கச்சத்தீவு விவகாரத்தில் இதுவரை திமுக சொன்னது எல்லாம் கட்டுக்கதை-கோவையில் அண்ணாமலை பேட்டி

முதலமைச்சராக இருந்த கருணாநிதி அனுமதி இல்லாமல் கச்சத் தீவை மத்திய அரசு கொடுக்க வாய்ப்பே இல்லை. இந்திய இறையாண்மை மீது தி.மு.க விற்கு நம்பிக்கை உள்ளதா? என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.


கோவை: கோவை பீளமேடு, அவிநாசி சாலையில் தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பாக பா.ஜ.க தேர்தல் அலுவலகத்தை மாநில தலைவரும், கோவை வேட்பாளர் அண்ணாமலை இன்று (ஏப்ரல்.1) திறந்து வைத்தார்.பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ உடன் இருந்தார்.

பின்னர் பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், "தி.மு.க இத்தனை ஆண்டு காலமாக காங்கிரஸ் அரசு எங்களை கேட்காமல் கச்சத் தீவை இலங்கைக்கு கொடுத்து விட்டதாக கூறுவது கட்டுக் கதை. தி.மு.க வினர் தமிழக மக்களை வஞ்சித்து இருக்கிறார்கள். அப்போதைய மத்திய அமைச்சர் கேவல்சிங் கலைஞர் கருணாநிதியை சந்தித்து அனுமதி பெற்ற பின்னரே, கச்சத் தீவு கொடுக்கப்பட்டு உள்ளது. கச்சத் தீவு இலங்கைக்கு கொடுக்கப்பட்டதில் கருணாநிதியின் முடிவும் இருந்தது.

கருணாநிதி கச்சத் தீவை கொடுக்க சம்மதம் தெரிவித்தது மட்டுமின்றி சிறிய அளவில் போராட்டம் நடத்தி கொள்வதாக அமைச்சர் கேவல் சிங்கிடம் பேசி உள்ளார். முதலமைச்சராக இருந்த கருணாநிதி அனுமதி இல்லாமல் கச்சத் தீவை மத்திய அரசு கொடுக்க வாய்ப்பே இல்லை. இந்திய இறையாண்மை மீது தி.மு.க விற்கு நம்பிக்கை உள்ளதா? ஆழ் கடலில் நடக்கும் அனைத்து பிரச்சினைகளுக்கும் காரணம் தி.மு.க தான்.

தமிழக பா.ஜ.க கச்சத் தீவை மீட்க வேண்டும் என கோரிக்கையை வைத்து உள்ளோம். தமிழக கடல் பகுதியில் மீன் வளம் குறைவாக இருப்பதால் தமிழக மீனவர்கள் சர்வதேச எல்லை அருகே சென்றாலே இலங்கை அரசு கைது செய்கிறது. தமிழக மீனவர்கள் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண கச்சத் தீவு திரும்ப பெற வேண்டும். கச்சத் தீவை தாரை வார்த்தது காங்கிரசும், தி.மு.க வும் சேர்ந்து செய்த சதி. கச்சத் தீவை மீட்கும் விவகாரத்தில் இந்திய அரசு நல்ல முடிவு எடுக்கும். கச்சத் தீவு மீட்பு பா.ஜ.க வின் தேர்தல் அறிக்கையில் இடம் பெறும். வங்கதேசத்துடன் உள்ள எல்லை குழப்பங்களை தீர்க்க சில பகுதிகள் கொடுக்கப்பட்டது.

வங்கதேச பிரச்சனையும், கச்சத்தீவு பிரச்சனையும் ஒன்றல்ல. சரித்திரம் தெரியாமல் மல்லிகர்ஜூன கார்கே பேசுகிறார். கச்சத் தீவை இலங்கைக்கு கொடுத்ததில் இந்தியாவிற்கு ஒரு பைசா கூட இலாபம் இல்லை.கச்சத் தீவை தாரைவார்த்ததற்காக காங்கிரஸ் கட்சி மன்னிப்பு கேட்க வேண்டும். காங்கிரஸ் மற்றும் தி.மு.க மன்னிப்பு பிரச்சாரம் செய்ய வேண்டும். முதலமைச்சர் ஸ்டாலினுக்கு செலக்டிவ் அம்னிசியா உள்ளது.

