காங்கேயம் அருகே கோயக்காடு கருப்பண்ணசாமி கோவிலில் மகா கும்பாபிஷேக பெருவிழா

இன்று காலை மங்கள இசையுடன் நான்காம் கால யாக பூஜை நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து திருக்கோயில் வலம் வந்து கோபுரத்தின் மீது புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் 3000க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.


திருப்பூர்: காங்கேயம் அடுத்த நத்தக்கடையூர் அருகே உள்ள அத்தான் வலசு மற்றும் குட்டறை பகுதியில் அருள்பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ விநாயகர் கன்னிமார் கோயக்காடு கருப்பண்ணசாமி திருக்கோயில் மற்றும் பரிவார மூர்த்திகள் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக திருக்குட நன்னீராட்டு திருவிழா இன்று காலை 10 மணிக்கு நடைபெற்றது.

முன்னதாக 18ம் தேதி திங்கட்கிழமை மங்கள இசை உடன் கணபதி பூஜை, கணபதி யாகம் நடைபெற்றது. அன்று மாலை முளைபாலி பூஜை, திருகாப்புக்கட்டுதல், முதற்காலயாக பூஜை நடைபெற்றது. இதை அடுத்து 19ஆம் தேதி செவ்வாய்க்கிழமை இரண்டாம் கால யாக பூஜை புண்ணியாக வாஜனம், புதிய மூர்த்தி கோபுர கலசம் அபிஷேகம், மண்டல அர்ச்சனை, வேதிகை பூஜை, துவார பூஜை, யாகத்தை தொடர்ந்து தீபாராதனை நடைபெற்றது.

அன்று மாலை விஷேசந்தி புண்யாக வாஜனம் திருக்கோவில் கோபுரம் கண் திறப்பு, கருவறை தீபம் ஏற்றுதல், பாவனா அபிஷேகம், மூன்றாம் கால யாக பூஜை கோபுர கலசம் வைத்தல், திரவ்யாகுதி பூர்ண குதி பூஜை தொடர்ந்து புதிய மூர்த்தி சிலையை கருவறையில் நிலைநாட்டுதல் யாந்திரஸ் தாபனம் என் வகை மருந்து சாத்துதல் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து 20ம் தேதி இன்று காலை மங்கல இசையுடன் நான்காம் கால யாக பூஜை புண்ணியாக வாஜனம் புதிய மூர்த்தி சிலைகளுக்கு திருகாப்பு கட்டுதல், நாடிசந்தனம், உயிர் சக்தி கொடுத்தல், யாகம் நிறைவு, தீபாராதனை யாத்திர தானம் கலசம் புறப்பாடு திருக்கோயில் வலம் வந்து கோபுரம் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

தொடர்ந்து கணபதி, கன்னிமார், கருப்பண்ணசாமி பரிவாரங்களுக்கு மஹா கும்பாபிஷேக தீபாரதனை நடைபெற்றது. கும்பாபிஷேக பூஜைகளை சிவசாமி குருக்கள் மற்றும் பிரபு குருக்கள் சிறப்பாக செய்திருந்தனர். கும்பாபிஷேக விழா ஏற்பாடுகளை அத்தான்வலசு மற்றும் குட்டறை ஊர் பொதுமக்கள் ஏற்பாட்டில் நடைபெற்றது. நேற்று முதல் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த கும்பாபிஷேக விழாவில் 3000க்கும் மேற்பட்ட பக்தர்களும், இப்பகுதியை சேர்ந்த பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

Newsletter

சட்டப்பேரவையில் வார்த்தை ஜாலங்களுக்கு இடமளிக்காமல் ஆக்கப்பூர்வமாக விவாதிக்க வேண்டும்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், பேரவைத் தலைவர் மற்றும் தமிழக முதல்வர் தெரிவித்ததை...

கோவை மாவட்ட வாள்வீச்சு போட்டி: சித்தாப்புதூர் பெண்கள் பள்ளி மாணவிகள் வெண்கலம் வென்று பெருமை

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற மாவட்ட அளவிலான வாள்வீச்சுப் போட்டியில் சித்தாப்புதூர் மாநகராட்சி பெண்கள் உயர்ந...

கோவை கங்கா நர்சிங் கல்லூரியில் நரம்பியல் அவசர சிகிச்சை குறித்த தேசிய மாநாடு சிறப்பாக நடைபெற்றது

கோவை கங்கா நர்சிங் கல்லூரி சார்பில் "நியூரோ ஃபிராண்டியர்ஸ் 2026" என்ற தலைப்பில் நரம்பியல் சார்ந்த அவசர சிகிச்சை குறித்த...

கோவையில் துணிக் கழிவுகளை மறுசுழற்சி செய்ய மாநகராட்சியின் “மறு நெசவு” திட்டம் தொடக்கம்

கவுண்டம்பாளையம் வார்டு 33-ல் பரீட்சார்த்த முறையில் தொடங்கப்பட்டுள்ள இத்திட்டத்தின் கீழ், வீடுகளில் தேவையின்றி சேரும் துண...

கோவை வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை மேயர் K.ரங்கநாயகி ராமச்சந்திரன் நேரில் ஆய்வ...

கோவையில் தனியார் பள்ளி பேருந்து உதவியாளர் போக்சோவில் கைது

கோவை கருமத்தம்பட்டி சாலையில் உள்ள தனியார் பள்ளி பேருந்து உதவியாளர் சேவியர் என்பவர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தத...