ஊழல் குடும்ப ஆட்சி நடத்தும் திமுக, கெஜ்ரிவாலை ஆதரிப்பதில் வியப்பில்லை - வானதி சீனிவாசன் விமர்சனம்

காவல்துறையை, தங்களது ஏவல் துறையாகப் பயன்படுத்தி வரும் முதலமைச்சர் ஸ்டாலின், அமலாக்கத்துறை, வருமானத்துறை செயல்பாடுகள் பற்றி பேசுவது வேடிக்கையாக இருக்கிறது என சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.


கோவை: திமுக அரசை விமர்சித்து, முதலமைச்சர் ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை விமர்சித்து சமூக ஊடகங்களில் பதிவிட்டால் அவர்களை கைது செய்ய குஜராத் வரை விமானத்தில் செல்கிறது தமிழக காவல்துறை. நள்ளிரவில் வீடு புகுந்து கைது செய்கிறது. இப்படி காவல்துறையை, தங்களது ஏவல் துறையாகப் பயன்படுத்தி வரும் முதலமைச்சர் ஸ்டாலின், அமலாக்கத்துறை, வருமானத்துறை செயல்பாடுகள் பற்றி பேசுவது வேடிக்கையாக இருக்கிறது.

அமலாக்கத்துறை, வருமானத்துறை நடவடிக்கைகள் அனைத்தும் சட்டத்தின் அடிப்படையில் எடுக்கப்படுகிறது. ஆதாரங்களின் அடிப்படையில் நீதிமன்றங்கள் தான் கைது போன்ற அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கின்றன. ஆதாரங்கள் இல்லாமல் இரு மாநிலங்களில் ஆட்சியில் இருக்கும் ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும், டெல்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால், தெலுங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகரராவின் மகள் கவிதா. ஜார்க்கண்ட் முதலமைச்சராக இருந்த ஹேமந்த் சோரன் உள்ளிட்டோரை கைது செய்ய முடியாது.

இந்தியாவில் நீதித்துறை, உலகின் எந்தநாடுகளிலும் இல்லாத அளவுக்கு சுதந்திரமாகவும், அரசின் தலையீடு இல்லாமல் இயங்க கூடியது. கெஜ்ரிவால் கைது பற்றி அவதூறு பரப்புபவர்கள் இந்திய நீதித்துறையை நோக்கி கைகாட்டுகிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். கெஜ்ரிவால் சிறைக்குச் சென்றுள்ளதால் அவரது மனைவி முதலமைச்சராக தயாராகி வருகிறார். அதாவது திமுகவைப் பின்பற்றி ஊழல் செய்த கெஜ்ரிவால் அடுத்து குடும்ப ஆட்சிக்கும் தயாராகி விட்டார். எனவே, ஊழல், குடும்ப ஆட்சி நடத்தும் திமுக, கெஜ்ரிவாலை ஆதரிப்பதில் வியப்பில்லை. தனிப்பெரும்பான்மையுடன் 10 ஆண்டுகள் தொடர்ந்து அதிகாரத்தில் இருக்கும் பாஜக அரசும், பிரதமர் மோடியும் ஜனநாயகப் பாதையில் இருந்து ஒரு அங்குலம்கூட நழுவி விடக்கூடாது என்பதில் உறுதியாக உள்ளனர்.

பிரதமர் மோடி ஆட்சியை குறை கூறுபவர்கள், இந்திரா காந்தி தனிப்பெரும்பான்மையுடன் இருந்தபோது என்ன நடந்தது என்பதையும், நெருக்கடி நிலையை பிரகடனம் செய்து, அரசியலமைப்பு சட்டத்தையே முடக்கியவர். எனவே, மத்திய அரசு மீது திரும்ப திரும்ப அவதூறு பரப்புவதை முதலமைச்சர் ஸ்டாலின் நிறுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு எக்ஸ் தளத்தில் வானதி சீனிவாசன் பதிவிட்டுள்ளார்.

Newsletter

தேசிய அளவிலான சிறிய ரக ரேஸ் கார் பந்தயத்தில் கோவை ஈ.ஏ.எஸ்.ஏ., கல்லூரி மாணவர்கள் அணி இரண்டாமிடம்

கோவை நவக்கரையில் உள்ள ஈ.ஏ.எஸ்.ஏ., என்ஜினீயரிங் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மெக்கானிக்கல் என்ஜினீயரிங் இரண்டாமாண்டு மாண...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் செப்டம்பர் 21ஆம் தேதி நிலவரப்படி 45.77 அடியாக உயர்ந்துள்ளது. 90 அடி க...

கோவையில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் செப்டம்பர் 21 நிலவரப்படி ஆனைமலையை அடுத்த ஆழியாறு அணையில் நீர்மட்டம் 63.3 அடியாகவும், பொள்ளாச்சியை அடுத...

கோவை பீளமேடு கவுன்சிலர் பள்ளி உணவின் தரம் மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம், வார்டு எண் 27, பீளமேடு பகுதியில் செப்டம்பர் 21, 2026 அன்று வார்டு கவுன்சிலர் அம்பிகா தனப...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (22.09.2026) மின்தடை

கோவை ஆர்.எஸ்.புரம் துணைமின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக 22.09.2026 அன்று காலை 9 மணி முதல் மாலை...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் செப்டம்பர் 22, 2026 செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மேயர் ரங்கநாயகி தலைமையில் மக்க...