ஊதியூர் பெட்ரோல் பங்க் நிறுத்தம் அருகே பள்ளி மாணவன் பேருந்தில் இருந்து விழுந்து படுகாயம்

பேருந்து நிறுத்தம் அருகே பேருந்து சென்றபோது உள்ளே இருந்து, படிக்கட்டிற்கு வந்த மாணவன் திடீரெனெ நிலை தடுமாறி பேருந்தில் இருந்து சாலையில் விழுந்துள்ளார். இதில் மாணவனுக்கு தலை, முகம், மூக்கு, கை ஆகிய பகுதிகளில் பலத்த இரத்த காயம் ஏற்பட்டுள்ளது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அடுத்த குள்ளம்பாளையத்தில் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகின்றது. ஊதியூர் பகுதியை சேர்ந்த சண்முகம் கூலித்தொழிலாளியின் மகன் அபிஷேக்குமார் வயது 16. இந்த சிறுவன் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வருகின்றார். இந்நிலையில் இன்று மாலை பள்ளி வேலை முடிந்தவுடன் காங்கேயம் பேருந்து பணிமனைக்கு சொந்தமான K5 என்ற பேருந்தில் குள்ளம் பாளையத்தில் இருந்து ஊதியூர் பெட்ரோல் பங்க் ஸ்டாப்பில் இறங்கி வீடு செல்வது வழக்கம்.

அதே போல் இன்றும் அந்த பேருந்து நிறுத்தம் அருகே பேருந்து சென்றபோது படிக்கட்டிற்கு வந்துள்ளார். பின்னர் திடீரெனெ படிக்கட்டில் நிலை தடுமாறி சாலை விழுந்துள்ளார். உடனே சகமாணவர்கள் சத்தமிடவே பேருந்தை நிறுத்தி பார்க்கையில் மாணவனுக்கு தலை, முகம், மூக்கு, கை ஆகிய பகுதிகளில் பலத்த இரத்த காயம் ஏற்பட்டிருந்தது. வலியால் மாணவனும் துடிக்க அருகில் இருந்தவர்கள் அந்த வழியாக வந்த வாகனத்தில் ஏற்றி காங்கேயம் அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர்.

முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்கு திருப்பூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு மேல்சிகிச்சைக்கு அனுப்பிவைத்தனர். பேருந்தில் செல்லும் மாணவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பேருந்து நின்ற பின்னரே படிக்கட்டு பகுதிக்கு வரவேண்டும் அதற்க்கு முன்னாள் படிக்கட்டிற்கு வந்தால் கை தவறியோ அல்லது படிக்கட்டுகள் வலுக்கிவிட்டு இதுபோல் விபத்துக்கள் ஏற்படுகின்றது.

அதே போல் பேருந்து நடத்துனர்கள் மாணவர்களை படிக்கட்டுக்களில் நிற்பதை அனுமதிக்க கூடாது என்று பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவையில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

அரசாணைகளின்படி அரசு அலுவலகங்களில் அம்பேத்கர், பெரியார், அண்ணா, காமராஜர் உள்ளிட்ட சகிக்க நீதி தலைவர்களின் படங்களை வைக்க வ...

கோவையில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண்.5, 53, 87 பகுதிகளில் 12.09.2026 அன்று ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்ட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி - ஐபிஎம் ஹேக்கத்தான்: 16 மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து 12.09.2026 மற்றும் 1...

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...