ஈஷாவில் யக்க்ஷா கலை நிகழ்ச்சி நிறைவு நாள் விழா - பத்மஶ்ரீ ஆனந்தா சங்கர் ஜெயந்தின் அசத்தல் நடன நிகழ்ச்சி

தியாகராஜர் மில் மற்றும் கல்வி நிறுவனங்களின் நிர்வாக இயக்குனர் ஹரி தியாகராஜன் மற்றும் மெடிமிக்ஸ் குழுமத்தின் சோலையில் பிரைவேட் லிமிட்டட் நிறுவனத்தின் இயக்குனர் ஜெயதேவி சோலையில் ஆகியோர் யக்க்ஷா கலை நிகழ்ச்சி நிறைவு நாள் விழாவை குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தனர்.


கோவை: கோவை ஈஷா யோகா மையத்தில் நடைபெற்று வரும் யக்க்ஷா கலைத்திருவிழாவின், நிறைவு நாளில் பத்மஶ்ரீ ஆனந்தா சங்கர் ஜெயந்த் குழுவினர் நிகழ்த்திய பாரம்பரிய நடன நிகழ்ச்சி, பார்ப்போரை மெய் சிலிர்க்க செய்தது.

இத்திருவிழாவின் நிறைவு நாளான நேற்று(மார்ச் 7) தியாகராஜர் மில் மற்றும் கல்வி நிறுவனங்களின் நிர்வாக இயக்குனர் ஹரி தியாகராஜன் மற்றும் மெடிமிக்ஸ் குழுமத்தின் சோலையில் பிரைவேட் லிமிட்டட் நிறுவனத்தின் இயக்குனர் ஜெயதேவி சோலையில் ஆகியோர் விழாவை குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தனர்.



அதனை தொடர்ந்து பத்மஸ்ரீ ஆனந்தா சங்கர் ஜெயந்த்தின் பாரம்பரிய நடன நிகழ்ச்சி நடைபெற்றது. அவரும், அவருடைய குழுவினரும் நந்தி மற்றும் சிம்ஹ கதைகளை தங்கள் எழிலான நடனத்தின் மூலம் மீட்டுருவாக்கினர். இந்த குழுவில் 20 பெண் நடனக் கலைஞர்களும், 3 ஆண் நடனக்கலைஞர்களும் இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.



ஒரு மணி நேரத்திற்கு மேல் நடைபெற்ற இந்த அற்புத நடன நிகழ்ச்சியில் பார்வையாளர்கள் மூழ்கி திளைத்தனர். இந்நிகழ்ச்சியை தமிழகம் மட்டுமின்றி, பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்களும் மற்றும் வெளிநாட்டவர்களும் கண்டு ரசித்தனர்.

இவர் இந்தியாவின் தலைச் சிறந்த நடன கலைஞர் பரதநாட்டியம் மற்றும் குச்சிப்புடி இரு நடன கலைகளிலும் தேர்ச்சி பெற்றவர். மேலும், சங்கரானந்த கலாஷேத்ரா எனும் புகழ்பெற்ற அமைப்பை கலை இயக்குனராக வழிநடத்தி வருகிறார்.



கோவை ஈஷா யோக மையத்தில் 30 ஆம் ஆண்டாக மஹாசிவராத்திரி விழா இன்று மார்ச் 8 ஆம் தேதி மிகப் பிரம்மாண்டமாக கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு பாரதத்தின் பாரம்பரியக் கலைகளை பறைசாற்றும், யக்க்ஷா கலைத் திருவிழா கோவை ஈஷா யோகா மையத்தில் நடந்து வருகிறது. இந்நிகழ்ச்சி கலாச்சாரம், இசை மற்றும் நடனத்தின் செறிவை பறைசாற்றும் விதமாக உலகப் புகழ்பெற்ற கலைஞர்களை கொண்டு நடத்தப்படுகிறது.

Newsletter

சின்ன தடாகத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்: நீர்நிலைகளை தூர்வார கோரிக்கை

கோவை சின்ன தடாகம் பேருந்து நிலையம் அருகே கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் முன்னாள் மாணவிகள் சந்திப்பு

கோவை ஆவாரம்பாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் முன்னாள் மாணவிகள் சந்திப்பு நடைபெற்றது. பல...

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் நியாயவிலைக்கடை ஆய்வும் தூய்மைப் பணிகளும்

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதியில் நியாய விலைக் கடையில் ஆய்வு மேற்கொண்டார். குப்...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்த...

கோவையில் 42,300 தெருநாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை

கோவை மாநகராட்சியில் மதிப்பிடப்பட்ட 1.11 லட்சம் தெருநாய்களில் 42,300 நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளது....

பாப்பநாயக்கன்பாளையம் துணை மின்நிலையப் பராமரிப்பு: ஆகஸ்ட் 18-ல் 7 மணி நேர மின் தடை

பாப்பநாயக்கன்பாளையம் துணை மின்நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் காரணமாக ஆகஸ்ட் 18-ல் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்...