அவிநாசியில் உள்ள அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் கும்பாபிஷேகம் – பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்பு

விழாவின் முக்கிய நாளான இன்று என்குணத்தோன் ஆகிய அவிநாசி நாதருக்கு அதிகாலை 6 மணிக்கு துவங்கிய எட்டாம் கால வேள்விப்பூசை 8 மணி வரை நடைபெற்றது. இதில் அமைச்சர் சாமிநாதன், மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துதாஸ் உட்பட பல ஆயிரம் பேர் கலந்துகொண்டனர்.


திருப்பூர்: கொங்கேழு சிவாலயங்களில் முதன்மையாகக் கொண்டதும், முதலையுண்ட பாலனை சுந்தரமூர்த்தி நாயனார் தேவாரப் பாடல் பாடி உயிருடன் மீட்டெடுத்ததும், மூர்த்தி-தலம்-தீர்த்தம் என மும்மைச் சிறப்பு வாய்ந்ததுமான பெருமை கொண்ட பழைமையான திருத்தலமாக விளங்கும் திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் உள்ள ஸ்ரீ கருணாம்பிகை உடனமர் ஸ்ரீ அவிநாசிலிங்கேஸ்வரர் திருக்கோயில் கும்பாபிஷேகம் 14 ஆண்டுகளுக்குப் பின் இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது.

அமைச்சர் மு.பெ.சாமிநாதன், மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் மற்றும் பல்வேறு ஆதீனங்கள் கலந்து கொண்டனர். 250 க்கும் மேற்பட்ட உபயதாரர்கள் நன்கொடையில் சுமார் 4 கோடி ரூபாய்க்கும் மேல் செலவில் பிரம்மாண்டமாக பல்வேறு திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு சிறப்பாக நிறைவு செய்யப்பட்ட இக்கோயிலின் கும்பாபிஷேக விழா கடந்த ஜனவரி மாதம் 24ம் தேதி மூத்த பிள்ளையார் வழிபாடு அனுமதி பெறுதல் மற்றும் ஆனைமுகத்தோன் வேள்வியுடன் துவங்கியது.

கைலாயம் போல் காட்சியளிக்கும் பிரம்மாண்ட யாக சாலையில் 79 குண்டங்கள் அமைக்கப்பட்டு நூறு சிவாச்சாரியார்கள் கொண்டு ஜனவரி 29-ம் தேதி துவங்கிய முதல் கால வேள்விப்பூசை அடுத்தடுத்த நாட்களில் இரண்டு முதல் ஏழு வரை நாளொன்றுக்கு இரண்டு கால வேள்விப்பூசை என நேற்று இரவு வரை ஏழு கால வேள்விப் பூசைகள் நடைபெற்றது.



இந்நிலையில், நேற்றைய தினம் கோயிலில் தங்க முலாம் பூசிய சுமார் 50 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிதாக செய்யப்பட்டு நிறுவப்பட்ட கொடிமரம், கனக சபை, பாலதண்டாயுதபாணி, 63 நாயன்மார்கள் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து, விழாவின் முக்கிய நாளான இன்று என்குணத்தோன் ஆகிய அவிநாசி நாதருக்கு அதிகாலை 6 மணிக்கு துவங்கிய எட்டாம் கால வேள்விப்பூசை 8 மணி வரை நடைபெற்றது.

இந்த எட்டாம் கால வேள்விப் பூசை வரை நூறு சிவாச்சாரியர்களால் எட்டு லட்சம் ஆஹூதிகள் அர்ச்சிக்கப்பட்டு, தொடர்ந்து வேள்விப்பூசையில் வைக்கப்பட்டிருந்த திருக்குடங்களை சிவாச்சாரியர்கள் இறைவனின் பேரருளோடு சுமந்தவாரு திருக்கோயிலில் உலா வந்தனர். சரியாக இன்று காலை 09.17 மணியளவில் ஏழு நிலை கொண்ட ராஜகோபுரம், ஐந்து நிலை கொண்ட அம்மன் கோபுரம், மூலவர்களான அவிநாசிலிங்கேஸ்வரர், கருணாம்பிகையம்மன் மற்றும் வள்ளி தெய்வானை சமேத சுப்ரமண்யப்யப்யப் பெருமான் சன்னதி ஆகிய ஐந்து கோபுர கலசங்களுக்குளுக்குளுக்கு சிவாச்சாரியார்கள் ஒரு சேர திருக்குடங்களில் கொண்டு வந்த புனித தீர்த்தத்தால் பல்லாயிரம் பக்தர்களின் விண்ணைத் தொடும் நமச்சிவாய கோசங்கள் மத்தியில் மங்கள வாத்தியமும், தேவாரப் பாடலும் முழங்க கும்பாபிஷேகம் செய்தனர்.

