பல்லடத்தில் பத்திரிகையாளர் நேசபிரபு கொலை முயற்சி வழக்கில் ஒருவர் சரண்

செய்தியாளர் வெட்டப்பட்டது தொடர்பாக, பிரவீன், சரவணன், பாலபாரதி, ஹரிகரன், ஜெயபிரவீன், முகமது சபி ஆகியோர் கைது செய்யப்பட்டன். மேலும் இதில், தொடர்புடைய சிலரை போலீசார் தேடி வந்த நிலையில், பல்லடத்தை சேர்ந்த அன்பு கிருபாகரன் என்பவர் கோவை ஜே.எம்:7, கோர்ட்டில் நேற்று (பிப்.1) சரணடைந்தார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில் தனியார் தொலைக்காட்சி செய்தியாளராக பணியாற்றி வருபவர் நேச பிரபு. சட்ட விரோதமாக பார் நடத்தியது தொடர்பாக செய்தி வெளியிட்டதால், கடந்த 24ம் தேதி, மர்ம கும்பல் அவரை சரமாரியாக அரிவாளால் வெட்டி விட்டு தப்பிச்சென்றது.

படுகாயமடைந்த நேச பிரபுவுக்கு, கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. காமநாயக்கன்பாளையம் போலீசார் வழக்கு பதிந்து, தனிப்படை அமைத்து கும்பலை தேடி வந்தனர். இச்சம்பவம் தொடர்பாக, பிரவீன், சரவணன், பாலபாரதி, ஹரிகரன், ஜெயபிரவீன், முகமது சபி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மேலும் தொடர்புடைய சிலரை போலீசார் தேடி வந்த நிலையில், பல்லடத்தை சேர்ந்த அன்பு கிருபாகரன் 20, கோவை ஜே.எம்:7, கோர்ட்டில் நேற்று (பிப்.1) சரணடைந்தார்.

அவரை நீதிமன்ற காவலில் வைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டதை தொடர்ந்து, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Newsletter

திமுக தேர்தல் அறிக்கையில் மின்சார கோரிக்கைகள் இல்லை: மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு ஏமாற்றம்

திமுக தேர்தல் அறிக்கையில் மின்கட்டணம் குறைப்பு, நிலை கட்டணம் குறைப்பு உள்ளிட்ட மின்சாரத்துறை கோரிக்கைகள் இடம்பெறாதது மறு...

சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம்: அதிமுக தேர்தல் அறிக்கையை தொழில்துறை வரவேற்பு

Coimbatore: சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம் வழங்குவது தொடர்பான அதிமுக தேர்தல் அறிக்கை...

சாதனைகளை கூறி வெற்றி பெறுவேன்; யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை - செந்தில் பாலாஜி

கோவை தெற்கு தொகுதியில் DMK வேட்பாளர் செந்தில் பாலாஜி தேர்தல் பணி குழு அலுவலகத்தை காந்திபுரத்தில் திறந்து வைத்தார். எதிரண...

கோவையை உலகத் தர நகரமாக மாற்ற கருத்தரங்கம்

கோவை நவஇந்தியாவில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் “கோயம்புத்தூரை உலகத் தர நகரமாக மாற்றுவோம்” கருத்தரங...

மகாவீர் ஜெயந்தி: மார்ச் 31ல் இறைச்சி விற்பனைக்கு தடை - கோயம்புத்தூர் மாநகராட்சி அறிவிப்பு

மகாவீர் ஜெயந்தி விழாவையொட்டி மார்ச் 31, 2026 அன்று கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதியில் அனைத்து விதமான இறைச்சி விற்பனை மற்...

கவுண்டம்பாளையம் தொகுதியில் NTK வேட்பாளர் கலாமணி ஜெகநாதன் வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக கலாமணி ஜெகநாதன் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தா...