ஈரோடு எம்.பி தற்கொலைக்கு கூறப்படும் காரணத்தை நான் ஏற்க மாட்டேன் - கோவையில் வைகோ கண்ணீர் மல்க பேட்டி

எம்.பி சீட் கிடைக்காததால் தற்கொலைக்கு முயன்றார் என்பது உண்மையல்ல. பலர் அவ்வாறு கூறி வந்தாலும். இதனை நான் ஒரு சதவிகிதம் கூட ஏற்க மாட்டேன் என்று கணேசமூர்த்தி இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்காக கோவை வந்த வைகோ தெரிவித்தார்.


கோவை: மதிமுக நிறுவனத் தலைவர்களில் ஒருவரும்,ஈரோடு எம்.பி. கணேசமூா்த்தி (77) இன்று, வியாழக்கிழமை அதிகாலை கோவை மருத்துவமனையில் காலமானார். கணேசமூர்த்தியின் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

இவர் ஈரோடு பெரியார் நகரில் உள்ள தனது இல்லத்தில் கடந்த ஞாயிறன்று (மார்ச் 24) காலை திடீரென தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில், உடல்நிலை பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தவர் இன்று காலை உயிரிழந்தார்.

அவரது இறுதி சடங்கில் பங்கேற்க இன்று கோவை விமான நிலையத்திற்கு வந்திருந்த மதிமுக பொதுச் செயலாளர், வைகோ செய்தியாளர்களை சந்தித்து நிகழ்ச்சி பட பேசினார்.

அப்போது பேசிய அவர், திமுக உறுப்பினராக வேண்டா வெறுப்பில் சேர்ந்து, நாடாளுமன்ற உறுப்பினரானார் கணேசமூர்த்தி. இப்போது திமுக உறுப்பினராக இருந்து கொண்டு வேறு பொறுப்பிற்கு வரமுடியாது என்று கூறியவர் அவர்.

சட்டமன்ற தேர்தலில் உரிய இடம் கொடுக்கப்படும் என அவரிடம் தெரிவிக்கபட்டு இருந்தது. அப்பொழுது, ஒரு வேளை இரு சீட் கொடுத்தால் பரிசீலனை செய்யுங்கள் என்று என்னிடம் கூறி இருந்தார். ஆனால், ஒன்று மட்டும் கொடுத்தால் துரை நிற்கட்டும் என்று சொல்லி இருந்தார். 

உயிருக்கு உயிராக 50 ஆண்டாக பழகி இருக்கின்றோம். கொள்கையும், லட்சியமும் பெரிது என வாழ்ந்தவர் கனேசமூர்த்தி. ஆனால் சில நாட்களாகவே அவர் மிகவும் மன அழுத்தத்தில் இருப்பதாக என்னிடம் ஈரோடு மாவட்ட கட்சி நிர்வாகிகள் சொன்னார்கள். 

இன்னும் பல ஆண்டுகள் வாழ்ந்து இருக்க வேண்டியவர், இந்த முடிவிற்கு வருவார் என நான் கனவிலும் நினைக்கவில்லை. பெரிய இடி தலையில் விழுந்தததை போல இருக்கின்றது. அவர் இறந்து விட்டார் என்ற செய்தியை விட மருந்து குடித்து விட்டார் என்ற செய்தியே எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மருத்து குடித்து விட்டார் என்ற போதே எனக்கு உயிர் போய்விட்டது, என்று கூறி வைகோ கதறி அழுதார். 

எம்.பி.சீட் கிடைக்காததால் இந்த முடிவிற்கு அவர் வந்தார் என்பது உண்மையல்ல, பலர் அவ்வாறு கூறி வந்தாலும், இதனை நான் ஒரு சதவிகிதம் கூட ஏற்க மாட்டேன், என்றார்.

Newsletter

திமுக தேர்தல் அறிக்கையில் மின்சார கோரிக்கைகள் இல்லை: மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு ஏமாற்றம்

திமுக தேர்தல் அறிக்கையில் மின்கட்டணம் குறைப்பு, நிலை கட்டணம் குறைப்பு உள்ளிட்ட மின்சாரத்துறை கோரிக்கைகள் இடம்பெறாதது மறு...

சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம்: அதிமுக தேர்தல் அறிக்கையை தொழில்துறை வரவேற்பு

Coimbatore: சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம் வழங்குவது தொடர்பான அதிமுக தேர்தல் அறிக்கை...

சாதனைகளை கூறி வெற்றி பெறுவேன்; யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை - செந்தில் பாலாஜி

கோவை தெற்கு தொகுதியில் DMK வேட்பாளர் செந்தில் பாலாஜி தேர்தல் பணி குழு அலுவலகத்தை காந்திபுரத்தில் திறந்து வைத்தார். எதிரண...

கோவையை உலகத் தர நகரமாக மாற்ற கருத்தரங்கம்

கோவை நவஇந்தியாவில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் “கோயம்புத்தூரை உலகத் தர நகரமாக மாற்றுவோம்” கருத்தரங...

மகாவீர் ஜெயந்தி: மார்ச் 31ல் இறைச்சி விற்பனைக்கு தடை - கோயம்புத்தூர் மாநகராட்சி அறிவிப்பு

மகாவீர் ஜெயந்தி விழாவையொட்டி மார்ச் 31, 2026 அன்று கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதியில் அனைத்து விதமான இறைச்சி விற்பனை மற்...

கவுண்டம்பாளையம் தொகுதியில் NTK வேட்பாளர் கலாமணி ஜெகநாதன் வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக கலாமணி ஜெகநாதன் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தா...