பொதுத் தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு குனியமுத்தூரில் வினா-விடை வங்கி புத்தகத்தை வழங்கினார் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

மாணவர்கள் சிறந்த முறையில் படித்து ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் போன்ற உயர்ந்த பதவிகளுக்கு வரவேண்டும் என்று பொது தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு வினா-விடை வங்கி புத்தகத்தை முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கி மாணவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்.


கோவை: கோவை தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் குனியமுத்தூர் பகுதிக்கழக அலுவலகத்தில் ஏழை, எளிய அரசு பள்ளி மாணவர்கள் பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று வாழ்வில் உயர்ந்த நிலைக்கு வரவேண்டும் என்பதற்க்காக மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா வினா- விடை வங்கி புத்தகங்களை முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கினார்.



புத்தகங்களை பெற்றுக்கொண்ட மாணவ, மாணவியர், முன்னாள் அமைச்சரும் அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி.வேலுமணியுடன் குழுவாக புகைப்படங்கள் எடுத்துக்கொண்டனர்.



மேலும் விழாவில் பேசிய முன்னாள் அமைச்சரும் அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி வேலுமணி, 26 வருடமாக விலையில்லா வினா- விடை வங்கி புத்தகம் வழங்கப்பட்டு வருகிறது. மாணவர்களுக்கு மடிக்கணினி முதல் மிதிவண்டி வரை அம்மா வழங்கினார். அவரை பின்பற்றி அண்ணன் எடப்பாடியார் அவர்களும் மாணவ மாணவியர்களுக்கு வழங்கினார். ஆனால் தற்போதய திமுக அரசு மாணவர்களுக்கு அனைத்து திட்டங்களையும் நிறுத்தி விட்டது.

மேலும் குனியமுத்தூர், குளத்துப்பாளையம், சுண்டக்காமுத்தூர் உள்ளிட்ட இடங்களில் உள்ள அரசு பள்ளிகளிலும், கோவை மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளிலும் மாணவர்களின் வசதிக்காக கூடுதல் வகுப்பறைகள், நவீன உபகரணப்க்கள் அனைத்தும் நமது அதிமுக ஆட்சியில் வழங்கப்பட்டுள்ளது. இந்த வினா- விடை வங்கி புத்தகமானது மாணவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். கடந்த முறை தேர்ச்சி பெற்ற பல மாணவர்களும் 80 சதவிகிதம் வரை அதிக மதிப்பெண்கள் பெருவதற்கு பேருதவியாக இருந்ததாக தெரிவித்ததாகவும் கூறினார். மேலும் மாணவர்கள் சிறந்த முறையில் படித்து ஐ.ஏ.எஸ்.ஐ.பி.எஸ் போன்ற உயர்ந்த பதவிகளுக்கு வரவேண்டும் என்று மாணவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்.

Newsletter

கோவை வீரபாண்டி பிரிவில் மண் கடத்தி வந்ததாக 4 லாரிகள் பறிமுதல்

சத்தியமங்கலம் பகுதி விவசாயிகளுக்கு அரசு வழங்கிய இலவச மண் அள்ளும் அனுமதியை முறைகேடாகப் பயன்படுத்தி, வீரபாண்டி பிரிவில் பு...

இரவில் மர்ம நபர்கள் தாக்கியதாக ரத்தக் காயங்களுடன் போலீசாரிடம் வாலிபர் புகார்

கோவை ரேஸ் கோர்ஸ் காவல் நிலையம் அருகே கையில் ரத்த காயங்களுடன் கூலித் தொழிலாளி ஒருவர் தன்னை சிலர் தாக்க முயன்றதாக போலீசாரி...

கோவையில் ரயில் மோதி 2 பெண் தூய்மைப் பணியாளர்கள் உயிரிழப்பு

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் ரயில்வே தண்டவாளத்தில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு பெண் ஒப்பந்தப் பணியாளர்கள் ரயில...

கள்ளிமடை துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை

கள்ளிமடை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் காமராஜ்...

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை அறிவிப்பு

சோமையம்பாளையம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக ஆகஸ்ட் 14ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வர...

கோவை பீளமேடு வார்டு 27-ல் அங்கன்வாடி மையம், தூய்மைப் பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேட்டில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் அங்கன்வாடி மையம், சாலையோர தூய்மை, குப்பை அகற...