அதைக்கண்ட பக்தர்கள் பக்திப் பரவசத்தில் கண்ணீர் மல்க இறைவனை வழிபட்டனர். ஹெலிகாப்டர் மூலமாக ராஜகோபுரங்களுக்கு மலர்கள் தூவி சிறப்பு செய்யப்பட்டது. கோயிலை சுற்றி சுமார் ஒரு கிலோ மீட்டர் சுற்றளவில் தன்னார்வார்கள் பங்களிப்பில் பக்தர்களுக்கு பெரிய ட்ரோன் மூலம் புனித தீர்த்தம் தெளிக்கப்பட்டது. விழாவை முன்னிட்டு தன்னார்வளர்கள் சார்பில் பல்வேறு திருமணம் மண்டபங்களில் பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டிருந்தது.

அவிநாசி பேரூராட்சி சார்பாக தன்னார்வளர்களின் பங்களிப்புடன் தற்காலிக கழிப்பறைகள் அமைக்கப்பட்டு உடனுக்குடன் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து, பெருந்திருமஞ்சனம், பேரொளி ஆராதனையும், மாலை 6 மணிக்கு திருக்கல்யாண வைபவமும் நிறைவாக இரவு பஞ்ச மூர்த்திகள் திருவீதி உலாவும் நடைபெற உள்ளது. கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் சரிவு: கோவையில் குடிநீர் விநியோக இடைவெளி 5 நாட்களாக அதிகரிக்க திட்டம்

மழையின்மை காரணமாக சிறுவாணி அணையின் நீர்மட்டம் 29 அடியாக குறைந்துள்ளது. வடகிழக்கு பருவமழை வரை சமாளிக்க குடிநீர் விநியோக இ...

கோவை வெள்ளக்கிணறு பகுதியில் பாதாள சாக்கடை குழியில் சிக்கிய தொழிலாளர்கள் பேருந்து; JCB மூலம் மீட்பு

கோவை வெள்ளக்கிணறு பகுதியில் தனியார் தொழிற்சாலை பணியாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து, சரியாக மூடப்படாத பாதாள சாக்கடை குழியி...

சரவணம்பட்டி, மேட்டுப்பாளையத்தில் போலீசார் சோதனை - போதைப் பொருள் கடத்தல்காரர்கள் 3 பேர் கைது

கோவை சரவணம்பட்டி அரசு டாஸ்மாக் பார் அருகே தடை செய்யப்பட்ட போதைப் பாக்குகள் விற்பனை செய்த சிவகங்கை வாலிபர் கைது. 27.8 கில...

ஈரோடு-திருப்பூர் இடையே ரயில் பாலப்பணி: மூன்று ரயில்கள் தாமதம்

ஈரோடு-திருப்பூர் இடையே உள்ள உத்துக்குளி ரயில்வே யார்டில் ரயில் பாலப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால் செப்டம்பர் 13, 1...

கற்பகம் பொறியியல் கல்லூரியில் யுவா 2026 முதலாமாண்டு மாணவர்கள் வரவேற்பு நிகழ்ச்சி

கோவை ஒத்தக்கால்மண்டபத்தில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் செயற்கை நுண்ணறிவு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைகளின் மு...

கோவை மேற்கு மண்டலத்தில் காமராஜர் உணவு திட்ட சமையல் கூடத்தில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா மேற்கு மண்டலத்தில் பெருந்தலைவர் காமராஜர் உணவு திட்ட சமையலகம், வடவள்ளி பாதாள சாக்கட...