கோவை பாஜக வேட்பாளர் அண்ணாமலையின் வேட்பு மனு ஏற்பு..!

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சியரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான கிராந்தி குமார் பாடி மற்றும் அதிகாரிகள் தலைமையில் வேட்பாளர்கள், வழக்கறிஞர்கள் முன்னிலையில், பரிசீலனை நடைபெற்றது.


கோவை: நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு வேட்பு மனு தாக்கல் செய்ய நேற்றைய தினம் இறுதி நாளாக இருந்த நிலையில்,தொடர்ந்து இன்று (மார்ச்.28) பெறப்பட்ட வேட்புமனுக்களை அதிகாரிகள் பரிசீலித்து வருகின்றனர்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சியரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான கிராந்தி குமார் பாடி மற்றும் அதிகாரிகள் தலைமையில் வேட்பாளர்கள், வழக்கறிஞர்கள் முன்னிலையில், இந்த பரிசீலனை நடைபெற்றது.

இதில், அண்ணாமலை தரப்பில் இரண்டு வேட்பு மனுக்கள் அளிக்கப்பட்டு இருந்த நிலையில், ஒரு வேட்பு மனு தள்ளுபடி செய்யப்பட்டது. 

இந்த நிலையில், மற்றொரு வேட்பு மனுவில் பிரமாண பத்திரத்தில், அண்ணாமலையின் ஆவணங்கள் முறையாக தாக்கல் செய்யப்படவில்லை,நம்பர்:26 விண்ணப்பத்தில் வேட்பாளரின் குற்றப்பின்னணி வரிசை படுத்தவில்லை எனவும்வேட்பாளரின் வாக்கு செலுத்தும் இடமானது முறையாக குறிப்பிடவில்லை என பல்வேறு கட்சியினர் குற்றம் சாட்டினர்.

அதிமுக, திமுக, நாம் தமிழர் கட்சி சார்ந்த வழக்கறிஞர்கள் தேர்தல் நடத்தும் அதிகாரியான கிராந்தி குமார் பாடி முன்னிலையில் தேர்தல் ஆணையத்தின் கையேடு புத்தகத்தை மேற்கோள் காட்டி, அண்ணாமலையின் வேட்பு மனு பூர்த்தி செய்த விதத்தில் உள்ள குறைகளை எடுத்துக்காட்டினர்.



எனவே, அண்ணாமலையின் வேட்பு மனுவை நிறுத்தி வைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதனால் அறையில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. 

இதனை தொடர்ந்து, இந்த குற்றச்சாட்டுகளை பிழைகளாக ஏற்றுக் கொள்ள முடியாது என தேர்தல் நடத்தும் அதிகாரி தெரிவித்து அண்ணாமலையின் வேட்பு மனு ஏற்கப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

Newsletter

கோவையில் 283 ஆக்கிரமிப்புகள் அகற்றம்; அனுமதியற்ற விளம்பரப் பலகைகளுக்கு கடும் நடவடிக்கை

கோயம்புத்தூர் மாநகராட்சி ஜூலை 23 முதல் 283 ஆக்கிரமிப்புகளையும், 46 அனுமதியற்ற விளம்பரப் பலகைகளையும் அகற்றியுள்ளது. மேற்க...

மேட்டுப்பாளையம் ஓடந்துறையில் மர்ம நபர்களால் மூன்று இருசக்கர வாகனங்கள் தீ வைப்பு - பொதுமக்கள் பீதி

மேட்டுப்பாளையம் அருகே ஓடந்துறை இயேசு துரை சந்து பகுதியில் இரண்டு நாட்களில் மூன்று இருசக்கர வாகனங்கள் அடுத்தடுத்து மர்ம ந...

கடன் தள்ளுபடி செய்யும் வரை வங்கிக் கடன் கட்ட மறுப்பு: கோவையில் விவசாயிகள் சங்கம் தீர்மானம்

சோமையனூரில் ஜாதி, மதம், கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் நடத்திய ஆர்ப்பாட்டத்தில், தேர்தல் வாக்குறுதிப்படி முழுமைய...

துடியலூர் பகுதியில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை தவிர்க்க விழிப்புணர்வு பேரணி

Coimbatore மாநகராட்சி வடக்கு மண்டலத்தின் துடியலூர் பகுதியில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு பதிலாக மாற்ற...

சின்ன தடாகத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்: நீர்நிலைகளை தூர்வார கோரிக்கை

கோவை சின்ன தடாகம் பேருந்து நிலையம் அருகே கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் முன்னாள் மாணவிகள் சந்திப்பு

கோவை ஆவாரம்பாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் முன்னாள் மாணவிகள் சந்திப்பு நடைபெற்றது. பல...