தண்ணீரில் மிதந்து வந்த இறந்த ஆண் சிசுவின் உடலை அடக்கம் செய்த காங்கேயம் தனியார் அமைப்பினர்

காங்கேயத்தை சேர்ந்த‌ தனியார் சமூக தொண்டு நிறுவனம் ஒன்று தாமாக முன்வந்து இறந்த ஆண் சிசுவின் உடலை அரசு அனுமதி பெற்று சென்னிமலை சாலையில் உள்ள மின் மயானம் எதிர்புறம் உள்ள காட்டில் முழு சம்பரதாயம், சடங்குகளுடன் அடக்கம் செய்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம், காங்கேயம் தாராபுரம் சாலையில் உள்ள பிஏபி கால்வாயில் பிறந்து 3 முதல் 5 நாட்களே ஆன ஆண் குழந்தையின் சிசு உடல் மிதந்து வந்தது. யாருடைய குழந்தை எங்கு இருந்து தண்ணீரில் அடித்து வரப்பட்டது என பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வரும் வேளையில் இறந்த குழந்தையின் உடல் பிரதே பரிசோதனை செய்யப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.

காங்கயம்-தாராபுரம்‌ சாலையில் அமைந்துள்ள பொத்தியம்பாளையம் பிரிவில் உள்ள பிஏபி கால்வாயில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு இறந்த நிலையில் ஆண் சிசு உடல் ஒன்று மிதந்து வந்தது. இதனை தொடர்ந்து காங்கேயம் போலீஸ் இந்த குழந்தை பற்றிய விவரங்களையும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில் காங்கேயத்தை சேர்ந்த‌ (பசியை போக்குவோம் ) தனியார் சமூக தொண்டு நிறுவனம் ஒன்று தாமாக முன்வந்து அந்த ஆண் சிசுவை அரசு அனுமதி பெற்று திருப்பூர் அரசு மருத்துவமனையில் இருந்து காங்கேயம் கொண்டு வந்து காங்கேயம் சென்னிமலை சாலையில் அமைந்துள்ள மின் மயானம் எதிர்புறம் உள்ள காட்டில் முழு சம்பரதாயம், சடங்குகளுடன் புதைத்தனர்.

Newsletter

பெரியநாயக்கன்பாளையம் பட்டத்தரசி அம்மன் திருவிழா - O.K. சின்னராஜ் வழிபாடு

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே நாயக்கனூரில் உள்ள அருள்மிகு பட்டத்தரசி அம்மன் திருக்கோவிலில் பங்குனி திருவிழா இன்று நடைப...

2026 தேர்தல்: தொண்டாமுத்தூர் ரவி பங்கேற்ற மேட்டுப்பாளையம் தொகுதி பிரச்சார திட்டமிடல்

மேட்டுப்பாளையம் தொகுதி அலுவலகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான திமுக வேட்பாளரின் பிரச்சார சுற்றுப்பயண தயாரிப்பு மற்றும...

N.R. கார்த்திகேயன் தலைமையில் திமுக தேர்தல் பணிகள் குறித்த ஆலோசனை

கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்கான ஆக்கபூர்வமான பணிகள் குறித்து திமுக நிர்வாகிகள் கலந்...

தேர்தல் பார்வையாளர்கள் பட்டியல்: Dr மகேந்திரன் பொள்ளாச்சி வால்பாறை தொகுதி நியமனம்

2026 சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் வாக்குச்சாவடிகளில் Dr மகேந்திரன் உள்ளிட்டோர் பார்வையாளர்களாக நியமி...

கோவையில் ஏர் இந்தியா நிறுவனத்தின் விமான சேவைகளை அதிகரிக்க தொழில்துறையினர் வலியுறுத்தல்

கோவையில் ஏர் இந்தியா விமான சேவைகளை அதிகரிக்க கொங்கு குளோபல் போரம் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. தற்போது டெல்லி மற்...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு: மார்ச் 31 நிலவரம்

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் மழை நீர் வரத்தால் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. திருப்ப...