கோவை மேட்டுப்பாளையம் சாலையில் வாகனத்தை நிறுத்திய போலீசுக்கு அடி-மூவர் கைது

போக்குவரத்து போலீசை தாக்கிய செல்வபுரம் பகுதியைச் சேர்ந்த அப்துல் கலாம் சாகுல் ஹமீத், ஹபீப் அலி, அலாவுதீன் முகமது ஹுசைன் ஆகிய மூன்று பேரை போலீசார் கைது செய்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.


கோவை: கோவை ஆர். எஸ். புரம் போக்குவரத்து போலீசில் முதல் நிலைக் காவலராக பணியாற்றி வருபவர் ஆனந்த். இவர் மேட்டுப்பாளையம் சாலையில் நேற்று (ஜன.19) சக போலீசார் உடன் இணைந்து வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவ்வழியாக இரு சக்கர வாகனம் ஒன்றில் மூன்று பேர் வந்தனர்.

அவர்களை தடுத்து நிறுத்திய ஆனந்த் இருசக்கர வாகனத்தில் மூன்று பேர் பயணித்ததற்கு அபராத தொகையை கட்ட கூறினார். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் ஆனந்தை தாக்கியுள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் சாய்பாபா காலனி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று போக்குவரத்து போலீசை தாக்கிய செல்வபுரம் பகுதியைச் சேர்ந்த அப்துல் கலாம் சாகுல் ஹமீத், ஹபீப் அலி, அலாவுதீன் முகமது ஹுசைன் ஆகிய மூன்று பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Newsletter

கோவை மாநகராட்சி மேற்கு மண்டல வளர்ச்சிப் பணிகளை மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் வளர்ச்சிப் பணிகளை ஆணையர் கட்டா ரவி தேஜா IAS நேரில் ஆய்வு செய்தார். காலை உணவு திட்ட சம...

கோவை மாநகராட்சி மேற்கு மண்டல வளர்ச்சிப் பணிகளை மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் வளர்ச்சிப் பணிகளை ஆணையர் கட்டா ரவி தேஜா IAS நேரில் ஆய்வு செய்தார். காலை உணவு திட்ட சம...

கோவை கணேசபுரம் பள்ளி கட்டுமானத்தை மேயர் நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம் கணேசபுரம் பகுதியில் ரூ.95 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் மாநகராட்சி நடுநிலைப் பள...

கோவை பீளமேடு பகுதியில் மழைநீர் வடிகால், சாக்கடை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் ரூ.10 லட்சம் மழைநீர் வடிகால் பணி, சாக்கடை அடைப்பு சரிசெய்தல், குப்பை சேகரிப்பு, மரக்குப...

கோவை மாநகராட்சியில் சாலையோர வியாபாரிகளுக்கான வங்கிக் கடன் சிறப்பு முகாம்

கோவை மாநகராட்சியில் சாலையோர வியாபாரிகளுக்கு ரூ.15,000 வங்கிக் கடன் வழங்க ஆகஸ்ட் 24 முதல் 29 வரை பிரதான அலுவலகம் மற்றும்...

ஓணம் பண்டிகை: பெங்களூரு-திருவனந்தபுரம் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கம்

ஓணம் பண்டிகையையொட்டி பயணிகளின் அதிகரித்த தேவையை கருத்தில் கொண்டு தெற்கு ரயில்வே பெங்களூரு SMVT மற்றும் திருவனந்தபுரம் வட...