கோழிகமுத்தி வளர்ப்பு யானை முகாம் பகுதியில் தமிழக வனத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாகு ஆய்வு

வால்பாறை பகுதியில் தாயை விட்டு பிரிந்த நான்கு மாத யானை குட்டியை மீண்டும் தாயுடன் சேர்த்த வனசரகர் மணிகண்டன் உள்ளிட்ட பணியாளர்களுக்கு தமிழக வனத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாகு பாராட்டு சான்றிதழும், ரொக்க பரிசாக 5000 ரூபாயும் வழங்கினார்.


கோவை: பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட கோழிகமுத்தி வளர்ப்பு யானை முகாம் உள்ளிட்ட பகுதிகளில் தமிழக வனத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாகு ஆய்வு மேற்கொண்டார்.



தமிழ்நாடு வனத்துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்பிரியா சாகு பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட டாப்ஸ்லிப் கோழிகமுத்தி யானை முகாமுக்கு வருகை தந்து அங்குள்ள வளர்ப்பு யானைகள் பராமரிப்பது குறித்து கேட்டிருந்த சுப்ரியா சாகு, அப்பகுதியில் குடியிருந்து வரும் மலைவாழ் மக்களிடம் குறைகளை கேட்டுறிந்ததோடு, பழங்குடியின மக்களுக்கு வீடு கட்டித் தரப்படும் இடங்களை பார்வையிட்டு ஆலோசனை மேற்கொண்டார்.



இதைத்தொடர்ந்து அக்காமலைக்கு சென்ற கூடுதல் தலைமைச் செயலாளர், வரையாடுகள் வாழ்விடம் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.



மேலும் வால்பாறை பகுதியில் தாயை விட்டு பிரிந்த நான்கு மாத யானை குட்டியை மீண்டும் தாயுடன் சேர்த்த வனசரகர் மணிகண்டன் உள்ளிட்ட பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழும் ரொக்க பரிசாக 5000 ரூபாயும் வழங்கினார்.

மேலும் மந்திரிமட்டம் பகுதியில் பராமரிக்கப்பட்டு வரும் புலியை நேரில் பார்த்து அதன் பராமரிப்பு குறித்து வனத்துறை அதிகாரியிடம் கேட்டிருந்தார். இந்த ஆய்வின்போது கோவை மண்டல தலைமை வன பாதுகாவலர் ராமசுப்பிரமணியம், துணை இயக்குனர் பார்க்கவே தேஜா உள்ளிட்ட வனத்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Newsletter

வீட்டின் முன் நிறுத்தியிருந்த ஸ்கூட்டர் திருட்டு: கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் சிசிடிவி ஆய்வு

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்கூட்டர் திருட்டுப்போன சம்பவத்தில், ரேஸ்கோர்ஸ்...

கோவையில் நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற இளைஞரை கடித்து விரட்டிய தெரு நாய்கள்..! - சிசிடிவி

கோவை துடியலூர் அருகே நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற நபரை தெருநாய்கள் விடாமல் குரைத்து, கடித்து துரத்தும் சிசிடிவி...

Bharathiar University Hosts Workshop on Curriculum Design and Outcome-Based Education

Bharathiar University, Coimbatore, in association with TANSCHE, organised a one-day workshop on curriculum design and as...

பீளமேடு வார்டில் மரம் அகற்றல், கொசு ஒழிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் மின்வாரியம் வெட்டிய மரங்களை அகற்றுதல், கொசு மருந்து தெளித்தல் மற்றும் சாக்கடை ச...

கோவையில் அடல் ஓய்வூதியத் திட்டம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவையில் மத்திய அரசின் அடல் ஓய்வூதியத் திட்டம் (Atal Pension Yojana) குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கனரா வங...

டிஜிட்டல் மயமாகும் ஓட்டுநர் உரிமம், ஆர்.சி.: மாற்றுப் பணி கோரும் கோவை ஒப்பந்த ஊழியர்கள்

அரசு உத்தரவின் பேரில், ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச் சான்று (RC) உள்ளிட்ட ஆவணங்கள் டிஜிட்டல் முறைக்கு மாற்றப்ப...