நிலையம் பின்புறம் உள்ள குட்செட் சாலையில் சாக்கடை கால்வாயில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் பர...

பெரியார் 148வது பிறந்தநாள்: கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி

பெரியாரின் 148வது பிறந்தநாளை முன்னிட்டு கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி நடைபெற்றது. மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி...

கோவையில் கஞ்சா வழக்கு குற்றவாளிக்கு 5 ஆண்டு சிறை

கோவை MTP ரோடு MGR மார்க்கெட் அருகே 2019ம் ஆண்டு நடந்த கஞ்சா விற்பனை வழக்கில் இரண்டாம் எதிரி தினேஷுக்கு 5 ஆண்டுகள் சிறைத்...

Two Road Accidents Leave Pedestrian, Cyclist Injured in Coimbatore

An unidentified pedestrian, aged around 40, sustained a head injury after being hit by a motorcycle on Mettupalayam Road...

கோவையில் இரண்டு தனி விபத்துகள்: இருவருக்கு பலத்த காயம்

கோவை தடாகம் ரோடு கே.என்.ஜி புதூர் பகுதியில் சைக்கிளில் சென்ற அஸ்வின் (21) என்பவர் மீது எதிர்திசையில் வந்த கார் மோதி இடது...

கோவை பீளமேடு வார்டு 27-ல் பல்வேறு மாநகராட்சி பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதிக்குட்பட்ட மாநகராட்சி வார்டு எண் 27, பீளமேடு பகுதியில் செப்டம்பர் 17, 2026 அன்று வார்டு கவுன்சி...