பெண் பாஜக பிரமுகரின் கணவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கோவை மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளரிடம் பெண் புகார் மனு

நிலம் தொடர்பான பிரச்சனை நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள போது அத்துமீறி வீட்டில் உள்ள பொருட்களை திருடிச் சென்றுவிட்டு,10க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கம்பி போன்ற இரும்பு ஆயுதங்களோடு உலா வருவதாக மாவட்ட ஆட்சியரிடம் கெம்மாரம்பாளையத்தை சேர்ந்த கௌரி என்ற பெண் மனு அளித்துள்ளார்.


கோவை: கோவை மாவட்டம் காரமடை கெம்மாரம்பாளையத்தை சேர்ந்த சண்முகசுந்தரம் என்பவரின் மனைவி கௌரி. இவர் பாஜக பிரமுகரின் கணவர் மகேந்திரகுமார் என்பவர் தங்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து அனைத்து பொருட்களை திருடிச் சென்றதோடு, அடியாட்களை வைத்து மிரட்டி வருவதாக மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார்.

இது குறித்து கெளரி கூறுகையில், தனது கணவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருவதாகவும், கடந்த ஆண்டு மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த மகேந்திரகுமார், என்பவருக்கு சொந்தமான 6.48 ஏக்கர் நிலத்தை வாங்க கிரைய ஒப்பந்தம் பத்திரம் போட்டதாகவும், இதற்கான பணத்தில் பெரும்பாலும் பங்கு கொடுக்கப்பட்டு, அந்த நிலத்தில் தாங்கள் வீடு கட்டி அங்கு தனது உறவினர்கள் இருந்து வரும் நிலையில், நிலத்தை மகேந்திரகுமார் தங்களுக்கு கிரையம் செய்து கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார் என தெரிவித்தார்.

இது குறித்து பல முறை கேட்டும் எந்த பதிலும் அளிக்காமல் தற்போது இடத்தை காலி செய்து கொடுக்குமாறு கேட்டு மிரட்டி வருகிறார் என்றார். இது குறித்து வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில் மகேந்திரகுமார் தனது ஆட்களை கொண்டு மிரட்டி வந்ததாகவும், கடந்த சில நாட்களுக்கு முன் வீட்டில் யாரும் இல்லாத போது அங்கு வந்து அவரது ஆட்களுடன் இரண்டு வீடுகளின் பூட்டை உடைத்து, 2 லாரிகளில் வீட்டில் இருந்த அனைத்து பொருட்களை திருச் சென்றதாக தெரிவித்தார்.



இது குறித்து அவர் காரமடை காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், போலீஸார் அழைத்து பேசியதால் ஒரு லாரி பொருட்களை மட்டும் ஒப்படைத்த நிலையில் மற்ற பொருட்களை கொடுக்காமல் இழுத்தடிப்பதாகவும், மகேந்திரகுமாரின் மனைவி பிரீத்தி பாஜக நிறுவாகி என்பவதால் அதனை வைத்து தங்களை தொடர்ந்து அச்சுறுத்தி வருவதாகவும் தெரிவித்தார்.

நிலம் தொடர்பான பிரச்சனை நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள போது அத்துமீறி வீட்டில் உள்ள பொருட்களை திருடுவது மற்றும் 10க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கம்பி போன்ற இரும்பு ஆயுதங்களோடு உலா வருவதாகவும், தங்களது பூட்டிய வீட்டை திறந்து மது குடித்து விட்டு பாட்டில்களை அப்படியே வீசிச் சென்றுள்ளதோடு அடிக்கடி அப்பகுதி சுற்றிவருவதாக தெரிவித்தார். எனவே மகேந்திரகுமார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

Newsletter

“Unable to Breathe” – Chettipalayam Residents Petition Pollution Control Board Over Garbage Burning

Residents of Chettipalayam in Coimbatore have petitioned the Tamil Nadu Pollution Control Board, alleging severe health...

“குப்பை எரிப்பால் மூச்சு விடவே முடியவில்லை” – செட்டிபாளையம் பொதுமக்கள் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு மனு..!

கோவை செட்டிபாளையம் பகுதியில் காலி மனையில் குப்பைகள் தீ வைத்து எரிக்கப்படுவதால் எழும் நச்சுப் புகையால் கடும் அவதிப்படுவதா...

சிங்கப்பூர் நிறுவனத்துடன் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சிங்கப்பூர் நிறுவனமான iGenius AI Private Limited...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு; மழை விளைவுகள் சீரமைப்பு பணிகள் ஆய்வு

கோயம்புத்தூர் சிங்காநல்லூர் தொகுதி 27-வது வார்டு பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது. மழையினால் விழுந்த...

முதல்வர் விஜய் - எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம் சந்திப்பு

அதிமுக முன்னாள் அமைச்சர்களான எஸ்.பி. வேலுமணி மற்றும் சி.வி. சண்முகத்தை முதல்வர் விஜய் நேரில் சந்தித்தது தமிழக அரசியல் வட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் சர்வதேச செவிலியர் தினம் 2026 சிறப்பாக கொண்டாடப்பட்டது

கோயம்புத்தூரில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் மே 12, 2026 அன்று சர்வதேச செவிலியர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது...