ஹெல்ப் ஏஜ் இந்தியா மற்றும் ஜாமத்தே இஸ்லாமி ஹிந்த் நடத்தும்  முதியவர்களுக்கான இலவச மருத்துவ முகாம்


ஹெல்ப் ஏஜ் இந்தியா மற்றும் ஜாமத்தே இஸ்லாமி ஹிந்த் இணைந்து நடத்தும் முதியவர்களுக்குக்கான இலவச பொது மருத்துவ முகாம் இன்று காலை 9 மணி முதல் 1 மணி வரை கரும்புக்கடை பகுதியில் உள்ள அண்ணா காலனி, டஸ்க் பார்கில் நடைபெறுகிறது. இந்த முகாமில் 60 க்கும் மேற்பட்ட முதியோர்கள் மற்றும் ஊழியர்கள் நிகழ்வில் கலந்து கொண்டனர்.



இம்முகாமில், 50 க்கும் மேற்பட்ட முதியவர்கள் அனைவருக்கும் ரத்த அழுத்தம் மற்றும் உடல் சம்பந்தமான நோய்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டு மருந்துகள் இலவசமாக வழங்கப்பட்டது. மேலும் முழங்கால் வலி, மூட்டு வலி மற்றும் உடம்பு வலி போன்ற பிரச்சனைகளுக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இம்முகாமில் கண்கள் சம்பந்தப்பட்ட குறைபாடுகள் உள்ளவர்களுக்கு கோவையில் உள்ள மோசஸ் கண் மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டனர். மேலும் இதயம் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு அரசு மருத்துவமனைக்கு ஹெல்ப் ஏஜ் இந்தியா மூலம் மருத்துவமனைக்கு அனுமதிக்கப்படுகின்றனர். இம்முகாம் இப்பகுதியில் இனி வாரந்தோறும் வெள்ளிக்கிழமை காலை 11 மணி முதல் 12 மணி வரை செயல்படும். இதுபோன்ற இலவச பொது மருத்துவ முகாம் ஹெல்ப் ஏஜ் இந்தியா 50க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு சென்று உதவி வருகிறது.



இந்த முகாமினை கோவை ஜாமத்தே இஸ்லாமி ஹிந்த் டஸ்க் ஒருங்கிணைப்பாளர் அப்துல் ஹக்கீம் ஏற்பாடு செய்தார். இதில், வெல்பெர் பார்ட்டி ஆஃப் இந்தியா மாநில துணை செயலாளர் ஆஷிக், டஸ்க் பார்க் ஒருங்கிணைப்பாளர் முகம்மது ரபீக் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் கற்பகம் பார்மசி கல்லூரியில் 325 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

கோவை ஒத்தக்கால் மண்டபத்தில் கற்பகம் பார்மசி கல்லூரியின் பட்டமளிப்பு விழா-2026 மே 2 ஆம் தேதி நடைபெற்றது. 242 பி.பார்ம், 6...

காதல் விவகாரத்தில் தற்கொலை குறுஞ்செய்தி அனுப்பிய கோவை கல்லூரி மாணவி மாயம்

கோவையில் தனியார் மருத்துவமனையில் பயிற்சி பெற்று வந்த கேரளாவைச் சேர்ந்த 23 வயதான கல்லூரி மாணவி மாயமான சம்பவம் பரபரப்பை ஏற...

கோவையில் 16 மையங்களில் இன்று நீட் தேர்வு: 7,181 பேர் பங்கேற்பு

கோவை மாவட்டத்தில் இன்று நடைபெறும் நீட் (NEET) நுழைவுத் தேர்வில், 16 மையங்களில் 298 அரசு பள்ளி மாணவர்கள் உட்பட மொத்தம் 7,...

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...

கட்டாஞ்சிமலை: குட்டையில் காருடன் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

கட்டாஞ்சிமலையில் இருந்து தாயனூர் செல்லும் சாலையில் குட்டையில் காருடன் மூழ்கி 25 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து ப...

ரயில்வேயில் பணியிடங்கள் குறைப்பு: கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ரயில்வே துறையில் பணியாளர் குறைப்பை கண்டித்து, கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பா...