ஆதினங்களை பா.ஜ.க மிரட்டுகிறது - சித்தாபுதூரில் கோவை எம்.பி பி.ஆர்.நடராஜன் விமர்சனம்

கோவையில் போட்டியிடும் இந்தியா கூட்டணி வேட்பாளரின் வெற்றிக்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் எதிர்வரும் நாட்கள் கடுமையாக உழைக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர். நடராஜன் கேட்டுக்கொண்டார்.


கோவை: கோவை சித்தாபுதூர் பகுதியில் உள்ள வி.கே.கே மேனன் சாலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜனின் 5 கால மக்கள் பணிகளின் தொகுப்பு குறித்த நூல் வெளியீட்டு விழா மற்றும் பொதுக்கூட்டம் நேற்று (மார்ச்.3) நடைபெற்றது.

இதில் சிபிஎம் மாநில குழு உறுப்பினர் அ.சௌந்தரராஜன், மாநில செயற்குழு உறுப்பினர் என்.குணசேகரன் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டு கோவையின் மேன்மைக்கான பணிகளில் தோழர் பி.ஆர்.நடராஜன் என்ற நூலை வெளியிட்டனர்.

தொடர்ந்து சௌந்தரராஜன் மற்றும் குணசேகரன் ஆகியோர் பேசும்போது பாஜகவின் கடந்த பத்தாண்டு கால ஆட்சியில் பெட்ரோல், டீசல், சிலிண்டர் உள்ளிட்ட அனைத்து பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது எனவும், ஜி.எஸ்.டி உள்ளிட்ட தவறான வரி விதிப்பு நடைமுறைகளால் சிறு குறு தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தனர்.



மக்களை பிளவுபடுத்தி மதத்தை வைத்து அரசியல் செய்யும் பாஜக ஒன்றியத்தில் மீண்டும் ஆட்சிக்கு வராமல் இருக்க எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியா கூட்டணி வாக்களிக்க வேண்டும் எனவும் அவர்கள் கேட்டுக் கொண்டனர்.தொடர்ந்து கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் பேசும் போது, கடந்த 2019 ஆம் ஆண்டு தேர்தலில் தனக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்த கோவை மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார். நாடாளுமன்றத்தில் ஆதீனங்களை அழைத்து அவர்கள் கையால் செங்கோல் பெற்றுக் கொண்டு பிரதமர் மரியாதை செலுத்தினால், தமிழ்நாட்டில் ஆதீனங்களை மிரட்டி பாஜகவினர் பணம் பறிக்கும் முயற்சியில் ஈடுபடுவதாக பி.ஆர். நடராஜன் விமர்சித்தார்.

அங்கித் திவாரி என்ற அமலாக்கத்துறை அதிகாரி, திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் பணிபுரியும் அரசு மருத்துவர் மீதான அமலாக்கத்துறை வழக்குகளை ரத்து செய்ய 30 லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்ற நிலையில், லஞ்ச ஒழிப்புத் துறையால் கைது செய்யப்பட்டபோது, அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட டைரியில் அமலாக்கத்துறை வழக்குகள் உள்ள 78 நபர்களின் விவரங்கள் இருந்ததாகவும்,அமலாக்கத்துறை உயரதிகாரிகள் சொல்லாமல், அவர்களது பங்கு அதில் இல்லாமல் ஒரு சாதாரண அதிகாரியால் எப்படி லஞ்சம் கேட்க தைரியம் வரும் எனவும் கேள்வி எழுப்பிய பி.ஆர். நடராஜன், சூழல் இப்படி இருக்க அண்ணாமலை மேடை போட்டு லஞ்சத்தை ஒழிக்கப் போவதாக பேசுவது வேடிக்கையாக உள்ளது என்றார்.

கோவையில் போட்டியிடும் இந்தியா கூட்டணி வேட்பாளரின் வெற்றிக்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் எதிர்வரும் நாட்கள் கடுமையாக உழைக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர். நடராஜன் கேட்டுக்கொண்டார்.

Newsletter

கோவை மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 51 மனுக்கள் பெறப்பட்டன

கோவை மாநகராட்சியில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. ஆணையாளர் க...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் ராகிங் எதிர்ப்பு வார விழா நிறைவு

கோவை நவ இந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆகஸ்ட் 12 முதல் 18 வரை நடைபெற்ற ராகிங் எதிர்ப...

கோவையில் மாநகராட்சியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு 61% நிறைவு: விடுபட்ட வீடுகளுக்கு உதவி எண்கள் வெளியீடு

கோவை மாநகராட்சியில் ஆகஸ்ட் 1 முதல் நடைபெறும் மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027-ன் முதற்கட்ட வீட்டு பட்டியல் பணி 61% நிறைவடைந...

கோவையில் 283 ஆக்கிரமிப்புகள் அகற்றம்; அனுமதியற்ற விளம்பரப் பலகைகளுக்கு கடும் நடவடிக்கை

கோயம்புத்தூர் மாநகராட்சி ஜூலை 23 முதல் 283 ஆக்கிரமிப்புகளையும், 46 அனுமதியற்ற விளம்பரப் பலகைகளையும் அகற்றியுள்ளது. மேற்க...

மேட்டுப்பாளையம் ஓடந்துறையில் மர்ம நபர்களால் மூன்று இருசக்கர வாகனங்கள் தீ வைப்பு - பொதுமக்கள் பீதி

மேட்டுப்பாளையம் அருகே ஓடந்துறை இயேசு துரை சந்து பகுதியில் இரண்டு நாட்களில் மூன்று இருசக்கர வாகனங்கள் அடுத்தடுத்து மர்ம ந...

கடன் தள்ளுபடி செய்யும் வரை வங்கிக் கடன் கட்ட மறுப்பு: கோவையில் விவசாயிகள் சங்கம் தீர்மானம்

சோமையனூரில் ஜாதி, மதம், கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் நடத்திய ஆர்ப்பாட்டத்தில், தேர்தல் வாக்குறுதிப்படி முழுமைய...