வணிகர்களை காக்க அரசு தனி சட்டம் இயற்ற வேண்டும்- திருப்பூரில் விக்கிரமராஜா பேட்டி

வணிகர் சங்கங்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என்றால் வரும் ஏப்ரல் 3ம் தேதி முதல் 19ம் தேதி வரை கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு வணிகர் சங்ககங்களின் பேரமைப்பின் மாநிலத் தலைவர் விக்கிரமராஜா தெரிவித்துள்ளார்.


திருப்பூர்: வணிகர் சங்கங்களின் மாநில மாநாடு வரும் ஐந்தாம் தேதி மதுரையில் நடக்கிறது. இதனை ஒட்டி வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநிலத் தலைவர் விக்கிரம ராஜா மாவட்டம் வாரியாக வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பு பிரதிநிதிகளை சந்தித்து வருகிறார். இதன் ஒரு பகுதியாக இன்று திருப்பூரில் வணிகர் சங்க கூட்டமைப்பு பிரதிநிதிகளை சந்தித்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், வரும் மே 5ம் தேதி வணிகர் தினத்தை முன்னிட்டு மாநில மாநாடு மதுரையில் நடக்கிறது. இது விடுதலை முழக்க மாநாடாக நடக்கிறது. இதற்காக தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வருகிறேன். தற்போது திருப்பூரில் வணிகர் சங்க நிர்வாகிகளை சந்தித்து பேசி உள்ளேன். ஆன்லைன், கார்பரேட் கம்பெனைகளால் எங்களுக்கு அதிக இடர்பாடு, அதுமட்டுமின்றி ஜி எஸ் டி, வரி உயர்வு உள்ளிட்டவைகளால் நாங்கள் பாதிக்கபட்டுள்ளோம். கார்பரேட் கம்பெனி, ஆன்லைன் வர்த்தகத்தில் இருந்து வணிகர்களை காக்க அரசு தனி சட்டம் இயற்ற வேண்டும்.



தேர்தல் ஆணையத்திடம் எங்கள் இடர்பாடுகளை தெரிவித்துள்ளோம். தேர்தல் நடத்தை விதிமுறைகலால் வணிகர்கள், வியாரிகள், பொதுமக்கள் ஆகியோரிடம் இருந்து பணம் மட்டுமே பறிக்க படுகிறது. அரசியல் கட்சி பணம் பாதுக்கப்படுகிறது. கடைசி இரண்டு தினங்களில் மட்டும் பறக்கும் படை அதிகாரிகள் செயல்படாமல் இருப்பார்கள். இந்த நிலை மாற வேண்டும். வரும் செவ்வாய் கிழமை தலைமை தேர்தல் ஆணையரை சந்தித்தது மனு கொடுக்க உள்ளோம். எங்களது கோரிக்கை நிறைவேறவில்லை என்றால் தேர்தல் நாளான ஏப்ரல் 19ம் தேதி வரை தமிழகம் முழுவதும் அனைத்து மளிகை கடைகள் அடைத்து போராட்டம் நடத்தட்படும் என்றார்.

Newsletter

கோவை அதிமுக வேட்பாளர்கள் அண்ணாமலையுடன் சந்திப்பு; வெற்றிக்கு வாழ்த்து தெரிவிப்பு

சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் போட்டியிடும் கோவை தெற்கு மற்றும் சிங்காநல்லூர் தொகுதி அதிமுக வேட்பா...

கோவை விமான நிலையத்தில் முதல்வர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு

கோவையில் திமுக வேட்பாளர் அறிமுக பிரச்சாரத்தில் பங்கேற்க வந்த முதலமைச்சர் ஸ்டாலினை விமான நிலையத்தில் கட்சித் தலைவர்களும்...

முதலமைச்சர் இன்று கோவைக்கு வருகை; செந்தில் பாலாஜி ஏற்பாடுகளை ஆய்வு செய்தார்

தமிழக முதலமைச்சர் M.K. Stalin இன்று கோவையில் நடைபெறும் மாபெரும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வருகிறார். Avinashi சாலையில்...

பெங்களூரு-திருவனந்தபுரம் இடையே Podanur வழியாக வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கம்

சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம், ஏப்ரல் 1 முதல் மே 31 வரை பெங்களூரு-திருவனந்தபுரம் இடையே Podanur வழியாக புதன், வியாழன், வெ...

பெரியநாயக்கன்பாளையம் பட்டத்தரசி அம்மன் திருவிழா - O.K. சின்னராஜ் வழிபாடு

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே நாயக்கனூரில் உள்ள அருள்மிகு பட்டத்தரசி அம்மன் திருக்கோவிலில் பங்குனி திருவிழா இன்று நடைப...

2026 தேர்தல்: தொண்டாமுத்தூர் ரவி பங்கேற்ற மேட்டுப்பாளையம் தொகுதி பிரச்சார திட்டமிடல்

மேட்டுப்பாளையம் தொகுதி அலுவலகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான திமுக வேட்பாளரின் பிரச்சார சுற்றுப்பயண தயாரிப்பு மற்றும...