கடன் வாங்கியவர்கள் சலுகை வட்டியில் திருப்பி செலுத்தலாம் என கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் கூட்டுறவு துறையின் கீழ் செயல்பட்டு வரும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, நகர கூட்டுறவு வங்கிகள், நகர கூட்டுறவு கடன் சங்கங்களில் கடன் பெற்றவர்கள் நீண்ட கால கடன் நிலுவைகளை 9 சதவீத சலுகை வட்டியில் திருப்பி செலுத்தலாம் என கோவை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் நேற்று (பிப்.15) வெளியிட்டுள்ள அறிக்கையில், கோயம்புத்தூர் மாவட்டத்தில் கூட்டுறவு துறையின் கீழ் செயல்பட்டு வரும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, நகர கூட்டுறவு வங்கிகள், நகர கூட்டுறவு கடன் சங்கங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள். தொடக்க வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகளில் கடன் பெற்றவர்கள் நீண்ட கால கடன் நிலுவைகளை 9 சதவீத சலுகை வட்டியில் திருப்பி செலுத்தலாம்.

அந்த கடன்களுக்கான கூடுதல் வட்டி மற்றும் அபராத வட்டி முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என அரசு அறிவித்துள்ள சிறப்பு கடன் தீர்வுத்திட்டத்தை பயன்படுத்தி நிவாரணம் பெறலாம்.

மேலும், சிறுவணிகம், போக்குவரத்து, கைத்தறி, விசைத்தறி, தொழில், வாணிபம், வீடு கட்டுதல், வீட்டு அடமானம், 2021-ம் ஆண்டில் தள்ளுபடி கிடைக்கப்பெறாத தகுதியான மகளிர் சுயஉதவிக்குழு, ஆண்கள் சுயஉதவிக்குழு மற்றும் கூட்டுப் பொறுப்புக்குழு கடன்கள் இதற்கு பொருந்தும்.

அதே போன்று தாட்கோ, டாம்கோ, டாப்செட்கோ, வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கங்கள் மூலம் வேளாண் விளைபொருட்கள் கொள்முதல், விற்பனை செய்த வகையில் உறுப்பினர்களிடம் இருந்து வர வேண்டிய இனங்கள் ஆகியவைகளுக்கு இந்தகடன் தீர்வுத் திட்டம் பொருந்தும்.

31.12.2022 அன்று கடனைத் திருப்பிச்செலுத்த வேண்டிய காலக்கெடு முடிவடைந்து, தவணை தவறி அரசாணை வெளியிடப்பட்ட நாளில் நிலுவையில் உள்ள பண்ணைசாராக் கடன்களுக்கு மட்டுமே இத்திட்டம் பொருந்தும்.

குறிப்பாக, 31.12.2022- க்கு பிறகு கடன் தவணை திருப்பி செலுத்த வேண்டிய காலக்கெடு உள்ள பண்ணைசாராக் கடன்களுக்கு இத்திட்டம் பொருந்தாது.

இத்திட்டத்தின் கீழ் பயன் பெற கூட்டுறவுச் சங்கங்களில் செலுத்த வேண்டிய கடன் நிலுவையில் 25 சதவீத தொகையை அரசாணை வெளியிடப்பட்ட நாளில் இருந்து (13.12.2023)3 மாதத்திற்குள் அடுத்த மாதம் (மார்ச்) 12-ந் தேதிக்குள் கடன் பெற்றுள்ள கூட்டுறவு சங்கம் அல்லது வங்கியில் செலுத்த வேண்டும்.

மீதி 75 சதவீத தொகையை ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்ட நாளில் இருந்து 6 மாதத்திற்குள் அதிகபட்சமாக 6 தவணைகளுக்குள் செலுத்த வேண்டும். மாவட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் தகுதிவாய்ந்த 15.153 நபர்களுக்கு தபால் மூலம் தகவல் அனுப்பப்பட்டு வருகிறது. இதில் சந்தேகங்கள் ஏதேனும் இருந்தால் சம்பந்தப்பட்ட சங்கங்களை தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம் என்று ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...