இந்தியா கூட்டணிக்கு முழு ஆதரவு தெரிவித்த கோவை இஸ்லாமிய கூட்டமைப்பினர்  -  தமிழக முதல்வருடன் சந்திப்பு..!

வரும் நாடாளுமன்ற தேர்தலில், இந்தியா கூட்டணிக்கு முழு ஆதரவு தெரிவித்து, கோவை இஸ்லாமிய கூட்டமைப்பினர் தமிழக முதல்வர் மு க ஸ்டாலினிடம் ஆதரவு கடிதத்தை வழங்கினர்.


கோவை: எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில், கோவை இஸ்லாமிய கூட்டமைப்பினர் இந்தியா கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து முதல்வரிடம் ஆதரவு கடிதத்தை வழங்கினர்.

இந்திய கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து கடந்த 12 ஆம் தேதி தமிழக முதல்வர் மற்றும் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் கோவை வந்திருந்தார். 

அப்போது அவரை சந்தித்த கோவையை சேர்ந்த இஸ்லாமிய கூட்டமைப்பினர் அவர்களது கோரிக்கையை ஏற்று சிறைவாசிகளை நிபந்தனை இன்றி விடுவித்த முதல்வருக்கு நன்றி கூறி பல்வேறு கோரிக்கைகளையும் முன் வைத்தனர். 



இது குறித்து தெரிவித்துள்ள இஸ்லாமிய கூட்டமைப்பினர்,

ஜனநாயகத்தின் மாண்புகளை காக்கவும், அனைத்து தரப்பு மக்களின் உரிமைகளை காக்கவும், சிறுபான்மை சமூக மக்களின் நலனை மீட்கவும், மதவாத சக்திகளிடம் இருந்து இந்தியாவை மீட்டெடுக்கவும், வரும் நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணிக்கு முழு ஆதரவு அளிக்க உள்ளோம். 

இந்தியாவின் மிக சிறந்த மனிதநேய நடவடிக்கையாக 

2021 ஆம் ஆண்டு, கோவை இஸ்லாமிய கூட்டமைப்பு முன்வைத்த முஸ்லீம் சிறைவாசிகள் விடுதலை கோரிக்கையை ஏற்று, எந்தவித மத பாகுபாடும் இல்லாமல் சிறைவாசிகள் விடுதலை செய்த திமுக அரசின் மனிதநேய நடவடிக்கைக்கு கோவை இஸ்லாமியகூட்டமைப்பு சார்பில் முதல்வருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

மத்தியில் மனிதநேய மக்கள் ஆட்சி அமைய, கோவை கூட்டமைப்பின் முயற்சிகள் மற்றும் களப்பணிகள் குறித்து முதல்வரிடம் தெரிவித்து, 

சிறுபான்மை சமூக மக்களின் பல்வேறு கோரிக்கைகளை முன்வைக்கப்பட்டது. 



அதன்படி, இந்தியா கூட்டணி வேட்பாளர்களான - கோவை தொகுதி திமுக வேட்பாளர்கணபதி ராஜ்குமார் மற்றும் பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் ஈஸ்வரசாமிக்கு ஆதரவு வழங்குவதற்கான, ஆதரவு நிலைப்பாடு கடிதம் முதல்வரிடம் வழங்கப்பட்டது. 

கடிதத்தை பெற்றுக் கொண்ட முதல்வர்,கோவை இஸ்லாமிய கூட்டமைப்பின் ஆதரவு நிலைப்பாட்டுக்கு நன்றிகளை தெரிவித்தார்.

Newsletter

கோவை அதிமுக வேட்பாளர்கள் அண்ணாமலையுடன் சந்திப்பு; வெற்றிக்கு வாழ்த்து தெரிவிப்பு

சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் போட்டியிடும் கோவை தெற்கு மற்றும் சிங்காநல்லூர் தொகுதி அதிமுக வேட்பா...

கோவை விமான நிலையத்தில் முதல்வர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு

கோவையில் திமுக வேட்பாளர் அறிமுக பிரச்சாரத்தில் பங்கேற்க வந்த முதலமைச்சர் ஸ்டாலினை விமான நிலையத்தில் கட்சித் தலைவர்களும்...

முதலமைச்சர் இன்று கோவைக்கு வருகை; செந்தில் பாலாஜி ஏற்பாடுகளை ஆய்வு செய்தார்

தமிழக முதலமைச்சர் M.K. Stalin இன்று கோவையில் நடைபெறும் மாபெரும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வருகிறார். Avinashi சாலையில்...

பெங்களூரு-திருவனந்தபுரம் இடையே Podanur வழியாக வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கம்

சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம், ஏப்ரல் 1 முதல் மே 31 வரை பெங்களூரு-திருவனந்தபுரம் இடையே Podanur வழியாக புதன், வியாழன், வெ...

பெரியநாயக்கன்பாளையம் பட்டத்தரசி அம்மன் திருவிழா - O.K. சின்னராஜ் வழிபாடு

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே நாயக்கனூரில் உள்ள அருள்மிகு பட்டத்தரசி அம்மன் திருக்கோவிலில் பங்குனி திருவிழா இன்று நடைப...

2026 தேர்தல்: தொண்டாமுத்தூர் ரவி பங்கேற்ற மேட்டுப்பாளையம் தொகுதி பிரச்சார திட்டமிடல்

மேட்டுப்பாளையம் தொகுதி அலுவலகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான திமுக வேட்பாளரின் பிரச்சார சுற்றுப்பயண தயாரிப்பு மற்றும...