பொட்டியம்பாளையத்தில் கஞ்சா சாக்லேட் விற்பனையில் ஈடுபட்ட ஒரிசா மாநிலத்தை சேர்ந்த நபர் கைது

உடுமலை, குடிமங்கலம், தாராபுரம், பொள்ளாச்சி போன்ற பகுதிகளில் கல்லூரி மாணவர்கள், லாரி ஓட்டுநர்கள் மற்றும் மட்டை மில், செங்கல்சூளை, நூல்மில், பனியன்கம்பெனி. போன்றவற்றில் வேலை பார்க்கும் கூலி தொழிலாளர்களுக்கு கஞ்சா சாக்லேட் விற்பனை செய்து வந்தது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த குடிமங்கலம் அருகே உள்ள பொட்டியம்பாளையம் பகுதியில் 'கஞ்சா சாக்லெட் விற்கப்படுவதாக, அப்பகுதி பொதுமக்கள் தாராபுரம் மதுவிலக்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் கிடைத்ததும், மதுவிலக்கு காவல் நிலைய ஆய்வாளர் கோவர்த்தனாம்பிகை தலைமையிலான போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

அப்போது கஞ்சா சாக்லெட் விற்பனையில் ஈடுபட்ட ஒரிசா மாநிலத்தை சேர்ந்த ஜஜாபூர் மாவட்டம் பிங்கர்புன் பகுதியைச் சேர்ந்த தீபா பரத் பாடி (32) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து, 3.1/2-கிலோ எடை உள்ள கஞ்சா சாக்லெட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.



அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் உடுமலை, குடிமங்கலம், தாராபுரம், பொள்ளாச்சி போன்ற பகுதிகளில் கல்லூரி மாணவர்கள், லாரி ஓட்டுநர்கள் மற்றும் மட்டை மில், செங்கல்சூளை, நூல்மில், பனியன்கம்பெனி. போன்றவற்றில் வேலை பார்க்கும் கூலி தொழிலாளர்களுக்கு விற்பனை செய்து வந்ததாக போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

மேலும் இவர் தொடர்புடைய நபர்கள் யார் இருக்கிறார்கள் என்ற கோணத்தில் போலீசார் அடுத்த கட்ட விசாரணையை தொடங்கியுள்ளனர். மேலும் கைது செய்யப்பட்டவரை தாராபுரம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவையில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

அரசாணைகளின்படி அரசு அலுவலகங்களில் அம்பேத்கர், பெரியார், அண்ணா, காமராஜர் உள்ளிட்ட சகிக்க நீதி தலைவர்களின் படங்களை வைக்க வ...

கோவையில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண்.5, 53, 87 பகுதிகளில் 12.09.2026 அன்று ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்ட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி - ஐபிஎம் ஹேக்கத்தான்: 16 மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து 12.09.2026 மற்றும் 1...

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...