நிர்வாக திறமையின்மையை மறைக்க மத்திய அரசு மீது தமிழக அரசு பழி சுமத்துகிறது -பொள்ளாச்சியில் வானதி சீனிவாசன் பேட்டி

விவசாயிகள், பெண்கள் உட்பட பல்வேறு திட்டங்களுக்கு மத்திய அரசு பல கோடி ரூபாய் நிதி ஒதுக்குகிறது. அது குறித்து ஏன் தமிழக அரசு பேசுவதில்லை. மத்திய அரசு மாநில அரசுக்கு எவ்வளவு நிதி ஒதுக்குகிறது என்று அறிக்கை வெளியிட தயாரா என சட்டமன்ற உறுப்பினர் கேள்வி எழுப்பினார்.


கோவை: பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதி பாஜக மகளிர் அணி மாநாடு பொள்ளாச்சி கோவை சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது. தேசிய மகளிர் அணி தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளைச் சேர்ந்த ஏராளமான மகளிர் அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.



கூட்டத்திற்கு பின்னர் வானதி சீனிவாசன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் போது., மாநில அரசுக்கு நிதி ஒதுக்குவதில் மத்திய அரசு பாரபட்சம் காட்டுகிறது என கூறி வருகின்றனர். நிதி கமிஷன் என்ன வருவாய் அளவு வைத்திருக்கின்றனர். குறிப்பிட்ட வருவாயில் மத்திய அரசுக்கு மாநில அரசுக்கு என அளவீடு உள்ளது. தமிழகத்தில் இருந்து கிடைக்கக்கூடிய வருவாயில் எவ்வளவு வழங்கப்படுகிறது. அதை முறையாக வழங்கி வருகின்றனர். மத்திய அரசு தமிழகத்திற்கு நேரடியாக செயல்படுத்துகின்ற பல்வேறு திட்டங்கள் உள்ளன. இந்த திட்டங்கள் குறித்து தமிழக அரசு கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை. விவசாயிகளுக்கு, பெண்களுக்கு உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு மத்திய அரசு பல கோடி ரூபாய் நிதி ஒதுக்குகிறது. அது குறித்து ஏன் தமிழக அரசு பேசுவதில்லை. மத்திய அரசு மாநில அரசுக்கு எவ்வளவு நிதி ஒதுக்குகிறது என்று அறிக்கை வெளியிட தயாரா என கேள்வி எழுப்பினார். இவர்களின் நிர்வாக திறமையின்மையை மறைக்க மத்திய அரசு மீது பழி சுமத்துவதாக வானதி சீனிவாசன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

Newsletter

வால்பாறை மலைப்பாதையில் சுற்றுலா வேன் விபத்து: 8 பேர் உயிரிழப்பு..!

வால்பாறை - பொள்ளாச்சி மலைப்பாதையில் சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற டெம்போ டிராவலர் வேன் பள்ளத்தில் கவிழ்ந்ததில் 8 பேர் உ...

சேப்பாக்கம் வெற்றியை விட, கோவை தெற்கு, வடக்கு வெற்றியே முக்கியம்: உதயநிதி ஸ்டாலின்

கோவையில் பிரச்சாரம் செய்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், சேப்பாக்கத்தில் தனது வெற்றியை விட கோவை தெற்கு மற்றும் வடக்கு த...

சேப்பாக்கம் வெற்றியை விட கோவை தெற்கு, வடக்கு வெற்றியே முக்கியம்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

கோவையில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சேப்பாக்கத்தில் தனது வெற்றியை விட கோவை தெற்கு...

தீரன் சின்னமலையின் 271வது பிறந்தநாளை முன்னிட்டு அவிநாசி திமுக வேட்பாளர் Dr. கோகிலாமணி மரியாதை..!

சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் பிறந்தநாளை முன்னிட்டு, அவிநாசி தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின...

உடுமலையில் திமுகவினர் மீது தேர்தல் பொதுப் பார்வையாளரிடம் அதிமுக வழக்கறிஞர்கள் புகார்..!

உடுமலையில் இன்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பரப்புரைக்காக, அனுமதி வழங்கப்பட்ட இடத்தில் பிரச்சாரம் நடத்தாமல்,...

தேர்தலுக்கு பிறகு ‘மொத்த தோல்வி பழனிச்சாமி’ ஆக மாறுவார்: பொள்ளாச்சியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம்..!

உடுமலை, வால்பாறை மற்றும் பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிடும் மதசார்பற்ற கூட்டணியின் வேட்பாளர்களை ஆதரித்து, பொள்ளாச்சி அரு...