வால்பாறை நகராட்சி மாதாந்திர கூட்டத்தில் கவுன்சிலர்கள் தர்ணா போராட்டம்

நகராட்சியில் மாதாந்திர செலவு கணக்குகளை காண்பிக்க வேண்டும், நகராட்சியில் நிரந்திர ஆணையாளர் வேண்டும் என்று கவுன்சிலர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சி நகர மன்ற கூட்டம் தலைவர் அழகு சுந்தரம் வள்ளி மற்றும் துணைத் தலைவர் செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது.



கூட்டத்தில் 21 வார்டு கவுன்சிலர்களும் கலந்து கொண்டனர்.



நகராட்சி பொறியாளர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். நகர மன்ற கூட்டம் துவங்கிய நிலையில் ஒன்பதாவது வார்டு உறுப்பினர் மகுடிஷ்வரன் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தை ஈடுபட்டார்.



நகராட்சியில் மாதாந்திர செலவு கணக்குகளை காண்பிக்க வேண்டும், நகராட்சியில் நிரந்திர ஆணையாளர் வேண்டுமென்றும் போராட்டத்தில் ஈடுபட்டார். இதை தொடர்ந்து மற்ற கவுன்சிலர்களும் இதே கோரிக்கையே வலியுறுத்தி கோசங்கள் எழுப்பினர்.



வால்பாறையில் வளர்ச்சிப் பணிகள் தாமதமாக நடைபெறுகிறது. நகராட்சி ஆணையாளர்கள் கூடுதல் பொறுப்பேற்று பொள்ளாச்சி மற்றும் உடுமலைப்பேட்டை பகுதியிலிருந்து வந்து செல்கின்றனர். வாரம் இருமுறை வந்து சொல்லுவதால் பணிகள் செய்ய முடியாமல் உள்ளன என்று நகராட்சி அதிகாரிகளை கண்டித்து கோஷம் எழுப்பி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சிறிது நேரத்தில் நகர மன்ற தலைவர் மற்றும் அரசு அதிகாரிகள் சமாதானம் பேச்சுவார்த்தை செய்து சமரசம் செய்தனர். இதை தொடர்ந்து,தமிழக அரசு வால்பாறைக்கும் நிரந்தர ஆணையாளர் நியமிக்க வேண்டும், எஸ்டேட் பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் இருப்பதால் தெருவிளக்குகள் அமைக்க வேண்டும், தூய்மை பணியாளர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும், பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும் என்று 17வது வார்டு உறுப்பினர் மணிகண்டன் மற்றும் மூன்றாவது வார்டு உறுப்பினர் வீரமணி 12 வார்டு உறுப்பினர் அன்பரசன் ஆகியவர்கள் கோஷம் எழுப்பி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் நகராட்சி வளாகம் பரபரப்படைந்தது. அதிகப்படியான சத்தம் வந்ததால் காவல்துறையினர் அப்பகுதியில் குவிக்கப்பட்டனர். சிறிது நேரத்தில் நகர மன்ற கூட்டத்தை பாதையிலே நிறுத்தி மீண்டும் அடுத்து அறிவிக்கப்படும் என்று நகராட்சி தலைவர் வெளியேறினார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தினசரி விமானங்கள் எண்ணிக்கை 28-லிரு...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தற்போதுள்ள 28 விமான சேவைகளிலிருந்து...

கோவை தெற்கில் செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்துவேன் - AIADMK வேட்பாளர் அம்மன் அர்ச்சுனன்

கோவை தெற்கு தொகுதியில் AIADMK சார்பில் போட்டியிடும் அம்மன் அர்ச்சுனன், DMK வேட்பாளர் V செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்கு...

ராமலிங்கம் செட்டியார் நினைவுக் கிரிக்கெட் போட்டியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் பள்ளி அபார வெற்றி

கோவையில் நடைபெற்ற ராமலிங்கம் செட்டியார் நினைவு மாவட்ட கிரிக்கெட் போட்டியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவிகள...

Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் 130 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

Coimbatore: Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 130-க்கும் மேற்பட்ட...

Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா - 130 மாணவர்களுக்கு பட்டங்கள்

Coimbatore: Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 130-க்கும் மேற்பட்ட...