உப்பாறு அணைக்கு தண்ணீர் திறந்து விடக் கோரி செல்போன் டவரில் ஏறி விவசாயிகள் போராட்டம்

பொதுப்பணித்துறை அதிகாரிகள் தண்ணீர் திறக்க உடன்படததால், ஆத்திரமடைந்த விவசாயிகள் உப்பாறு அணை பொறியாளர் அலுவலகம் அருகில் இருந்த செல்போன் கோபுரத்தின் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள உப்பாறு அணைக்கு திருமூர்த்தி அணையில் இருந்து பி.ஏ.பி பாசனத் திட்டத்தில் உபரி நீரைத் திறந்துவிடக்கோரி விவசாயிகள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் சார்பில் விவசாயிகளை 4 முறை பேச்சுவார்த்தைக்கு அழைத்து பின்னர் கடைசி நேரத்தில் கூட்டத்தை ரத்து செய்வதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து விவசாயிகள் உப்பாறு அணையில் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். போராட்டத்தின் போது தாராபுரம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் பேச்சு வார்த்தை நடைபெற்றது. பேச்சுவார்த்தையில் விவசாயிகளுக்கு தண்ணீர் தருவதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் வாய்மொழி உத்தரவு தெரிவித்தனர்.

ஆனால் கூறியவாறு தண்ணீர் கொடுக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் உடன்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் மீண்டும் 100-க்கும் மேற்பட்டோர் உப்பாறு அணையின் பொறியாளர் அலுவலகம் முன்பு 19-வது நாளாக இன்று காத்திருப்பு . போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில் அருகில் இருந்த செல்போன் கோபுரத்தின் மீது ஏறி உப்பாறு பாசன விவசாயிகள் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர் சிவக்குமார் ஆகிய 8-பேர் தற்போது தண்ணீர் வழங்க வலியுறுத்தி செல்போன் கோபுரம் மீது அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Newsletter

கோவை வீரபாண்டி பிரிவில் மண் கடத்தி வந்ததாக 4 லாரிகள் பறிமுதல்

சத்தியமங்கலம் பகுதி விவசாயிகளுக்கு அரசு வழங்கிய இலவச மண் அள்ளும் அனுமதியை முறைகேடாகப் பயன்படுத்தி, வீரபாண்டி பிரிவில் பு...

இரவில் மர்ம நபர்கள் தாக்கியதாக ரத்தக் காயங்களுடன் போலீசாரிடம் வாலிபர் புகார்

கோவை ரேஸ் கோர்ஸ் காவல் நிலையம் அருகே கையில் ரத்த காயங்களுடன் கூலித் தொழிலாளி ஒருவர் தன்னை சிலர் தாக்க முயன்றதாக போலீசாரி...

கோவையில் ரயில் மோதி 2 பெண் தூய்மைப் பணியாளர்கள் உயிரிழப்பு

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் ரயில்வே தண்டவாளத்தில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு பெண் ஒப்பந்தப் பணியாளர்கள் ரயில...

கள்ளிமடை துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை

கள்ளிமடை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் காமராஜ்...

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை அறிவிப்பு

சோமையம்பாளையம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக ஆகஸ்ட் 14ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வர...

கோவை பீளமேடு வார்டு 27-ல் அங்கன்வாடி மையம், தூய்மைப் பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேட்டில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் அங்கன்வாடி மையம், சாலையோர தூய்மை, குப்பை அகற...