தொண்டாமுத்தூர் தொகுதி மக்கள் மனசாட்சிபடி நடந்துகொள்ள வேண்டும் என எஸ்.பி.வேலுமணி பேட்டி

இயற்கையாகவே உள்ள குடிநீர் பிரச்சனையில் எதிர்கட்சிகள் மக்களை தூண்டி போராட்டத்தில் ஈடுபட செய்வதாகவும், தொண்டாமுத்தூர் தொகுதி மக்கள் மனசாட்சி படி நடந்துகொள்ள வேண்டும் எனவும் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.

கோவையில் நடைபெற்ற அகில இந்திய அளவிலான மென்பொருள் உருவாக்கத்தின் இறுதி போட்டியின் துவக்கத்தில் கலந்து கொண்ட பின் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறுகையில், பல நூறு ஆண்டுகள் இல்லாத அளவிற்கு தற்போது குடிநீர் பிரச்சனை நிலவி வருகிறது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்துள்ளது. 

இந்த குடிநீர் பிரச்சனையில் எதிர்கட்சிகள் மக்களை தூண்டி சாலைகளில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பொதுமக்கள் தான் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர்' என்றார். 

இதைத்தொடர்ந்து, அமைச்சர் தொகுதியில் குடிநீர் பிரச்சனைக்காக மக்கள் போராடி வருவது தொடர்பாக கேட்டதற்கு, திமுகவினர் மக்களை தூண்டி போராட்டத்தில் ஈடுபட செய்கின்றனர். பல்வேறு திட்டங்களை தான் தொகுதிக்கு செய்து உள்ளேன். எனவே தொண்டாமுத்தூர் தொகுதி மக்கள் அவர்களின் மன சாட்சிபடி நடந்து கொள்ள வேண்டும்.

மேலும், கோவைக்காக மோனோ அல்லது மெட்ரோ ரயில் திட்டங்களை கொண்டு வர வேண்டும் என தமிழக முதலமைச்சரிடம் கோரிக்கை வைத்து உள்ளேன் என்றார். ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் குறித்து கேட்டபோது பதில் அளிக்க மறுத்து விட்டார்.

Newsletter

தென்மேற்கு பருவமழை: கோவை மாவட்ட அணைகளில் நீர்வரத்து அதிகரிப்பு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள...

கோவை மாவட்டத்தில் நேற்று 181.70 மில்லி மீட்டர் மழை பதிவு

கோவை மாவட்டத்தில் நேற்று பெய்த மழையின் விவரங்களை பேரிடர் மேலாண்மை துறை வெளியிட்டுள்ளது. மேட்டுப்பாளையம் பகுதியில் அதிகபட...

ஆர்.எஸ்.புரத்தில் 350 CCTV கேமராக்கள் - குற்ற தடுப்புக்கு போலீஸ் அதிரடி

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் குற்ற சம்பவங்களை தடுக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை மேம்படுத்தவும் 350 கண்காணிப்பு கேமராக்...

பில்லூர்-3 குடிநீர் திட்டத்தில் பராமரிப்பு பணி: கோவை மாநகரில் 4 நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்

கோவை மாநகராட்சியில் பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், இன்று முதல் 10-ந் தேதி வரை பில்லூர்-3 குடி...

“Tamil Nadu Voters Have Sent a Strong Message Against Cash-for-Votes,” Says Kadeswara Subramaniam

Hindu Munnani State President Kadeswara Subramaniam said the Tamil Nadu Assembly election results reflected the strength...

தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பை அளித்துள்ளனர் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழக தேர்தல் முடிவுகள் மக்கள் சக்தியையும் ஜனநாயகத்தின் வலிமையையும் வெளிப்படுத்தியுள்ளதாகவும், தவெக தலைவர் விஜய்க்கு தனத...