ஓய்வு பெறும் கடைசி நாளில் காங்கேயம் வட்டார வளர்ச்சி அலுவலர் பணியிடை நீக்கம்

சுமார் 4 ஆயிரத்து 217 சிமெண்ட் மூட்டைகள் விநியோகத்தில் முறைகேடு செய்யப்பட்டதை அடுத்து அலுவலர் ஹரிஹரன் உள்ளிட்ட இரண்டு அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இவர்கள் மீது தற்போது வரை மாவட்ட குற்றப்பிரிவில் வழக்கு நடத்து வருகிறது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் வட்டார வளர்ச்சி அதிகாரியாக இருந்தவர் ஹரிஹரன் வயது 60. இவர் காங்கேயத்திற்கு பணிக்கு வருவதற்கு முன்னர் குண்டடம் யூனியனில் கடந்த 2022-2023ஆம் ஆண்டு பணிபுரிந்து வந்துள்ளார்.

அப்பொழுது தாராபுரம் தாலுக்கா, குண்டடம் யூனியனின் அம்மா சிமெண்ட் விநியோகத் திட்டத்தில் முறைகேடுகள் நடப்பதாக எழுந்துள்ள புகாரின் பேரில் கடந்த 2023 மாவட்ட ஆட்சியர் அலுவலக தணிக்கை பிரிவு உதவி இயக்குனர் மேற்கொண்ட ஆய்வில் ஹரிஹரன் முறைகேட்டில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டது.

சுமார் 4 ஆயிரத்து 217 சிமெண்ட் மூட்டைகள் விநியோகத்தில் முறைகேடு செய்யப்பட்டதை அடுத்து அலுவலர் ஹரிஹரன் உள்ளிட்ட இரண்டு அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். மேலும் இவர்கள் மீது தற்போது வரை மாவட்ட குற்றப்பிரிவில் வழக்கு நடத்து வருகிறது.

இதற்கிடையில் நேற்று முன்தினம் காங்கேயம் வட்டார வளர்ச்சி அலுவலர் ஹரிஹரன் ஓய்வு பெற இருந்த நிலையில் மாவட்ட நிர்வாகம் அவரை அதிரடியாக சஸ்பெண்ட் செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இது போன்று காங்கேயத்திலும் சிவன்மலை, வீரணம்பாளையம் போன்ற பல்வேறு இடங்களில் தனியார் நிறுவனங்களின் ஒப்பந்தங்கள் வழங்குவதிலும் சம்பந்தப்பட்டுள்ளார் என்பது குற்றச்சாட்டாக எழுந்து வருகிறது. மேலும் அமைச்சர்கள் மட்டும் சிக்குகின்றனர் என்று பார்த்தால் காங்கேயம் வட்டார வளர்ச்சி அதிகாரியும் ஒய்வு பெரும் நாளில் சஸ்பெண்ட் ஆனது வேடிக்கையாக இருக்கிறது.

அலுவலக மீட்டிங், கிராமசபை கூட்டங்களில் இதே பிடிஓ பேசும் போது அரசு ஊழியர்கள் என்ற மமதையில் இவருக்கு கீழே உள்ள அதிகாரிகளை இவர் வசைபாடிய வீடியோக்கள் கடந்த ஆண்டு சமூகவலைத்தளங்களில் பரவி வைரல் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...

வேளாண் பேராசிரியர்களுக்கு TNAU-வில் மூன்று நாள் சிறப்புப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில், வேளாண் இணை பேராசிரியர்களுக்கான மூன்ற...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...