புதிதாக அமைக்கப்பட்ட டாஸ்மாக் கடை மக்கள் போராட்டத்தால் தற்காலிகமாக மூடப்பட்டது

கோவையை அடுத்த அன்னூர் ஒன்றியத்துக்குட்பட்ட  செங்காளிபாளையம் பகுதியில் நேற்று திடீரென டாஸ்மாக் கடை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆனால் அதிகாரிகள் அதனை கண்டுகொள்ளவில்லை.

இந்த நிலையில் அப்பகுதி பொதுமக்கள் அந்த டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு  போராட்டம் நடத்தினர். இது குறித்து தகவல் அறிந்த அன்னூர் காவல் துறையினர்  சம்பவ இடத்துக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

ஆனால் கடையை அப்பகுதியிலிருந்து அகற்றும் வரை தங்களது போராட்டம் தொடரும் என பொதுமக்கள் தெரிவித்ததால் சம்பவ இடத்துக்கு வந்த மாவட்ட  டாஸ்மாக் மேலாளர் பிரபாகரன் பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தியதுடன், அப்பகுதியிலிருந்து கடையை அகற்ற நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

மேலும் கடையை தற்காலிகமாக மூட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதையடுத்து பொதுமக்களின் போராட்டம் கைவிடப்பட்டது.

Newsletter

கோவை ஆர்.எஸ்.புரத்தில் சரக்கு வாகனம் மீது மரம் சாய்ந்து விபத்து – ஒருவர் படுகாயம்.

ஆர்.எஸ்.புரம் மெக்கரிக்கர் சாலையில் பழமையான மரம் திடீரென சரிந்து சரக்கு வாகனத்தின் மீது விழுந்ததில் ஓட்டுநர் படுகாயமடைந்...

கோவை மாவட்ட சட்டமன்ற தேர்தலில் 152 வேட்பாளர்கள் தேர்தல் டெபாசிட் இழப்பு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட 183 வேட்பாளர்களில் 152 பேர் தங்கள் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர...

இருகூரில் செல்போன் பறிப்பு: பொதுமக்கள் துரத்தி இருவர் கைது

கோவை இருகூர் அருகே மகாத்மா காந்தி ரோடு ஜங்ஷனில் ராம்குமாரிடம் இருந்து செல்போன் பறித்த இருவர், பொதுமக்கள் துரத்தியதில் சி...

கோவை வடக்கு வாக்காளர்களுக்கு BJP வேட்பாளர் வானதி சீனிவாசன் நன்றி

கோவை வடக்கு தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி BJP வேட்பாளராக போட்டியிட்ட வானதி சீனிவாசன், தனக்கு வாக்களித்த அனைவருக்கும்...

மத்திய அரசின் அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ தொழில் சங்கங்கள் வரவேற்பு

கோவையில் மத்திய அரசு அறிவித்துள்ள அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ பல்வேறு தொழில் சங்கங்கள் வரவேற்றுள்ளன. இத்திட்டம்...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...