வேட்புமனு தாக்கலை முன்னிட்டு கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை சுற்றி பலத்த பாதுகாப்பு

இன்று வேட்புமனு தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் கோவை ஆட்சியர் அலுவலக நுழைவாயிலிலும், அலுவலகத்திற்கு உள்ளும், எல்லை கோடுகள் போடப்பட்டுள்ள பகுதியிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டுள்ளனர்.


கோவை: நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு இன்று முதல் வேட்புமனு தாக்கல் துவங்குகிறது. இன்று துவங்கும் வேட்புமனு தாக்கல் 27ம் வரை நடைபெறுகிறது. அதனை தொடர்ந்து 28ம் தேதி வேட்பு மனு மறுபரிசீலனை செய்யப்பட்டு 30ம் தேதி வேட்பு மனு திரும்பப்பெறும் தேதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வேட்புமனு தாக்கலை முன்னிட்டு, வேட்புமனுக்கள் தாக்கல் செய்யும் அலுவலகங்களில் பாதுகாப்பு பணிகள் தீவிரமடைந்துள்ளன.



அதன்படி கோவை மாவட்டத்தில் ஆட்சியர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்யப்படுவதால் நேற்று வேட்பாளர்களுக்கான எல்லை கோடுகள் 100 மீட்டர், 200 மீட்டர்களில் போடப்பட்டன. மேலும் ஆட்சியர் அலுவலக நுழைவாயிலில் 360 டிகிரி கண்காணிப்பு கேமராவும் பொருத்தப்பட்டுள்ளது.

தொடர்ந்து இன்று (மார்ச்.20) வேட்புமனு தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் ஆட்சியர் அலுவலகத்தை சுற்றிலும் பாதுகாப்புகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஆட்சியர் அலுவலக நுழைவாயிலிலும், அலுவலகத்திற்கு உள்ளும், எல்லை கோடுகள் போடப்பட்டுள்ள பகுதியிலும் போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...