இந்த வண்டி தான் டெல்லி செல்லும் ஒரே வண்டி, அதற்கு நான் தான் ஒரே டிரைவர் - மருதமலையில் பாஜக வேட்பாளர் அண்ணாமலை பிரச்சாரம்

இந்தியாவின் அடுத்தக்கட்ட வளர்ச்சிக்கு பிரதமர் மோடியை மீண்டும் அமர வைக்க வேண்டும். கம்யூனிஸ்ட் எம்பியால் கோவை வளர்ச்சி பின் நோக்கி சென்றுள்ளது. 1440 கோடி மதிப்பிலான ஸ்மாட் சிட்டியை பார்க்க ஆள் இல்லை என்று பாஜக வேட்பாளர் அண்ணாமலை பேசினார்.


கோவை: கோவை பாராளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் அண்ணாமலை மருதமலை முருகன் கோவில் அடிவாரத்தில் சாமி தரிசனம் செய்துவிட்டு இன்று (ஏப்.1) அவரது பிரச்சாரத்தை துவக்கினார்.



இதனை தொடர்ந்து மக்கள் மத்தியில் பேசிய அண்ணாமலை, இது ஒரு வித்தியாசமான தேர்தல். 10 ஆண்டுகளாக பிரதமரின் தொலை நோக்கு பார்வை எழுச்சியை காட்டுகிறது. பிரதமர் 400 எம்பிகளை தாண்டி அமர வேண்டும். 70 ஆண்டுகளாக அரசியல் காரணங்களுக்காக எடுக்கப்படாத விஷயங்கள் இந்த 5 ஆண்டுகளில் எடுக்கப்படும்.

இந்தியாவின் அடுத்தக்கட்ட வளர்ச்சிக்கு பிரதமர் மோடியை மீண்டும் அமர வைக்க வேண்டும். பிரதமருக்கு போட்டியாளர்கள் இல்லை. கோவையை பொருத்தவரை 20 ஆண்டுகளாக வளர்ச்சி தொய்வில் இருக்கிறோம். கம்யூனிஸ்ட் எம்பியால் கோவை வளர்ச்சி பின் நோக்கி சென்றுள்ளது. 1440 கோடி மதிப்பிலான ஸ்மாட் சிட்டியை பார்க்க ஆள் இல்லை. உங்கள் தம்பி அண்ணாமலை அன்பை கோருகிறேன். பல்வேறு கட்சியினர் அனைவரும் ஒரு சேர வந்துள்ளார்கள். ஒவ்வொருவர் வீட்டிற்கும் செல்ல வேண்டிய கடமை உள்ளது.

இந்த வண்டி தான் டெல்லி போகின்ற வண்டி. அண்ணாமலை என்கின்ற ஒரே டிரைவர் தான் இருக்கிறேன். வேறு யாரும் இல்லை. கோவை IOB காலனியில் குப்பை சுத்திகரிப்பு நிலையம் வேண்டும் என்று நீண்ட நாள் கோரிக்கை உள்ளது. திமுக ஆட்சியில் குப்பைகளை தூய்மை செய்வதில் நாம் கீழே சென்று கொண்டிருக்கிறோம். குப்பை மேலாண்மைக்கு உத்திரவாதம் அளிக்கிறோம் என தெரிவித்தார்.



தொடர்ந்து 4 வயது சிறுவன் சர்வேஷ், கிருஷ்ணர் வேடம் அணிந்து மோடி பதாகையுடன் அண்ணாமலையை மாமா என்று அழைத்தார். அந்த சிறுவனை அண்ணாமலை அழைத்து கைகுலுக்கி பாராட்டினார்.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 80-வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 15.08.2026 அன்று இந்தியாவின் 80-வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. கல்விக...

கோவை மாநகராட்சி சுதந்திர தின விழா: 193 பேருக்கு பாராட்டு, கிழக்கு மண்டலத்திற்கு டெங்கு தடுப்பு விருது

கோவை மாநகராட்சி சுதந்திர தின விழாவில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் தேசியக்கொடி ஏற்றி, 25 ஆண்டுகள் பணியாற்றியோர் உள்ளிட்...

“முருக கடவுள், பெண்கள் குறித்து அவதூறு: தவெக நிர்வாகி மீது கோவை சைபர் கிரைமில் நாம் தமிழர் கட்சியினர் புகார்

தமிழ் கடவுள் முருகன் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களின் குடும்பப் பெண்கள் குறித்து த.வெ.க நிர்வாகி மைக்கேல் என்பவர் தொட...

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் பெண் கொலை: 17 வயது சிறுவன் கைது

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டில் தனியாக இருந்த சாந்தி (58) என்ற பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில், 17 வயது சிறுவனை ரே...

கோவை வீரபாண்டி பிரிவில் மண் கடத்தி வந்ததாக 4 லாரிகள் பறிமுதல்

சத்தியமங்கலம் பகுதி விவசாயிகளுக்கு அரசு வழங்கிய இலவச மண் அள்ளும் அனுமதியை முறைகேடாகப் பயன்படுத்தி, வீரபாண்டி பிரிவில் பு...

இரவில் மர்ம நபர்கள் தாக்கியதாக ரத்தக் காயங்களுடன் போலீசாரிடம் வாலிபர் புகார்

கோவை ரேஸ் கோர்ஸ் காவல் நிலையம் அருகே கையில் ரத்த காயங்களுடன் கூலித் தொழிலாளி ஒருவர் தன்னை சிலர் தாக்க முயன்றதாக போலீசாரி...