பொள்ளாச்சி பேருந்து நிலையம் மற்றும் மீனாட்சிபுரம் சோதனை சாவடியில் கோவை எஸ்பி பத்ரி நாராயணன் ஆய்வு

பொள்ளாச்சி பேருந்து நிலையம் வளாகத்தில் அதிகளவிலான சிசிடிவி கேமராக்களை பொருத்தி கண்காணிப்பை தீவிரப்படுத்துமாறு போலீசாருக்கு கோவை எஸ்பி பத்ரி நாராயணன் வலியுறுத்தினார்.


கோவை: கோவை எஸ்பி பத்ரி நாராயணன் பொள்ளாச்சி பழைய மற்றும் புதிய பேருந்து நிலையத்தில் நேற்று (பிப்.13) திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, அங்கு பழுதடைந்த காவல் உதவி மையத்தை நகராட்சியுடன் கலந்து ஆலோசித்து தகுந்த இடத்திற்கு மாற்றி புது பொலிவுடன் சீரமைக்க அறிவுறுத்தினார்.



மேலும், பேருந்து நிலையம் வளாகத்தில் அதிகளவிலான சிசிடிவி கேமராக்களை பொருத்தி கண்காணிப்பை தீவிரப்படுத்துமாறு போலீசாரை அவர் வலியுறுத்தினார். இதேபோல கோவை எஸ்பி பத்ரி நாராயணன் ஆனைமலை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட மீனாட்சிபுரம் சோதனை சாவடியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது, சோதனை சாவடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அதிகளவில் சிசிடிவி கேமராக்களை பொருத்த வேண்டும். வாகன தணிக்கையை தீவிரப்படுத்தி குற்றங்கள் நடவாமல் தவிர்க்க வேண்டும் என போலீசாருக்கு அவர் அறிவுறுத்தினார். உடன் டிஎஸ்பி ஆனைமலை இன்ஸ்பெக்டர் குமார் உள்ளிட்டோர் இருந்தனர்.

Newsletter

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் புதிய Pre-Incubation Centre மற்றும் Startup Studio தொடக்கம்

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தின் 'கற்பகம் புத்தாக்கம் மற்றும் இன்குபேஷன் கவுன்சில்' (KIIC), தனது புதிய 'Pre-Incubatio...

2016 ஆனைமலை இளைஞர் கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை: கோவை மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு

ஆனைமலை காவல் நிலையத்தில் குற்ற எண் 369/2016-ன் கீழ் பதிவான கொலை வழக்கில், மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த பாப்பான் @ சுதானந்தம...

ஜெம் வீரமணி வழக்கு: கோவை காவல் ஆணையர் உள்பட 2 ஐபிஎஸ் அதிகாரிகள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

ஜெம் வீரமணி வழக்கு தொடர்பாக கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் மற்றும் கூடுதல் ஆணையர் அருண் ஆகிய இரு மூத்த ஐபிஎஸ் அதிகா...

கோவை–போத்தனூர் இடையே பராமரிப்பு பணி: செப்.25, 26-ல் இரு மெமு ரயில் சேவையில் மாற்றம்

செப்டம்பர் 25 மற்றும் 26, 2026 ஆகிய தேதிகளில் கோவை-போத்தனூர் ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெற...

கோவையில் பார் ஊழியரை கத்தியால் மிரட்டி பணம் பறித்த ரவுடி கைது

கோவை புலியகுளம் ரோடு பங்கஜாமில் ரோடு பகுதியில் உள்ள சன்ரிச் 11 - 11 பாரில் ஊழியர் பாண்டியராஜனிடம் இலவச மதுபானம் கேட்டு ம...

கோவை தடாகம் சாலையில் ஆம்புலன்ஸ் பணிமனையில் தீ விபத்து

கோவை தடாகம் சாலையில் உள்ள கோயில்மேடு அருகே ஆம்புலன்ஸ் பணிமனையில் திடீரென தீ பரவியது. இதனால் கரும்புகை மேகங்களாக சுற்றுவட...