கோடைக் காலம் நெருங்குவதை முன்னிட்டு கோவையில் தர்ப்பூசணி விற்பனை அதிகரிப்பு

கோவையின் பல்வேறு இடங்களில் சாலையோரங்களில் தர்ப்பூசணி பழக்கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு தர்பூசணி பழச்சாறும் போடடும். இதனால் பலரும் தர்பூசணி பழங்கள் மற்றும் தர்பூசணி பழச்சாற்றை விரும்பி உட்கொள்கின்றனர்.


கோவை: கோடைக் காலம் நெருங்குவதை முன்னிட்டு கோவையில் தர்ப்பூசணி விற்பனை களைக்கட்டத் துவங்கியுள்ளது. கோடை காலம் துவங்க உள்ள நிலையில் இப்போது இருந்தே வெயிலின் தாக்கம் அதிகரித்து விட்டது. இதனால் பொதுமக்கள் பலரும் உடலுக்கு குளிர்ச்சியூட்டும் உணவுகளை உட்கொள்ள துவங்கிவிட்டனர்.

கம்பங்கூழ், நீர்மோர், இளநீர், பழச்சாறு ஆகியவற்றை அதிகளவு அருந்த துவங்கிவிட்டனர்.



இந்நிலையில் வெயில் காலத்தில் அதிகமானோர் விரும்பி சாப்பிடும் தர்பூசணி விற்பனை கோவையில் துவங்கி உள்ளது.



இந்த பழத்தில் நீர் சத்துக்கள் அதிகம் உள்ளதால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் உட்கொள்வர்.



கோவையின் பல்வேறு இடங்களில் சாலையோரங்களில் தர்ப்பூசணி பழக்கடைகள் அமைக்கப்பட்டுள்ளன.



இங்கு தர்பூசணி பழச்சாறும் போடடும். இதனால் பலரும் தர்பூசணி பழங்கள் மற்றும் தர்பூசணி பழச்சாற்றை விரும்பி உட்கொள்கின்றனர்.

இனி வரும் நாட்களில் வெயிலின் தாக்கம் அதிகரிக்க கூடும் என்பதால் இறக்குமதியை அதிகரிக்க வியாபாரிகள் முடிவெடுத்துள்ளனர்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...