கல்லாறு பகுதி மக்களின் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் - பாஜக வேட்பாளர் எல்.முருகன் பிரச்சாரம்

25 ஆண்டுகளில் 10 ஆண்டுகள் 2ஜி ராசாவே பாராளுமன்ற உறுப்பினராக இருந்திருக்கிறார். நீலகிரி பாராளுமன்றத் தொகுதி முழுக்க எந்த குறைகளையும் அவர் தீர்க்கவில்லை என பாஜக வேட்பாளர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.


கோவை: மத்திய அமைச்சரும், நீலகிரி மக்களவை தொகுதி பாஜக வேட்பாளருமான எல்.முருகன், மேட்டுப்பாளையம், ஓடந்துறை ஊராட்சியை சேர்ந்த கல்லாறு பகுதியில் இன்று (ஏப்ரல்.2) தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார்.



அப்போது மக்களிடையே பேசிய அவர், இந்த கல்லாறு கிராமத்தில் இருக்கின்ற ஆதிவாசி காலனி மற்றும் சமத்துவபுரம் ஆகிய சிற்றூர்களுக்கு இடையில், மேட்டுப்பாளையம் முதல் உதகை செல்லும் மலை இரயில் பாதை அமைந்துள்ளது. 150-க்கும் மேல் வீடுகள் அமைந்துள்ள, இந்த இரண்டு சிற்றூர்களையும் இணைக்கும் விதமாக சுரங்க நடைபாதை ஒன்று அமைத்துக் கொடுக்கச் சொல்லி, கடந்த 25 ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வந்திருக்கிறார்கள்.



ஒவ்வொரு பாராளுமன்றத் தொகுதிக்கும், புதிய திட்டப் பணிகள் மேற்கொள்வதற்காக, 2011-12 நிதியாண்டு முதல் தனித்தனியே ஆண்டிற்கு 5 கோடி ரூபாய் மத்திய அரசு நிதி ஒதுக்கி வருகிறது. அந்த நிதியை வைத்து, நம்மை நம்பி வாக்களித்த மக்களுக்கு தேவைப்படுகிற பணிகளை மேற்கொள்வது தான் அடிப்படை தார்மீகம். அவ்வகையில், இந்த ஊர்மக்கள் சொல்வதுபடி பார்த்தால் 25 ஆண்டுகளில், 10 ஆண்டுகள் 2ஜி ராசாவே பாராளுமன்ற உறுப்பினராக இருந்திருக்கிறார். இப்படி, நீலகிரி பாராளுமன்றத் தொகுதி முழுக்கவும், எங்குமே குறைகளும் தீர்க்கப்படவில்லை, வளர்ச்சிப் பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை. மேலும், படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கித் தரும்படி கோரிக்கை வைத்த மக்களிடம், கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றித் தரப்படும் என்று உறுதி அளித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். உடன் பாஜக நிர்வாகிகள் மற்றும் பாஜக தொண்டர்கள் இருந்தனர்.

Newsletter

“முருக கடவுள், பெண்கள் குறித்து அவதூறு: தவெக நிர்வாகி மீது கோவை சைபர் கிரைமில் நாம் தமிழர் கட்சியினர் புகார்

தமிழ் கடவுள் முருகன் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களின் குடும்பப் பெண்கள் குறித்து த.வெ.க நிர்வாகி மைக்கேல் என்பவர் தொட...

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் பெண் கொலை: 17 வயது சிறுவன் கைது

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டில் தனியாக இருந்த சாந்தி (58) என்ற பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில், 17 வயது சிறுவனை ரே...

கோவை வீரபாண்டி பிரிவில் மண் கடத்தி வந்ததாக 4 லாரிகள் பறிமுதல்

சத்தியமங்கலம் பகுதி விவசாயிகளுக்கு அரசு வழங்கிய இலவச மண் அள்ளும் அனுமதியை முறைகேடாகப் பயன்படுத்தி, வீரபாண்டி பிரிவில் பு...

இரவில் மர்ம நபர்கள் தாக்கியதாக ரத்தக் காயங்களுடன் போலீசாரிடம் வாலிபர் புகார்

கோவை ரேஸ் கோர்ஸ் காவல் நிலையம் அருகே கையில் ரத்த காயங்களுடன் கூலித் தொழிலாளி ஒருவர் தன்னை சிலர் தாக்க முயன்றதாக போலீசாரி...

கோவையில் ரயில் மோதி 2 பெண் தூய்மைப் பணியாளர்கள் உயிரிழப்பு

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் ரயில்வே தண்டவாளத்தில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு பெண் ஒப்பந்தப் பணியாளர்கள் ரயில...

கள்ளிமடை துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை

கள்ளிமடை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் காமராஜ்...