தடாகம் Strong Room அருகே சென்ற கார் - அதிகாரிகளுடன் முகவர்கள் வாக்குவாதம்

அரசினர் பொறியியல் கல்லூரியில் Strong Room அருகே யாரும் செல்லக்கூடாது என்று கூறப்பட்டுள்ள நிலையில் தனியார் வாகனம் ஒன்று Strong Room அருகே சென்றுள்ளது. இதனைப் பார்த்த முகவர்கள் அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு நிலவியது.


கோவை: கடந்த 19ம் தேதி தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்று முடிந்தது. கோவை நாடாளுமன்ற தொகுதியிலும் தேர்தல் முடிவடைந்த நிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் சீல் வைக்கப்பட்டு தடாகம் சாலையில் உள்ள அரசினர் பொறியியல் கல்லூரியில் Strong Roomல் வைக்கப்பட்டு அந்த அறை அடைக்கப்பட்டுள்ளது.

மேலும் அங்கு மூன்று அடுக்கு பாதுகாப்புகள், சிசிடிவி கேமராக்கள் அனைத்தும் பொருத்தப்பட்டு பாதுகாப்பு பணிகளானது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் அங்கு வேட்பாளர்களின் முகவர்களும் உள்ளனர். Strong Room அருகே யாரும் செல்லக்கூடாது என்று கூறப்பட்டுள்ள நிலையில் நேற்று (ஏப்ரல்.21) காலை தனியார் வாகனம் ஒன்று Strong Room அருகே சென்றுள்ளது. இதனைப் பார்த்த முகவர்கள் அதிகாரிகளிடம் முறையிட்டனர்.

அப்போது அந்த கார் பணிபுரியும் பேராசிரியரின் கார் என தெரியவந்தது. இந்தப் பகுதியில் யாரும் வரக்கூடாது, வேட்பாளர்கள் கூட அவர்களின் காரில் வரக்கூடாது என்று கூறப்பட்டுள்ள நிலையில் எவ்வாறு இதனை அனுமதித்தார்கள் என்று கூறி முகவர்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கே சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது. பின்னர் காவல்துறையினர் பேச்சு வார்த்தை நடத்தி முகவர்களை சமாதானப்படி காரை அனுப்பி வைத்தனர்.

Newsletter

கோவை ரயில் நிலையம் அருகே சாக்கடை கால்வாயில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்; போலீசார் விசாரணை

கோவை ரயில் நிலையம் பின்புறம் உள்ள குட்செட் சாலையில் சாக்கடை கால்வாயில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் பர...

பெரியார் 148வது பிறந்தநாள்: கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி

பெரியாரின் 148வது பிறந்தநாளை முன்னிட்டு கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி நடைபெற்றது. மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி...

கோவையில் கஞ்சா வழக்கு குற்றவாளிக்கு 5 ஆண்டு சிறை

கோவை MTP ரோடு MGR மார்க்கெட் அருகே 2019ம் ஆண்டு நடந்த கஞ்சா விற்பனை வழக்கில் இரண்டாம் எதிரி தினேஷுக்கு 5 ஆண்டுகள் சிறைத்...

Two Road Accidents Leave Pedestrian, Cyclist Injured in Coimbatore

An unidentified pedestrian, aged around 40, sustained a head injury after being hit by a motorcycle on Mettupalayam Road...

கோவையில் இரண்டு தனி விபத்துகள்: இருவருக்கு பலத்த காயம்

கோவை தடாகம் ரோடு கே.என்.ஜி புதூர் பகுதியில் சைக்கிளில் சென்ற அஸ்வின் (21) என்பவர் மீது எதிர்திசையில் வந்த கார் மோதி இடது...

கோவை பீளமேடு வார்டு 27-ல் பல்வேறு மாநகராட்சி பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதிக்குட்பட்ட மாநகராட்சி வார்டு எண் 27, பீளமேடு பகுதியில் செப்டம்பர் 17, 2026 அன்று வார்டு கவுன்சி...