கோவை மாநகராட்சியில் சொத்து வரியாக ஒருவருடத்தில் ரூ.130.53 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது என மாநகராட்சி ஆணையர் தகவல்


கோவை மாநகராட்சியில் 5 மண்டலங்களிலிருந்து சொத்து வரியாக கடந்த 01.04.2016 முதல் 31.03.2017 வரை மொத்தம் ரூ.130.53 கோடி (94 சதவிகிதம்) வசூல் செய்யப்பட்டுள்ளது என மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் இதுகுறித்து தெரிவிக்கையில், “கோவை மாநகராட்சியில் 5 மண்டலங்களிலிருந்து சொத்து வரியாக கடந்த 01.04.2016 முதல் 31.03.2017 வரை மொத்தம் ரூ.130.53 கோடி (94 சதவிகிதம்) வசூல் செய்யப்பட்டுள்ளது.

கிழக்கு மண்டலத்தில் ரூ.28.00 கோடியும் (94 சதவிகிதம்), மேற்கு மண்டலத்தில் ரூ.24.06 கோடியும் (95 சதவிகிதம்), தெற்கு மண்டலத்தில் ரூ.15.21 கோடியும் (89 சதவிகிதம்), வடக்கு மண்டலத்தில் ரூ.24.92 கோடியும் (93 சதவிகிதம்), மத்திய மண்டலத்தில் ரூ.38.32 கோடியும் (95 சதவிகிதம்), சொத்து வரியாக ஆகமொத்தம் ரூ.130.53 கோடி (94 சதவிகிதம்) வசூல் செய்யப்பட்டுள்ளது.” 

இவ்வாறு கோவை மாநகராட்சி ஆணையர் மற்றம் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் தெரிவித்தார்.

Newsletter

தென்மேற்கு பருவமழை: கோவை மாவட்ட அணைகளில் நீர்வரத்து அதிகரிப்பு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள...

கோவை மாவட்டத்தில் நேற்று 181.70 மில்லி மீட்டர் மழை பதிவு

கோவை மாவட்டத்தில் நேற்று பெய்த மழையின் விவரங்களை பேரிடர் மேலாண்மை துறை வெளியிட்டுள்ளது. மேட்டுப்பாளையம் பகுதியில் அதிகபட...

ஆர்.எஸ்.புரத்தில் 350 CCTV கேமராக்கள் - குற்ற தடுப்புக்கு போலீஸ் அதிரடி

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் குற்ற சம்பவங்களை தடுக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை மேம்படுத்தவும் 350 கண்காணிப்பு கேமராக்...

பில்லூர்-3 குடிநீர் திட்டத்தில் பராமரிப்பு பணி: கோவை மாநகரில் 4 நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்

கோவை மாநகராட்சியில் பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், இன்று முதல் 10-ந் தேதி வரை பில்லூர்-3 குடி...

“Tamil Nadu Voters Have Sent a Strong Message Against Cash-for-Votes,” Says Kadeswara Subramaniam

Hindu Munnani State President Kadeswara Subramaniam said the Tamil Nadu Assembly election results reflected the strength...

தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பை அளித்துள்ளனர் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழக தேர்தல் முடிவுகள் மக்கள் சக்தியையும் ஜனநாயகத்தின் வலிமையையும் வெளிப்படுத்தியுள்ளதாகவும், தவெக தலைவர் விஜய்க்கு தனத...