நான் பிடித்த முயலுக்கு 3 கால் என பேசுவது முதலமைச்சர் பொறுப்பிற்கு அழகல்ல.கடந்த 33 மாதங்களில் தி.மு.க அரசு செய்த சாதனை என்ன? பிரதமர் மோடி 10 இலட்சம் 76 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை தமிழகத்திற்கு தந்து உள்ளார். அதிக அளவிலான அரசு மருத்துவக் கல்லூரிகளை பிரதமர் தந்து உள்ளார். நாங்கள் கேட்கும் கேள்விக்கு முதலமைச்சர் பதில் சொல்ல வேண்டும். அன்று நாடாளுமன்றத்தில் இருந்து தி.மு.க வினர் ஏன் வெளிநடப்பு செய்தனர்?முதலமைச்சர் தான் திசை திருப்ப முயல்கிறார். கச்சத் தீவை இலங்கை கொடுப்பது பற்றி அன்றைய பிரதமர் இந்திராகாந்தி, ஒரு மத்திய அமைச்சர், முதலமைச்சர் கருணாநிதி ஆகியோருக்கு மட்டும் தான் தெரியும்.

கச்சத் தீவு மதிப்பற்றது என்பது காங்கிரஸ் நிலைப்பாடாக இருந்து உள்ளது. மீனவர்கள் நலனுக்காக இந்த பிரச்சனையை தீர்க்க நாங்கள் முயல்கிறோம். இலங்கை முழுவதும் இந்தியா உடன் நட்புறவில் உள்ளது. இலங்கைக்கு நிதியுதவி செய்வது தொப்புள் கொடி உறவு என்பதால் தான். இதற்கும் தேர்தலுக்கும் சம்மந்தம் இல்லை. சீனாவிற்கு நிலம் கொடுத்தது எல்லாம் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் தான். நாங்கள்ஒவ்வொரு இடமாக மீட்டு கொண்டு உள்ளோம். பா.ஜ.க அதிகாரபூர்வமாக எல்லை பகுதியை சீனாவிற்கு தரவில்லை. திசை மாற்றுவதற்காக கார்கே பேசுகிறார். இலங்கை தமிழருக்கு குடியுரிமை உள்ளது. 11 ஆண்டுகள் வாழ்ந்தவர்களுக்கு குடியுரிமை தந்து உள்ளோம். எதிர் கட்சிகளை ஒழிப்பேன் என மோடி சொல்லவில்லை. காங்கிரஸ் கட்சி ஆட்சி இருக்க கூடாது என்பது தான் எங்கள் நோக்கம்” எனத் தெரிவித்தார்.

Newsletter

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் புதிய Pre-Incubation Centre மற்றும் Startup Studio தொடக்கம்

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தின் 'கற்பகம் புத்தாக்கம் மற்றும் இன்குபேஷன் கவுன்சில்' (KIIC), தனது புதிய 'Pre-Incubatio...

2016 ஆனைமலை இளைஞர் கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை: கோவை மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு

ஆனைமலை காவல் நிலையத்தில் குற்ற எண் 369/2016-ன் கீழ் பதிவான கொலை வழக்கில், மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த பாப்பான் @ சுதானந்தம...

ஜெம் வீரமணி வழக்கு: கோவை காவல் ஆணையர் உள்பட 2 ஐபிஎஸ் அதிகாரிகள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

ஜெம் வீரமணி வழக்கு தொடர்பாக கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் மற்றும் கூடுதல் ஆணையர் அருண் ஆகிய இரு மூத்த ஐபிஎஸ் அதிகா...

கோவை–போத்தனூர் இடையே பராமரிப்பு பணி: செப்.25, 26-ல் இரு மெமு ரயில் சேவையில் மாற்றம்

செப்டம்பர் 25 மற்றும் 26, 2026 ஆகிய தேதிகளில் கோவை-போத்தனூர் ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெற...

கோவையில் பார் ஊழியரை கத்தியால் மிரட்டி பணம் பறித்த ரவுடி கைது

கோவை புலியகுளம் ரோடு பங்கஜாமில் ரோடு பகுதியில் உள்ள சன்ரிச் 11 - 11 பாரில் ஊழியர் பாண்டியராஜனிடம் இலவச மதுபானம் கேட்டு ம...

கோவை தடாகம் சாலையில் ஆம்புலன்ஸ் பணிமனையில் தீ விபத்து

கோவை தடாகம் சாலையில் உள்ள கோயில்மேடு அருகே ஆம்புலன்ஸ் பணிமனையில் திடீரென தீ பரவியது. இதனால் கரும்புகை மேகங்களாக சுற்றுவட...