மின் கோபுரங்கள் அமைக்க எதிர்ப்பு - வெள்ளகோவில் அருகே 38 கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு

மின் கோபுரங்கள், உயர்மின் பாதைகள் விவசாய நிலங்களின் வழியாக அமைக்கப்பட உள்ளது. ஊராட்சி நிர்வாகத்தின் அனுமதி ஏதும் பெறாமலேயே விதிமுறைகளை மீறி துணை மின் நிலைய கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதாக விவசாயிகள் புகார் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் காங்கேயம் வெள்ளகோவில் அருகே 38 குக்கிராம மக்கள் நாடாளுமன்றத் தேர்தல் புறக்கணிப்பதாகவும் இன்று முதல் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதியில் கருப்புக் கொடிகளை கட்டி மத்திய மாநில அரசுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் வெள்ளகோவில் பகுதிகளில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

வெள்ளகோவில் வேலப்பன் நாயக்கன் வலசு ஊராட்சி ராகுபையன்வலசு, குருக்குபாளையத்தில் தனியாருக்கு சொந்தமான 14 ஏக்கர் நிலத்தை தனியார் நிறுவனம் வாங்கி உள்ளது. அந்த நிலத்தில் துணை மின் நிலையம் அமைக்கவும், இதர கட்டுமான பணிகளும் நடைபெற்று வருகின்றது. கரூர் மாவட்டத்தில் அந்த நிறுவனத்துக்கு சொந்தமான பல காற்றாலைகளில் இருந்து கிடைக்கும் மின்சாரம் ராகுபையன் வலசு துணைமின் நிலையத்துக்கு கொண்டுவரப்பட உள்ளது. பின்னர் அங்கிருந்து 20 கிலோமீட்டர் தூரத்துக்கு உயர்மின் கோபுரம், மின் பாதை அமைத்து மூலனூர் துரம்பாடிக்கு கொண்டு செல்லப்படுகிறது.



இதற்கு மின் கோபுரங்கள், உயர்மின் பாதைகள் பொதுச்சாலைகள் வழியாக அமையும் நிலையில் பல இடங்களில் விவசாய நிலங்களின் வழியாக அமைக்கப்பட உள்ளது. இதற்கு தொடக்கம் முதலே விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் ஊராட்சி நிர்வாகத்தின் அனுமதி ஏதும் பெறாமலேயே விதிமுறைகளை மீறி துணை மின் நிலைய கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதாக தெரிகிறது.

இந்த நிலங்களில் வழியாக பிஏபி வாய்க்கால் செல்வதாகவும் அதற்கு பொதுப்பணி துறையிடமும் அனுமதி பெறாமலும், விவசாய நிலங்களில் உயர் அழுத்த மின் கோபுரங்கள், மின்பாதைகள் அமைத்தால் நிலத்தின் விலை மதிப்பு குறையும், நில உரிமை சிதறடிக்கப்படும், விவசாயம் பாதிக்கப்படும் என விவசாயிகள் அச்சம் தெரிவித்துள்ளனர். மேலும் விவசாயிகளின் முன் அனுமதியின்றி தனியார் நிறுவன ஊழியர்கள் நிலத்தை அளவீடு செய்வதற்கு விவசாயிகளை அச்சுறுத்தி உள்ளே நுழைந்து அத்துமீறல் நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர்.

விவசாயிகளின்நிலங்களில் மத்திய, மாநில அரசு உதவியுடன் சட்ட விதிமீறல் நடைபெற்று வருகிறது. விவசாயிகள் விவசாய சங்க நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நேற்று மயில்ரங்கத்தில் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து இன்று விவசாய நிலங்கள் வழியாக மின் வழித்தடம் அமைப்பதை கைவிட வலியுறுத்தி வரும் நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணிப்பதாகவும் ராகுபையன்வலசில் தொடர் காத்திருப்பு மற்றும் நாடாளுமன்ற தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்திலும் கிராமங்களில் உள்ள வீடுகள் தோட்டங்களில் கருப்பு கொடிகளை கட்டி எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். இதனிடையே போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் வருவாய்த்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியது தோல்வியில் முடிவடைந்தது.

இதில் ராகுபையன்வலசு, சுந்தரவாடி மூத்த நாயக்கன் வலசு, மேலப்பன்நாயக்கன்வலசு, பாப்பா வலசு, மொட்டை காளி வலசு, மயில்ரங்கம் ஆகிய 38 கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் பொதுமக்கள் கலந்து கொண்டுள்ளனர். தேர்தலுக்கு இன்னும் நான்கு நாட்களே உள்ள நிலையில் தேர்தல் புறக்கணிப்பு அறிவிப்பு மற்றும் காத்திருப்பு போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டு வருவது வெள்ளகோவில் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் நாளை முதல் இந்த தனியார் நிறுவனம் கையகப்படுத்தப்படும் கிராமங்களில் துண்டுப்பிரசுரம் விநியோகித்து தேர்தலை புறக்கணிக்க விவசாய சங்க நிர்வாகிகள் விழிப்புணர்வு ஏற்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளனர்.

இந்தப் போராட்டத்திற்கு தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனர் வழக்கறிஞர் ஈசன் முருகசாமி, மாநில பொதுச் செயலாளர் முத்து விஸ்வநாதன், மாவட்ட செயலாளர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் உட்பட 200க்கும் மேற்பட்ட விவசாயிகள், பொதுமக்கள் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தனர்.

Newsletter

Teen Girl Dies After Family of Three Consumes Pesticide Near Perur in Coimbatore

In a tragic incident, a family of three allegedly consumed pesticide at their residence in Arumugagoundanur near Perur,...

கோவையில் இயற்கை உபாதைக்கு சென்றவரிடம் கத்திமுனையில் வழிப்பறி: 2 பேர் கைது

கோவை புலியகுளம் அம்மன்குளம் பகுதியில் இயற்கை உபாதைக்கு சென்ற எலக்ட்ரீசியன் மிதுன்குமாரிடம் கத்தி காட்டி மிரட்டி ரூ.7 ஆயி...

Biker Run Over by Bus on Sathy Road in Coimbatore

In a horrific accident, 33-year-old Balamurugan died after falling from his bike and being run over by a bus near Prozon...

தொண்டாமுத்தூர் அரசு விடுதி உணவு வீடியோ: தவறான தகவல் என அதிகாரி தெரிவிப்பு

கோவை தொண்டாமுத்தூரில் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் தங்கும் சமூக நல விடுதியில் 48 மாணவர்கள் தங்கியுள்ளனர். சப்பாத்தி முறைய...

கோவையில் சாலை சீரமைப்பு மற்றும் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: அமைச்சர் தலைமையில் ஆய்வுக் கூட்டம்

கோவை ஆர்.எஸ்.புரம் கலையரங்கத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே. சம்பத்குமார் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்...

கோவையில் ‘டெங்கு விழிப்புணர்வு வீதி’ நிகழ்ச்சி

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்.67க்கு உட்பட்ட காந்திபுரம், நியூ சித்தாபுதூர் அன்னபூர்ணா லே-அவுட் பகுதியில் செ...