ஏழு அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி திருப்பூரில் சவரத் தொழிலாளர்களின் கண்டன ஆர்ப்பாட்டம்

கோவில்களில் முடி எடுக்கும் தொழிலாளர்களையும், தவில், நாதஸ்வர கலைஞர்களையும் நிரந்தர அரசு ஊழியர்களாக அறிவிக்க வேண்டும் என்று சவரத் தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


திருப்பூர்: திருப்பூரில் தமிழ்நாடு ஹேர் ட்ரெஸ்ஸஸ் யூனியன் சார்பில் சவரத் தொழிலாளர்களின் ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் மாநகர் மாவட்ட தலைவர் ஜீவமதி தலைமையில் குமரன் சிலை முன்பு நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கிராமப்புறங்களில் நடக்கும் தீண்டாமை வன்கொடுமைகளுக்கு உள்ளாகி வரும் மருத்துவ சமுதாய மக்களுக்கு உரிய சட்ட பாதுகாப்பு வழங்கிட வேண்டும், இந்து சமய அறநிலைய துறையின் கீழ் செயல்படும் அனைத்து கோவில்களிலும் முடி எடுக்கும் தொழிலாளர்களையும், தவில், நாதஸ்வர கலைஞர்களையும் நிரந்தர அரசு ஊழியர்களாக அறிவிக்க வேண்டும், முடி திருத்துவோர் நல வாரியத்தில் பதிவு பெற்ற தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் அரசு சிறப்பு சலுகை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட ஏழு அம்ச கோரிக்கைகளை மத்திய மாநில அரசுகள் நிறைவேற்றி தர வேண்டும் என்பதை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் எதிரான கண்டன முழச்சங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் திருப்பூர் மாநகர் மாவட்டம் திருப்பூர் புறநகர் மாவட்டங்களில் இருந்து 200 க்கும் மேற்பட்ட சவரத் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

Ganga Hospital Receives Lifetime Achievement Award at CII Hospital Tech 2026

Dr. S. Rajasekaran, Chairman of the Dept of Orthopaedics and Spine Surgery at Ganga Hospital, Coimbatore, received the a...

Ganga Hospital Receives Lifetime Achievement Award at CII Hospital Tech 2026

Dr. S. Rajasekaran, Chairman of the Dept of Orthopaedics and Spine Surgery at Ganga Hospital, Coimbatore, received the a...

சிறுவாணி அணை நீர்மட்டம் சரிவு: கோவையில் குடிநீர் விநியோக இடைவெளி 5 நாட்களாக அதிகரிக்க திட்டம்

மழையின்மை காரணமாக சிறுவாணி அணையின் நீர்மட்டம் 29 அடியாக குறைந்துள்ளது. வடகிழக்கு பருவமழை வரை சமாளிக்க குடிநீர் விநியோக இ...

கோவை வெள்ளக்கிணறு பகுதியில் பாதாள சாக்கடை குழியில் சிக்கிய தொழிலாளர்கள் பேருந்து; JCB மூலம் மீட்பு

கோவை வெள்ளக்கிணறு பகுதியில் தனியார் தொழிற்சாலை பணியாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து, சரியாக மூடப்படாத பாதாள சாக்கடை குழியி...

சரவணம்பட்டி, மேட்டுப்பாளையத்தில் போலீசார் சோதனை - போதைப் பொருள் கடத்தல்காரர்கள் 3 பேர் கைது

கோவை சரவணம்பட்டி அரசு டாஸ்மாக் பார் அருகே தடை செய்யப்பட்ட போதைப் பாக்குகள் விற்பனை செய்த சிவகங்கை வாலிபர் கைது. 27.8 கில...

ஈரோடு-திருப்பூர் இடையே ரயில் பாலப்பணி: மூன்று ரயில்கள் தாமதம்

ஈரோடு-திருப்பூர் இடையே உள்ள உத்துக்குளி ரயில்வே யார்டில் ரயில் பாலப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால் செப்டம்பர் 13, 1...