கோவையில் விதிகளை மீறி கட்டப்பட்ட வணிகக் கட்டடத்துக்கு சீல் வைப்பு

இடையர் வீதியில் கீழ் தளம் மற்றும் முதல் தளம் என 3,821 சதுர அடி பரப்பு கட்டடத்துக்கு அனுமதி வாங்கி விட்டு, ஆயிரத்து 528 சதுர அடி பரப்புக்கு, 19 அறைகளுடன் கட்டப்பட்ட வணிக கட்டடத்திற்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.


கோவை: கோவை நகருக்குள் அனுமதியற்ற, விதிமீறல் கட்டடங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சமீபத்தில் ஒரு வழக்கில், 'அனுமதியற்ற கட்டடம் கட்டுவோர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், கோவையில், அனுமதியற்ற கட்டடம் மீது, மாநகராட்சி நிர்வாகம் நேற்று அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி கோவை, இடையர் வீதியில் கீழ் தளம் மற்றும் முதல் தளம் என 3,821 சதுர அடி பரப்பு கட்டடத்துக்கு அனுமதி வாங்கி விட்டு, கீழ்தளம் மற்றும் இரண்டு தளங்கள் என மூன்று தளங்களில், 11 ஆயிரத்து 528 சதுர அடி பரப்புக்கு, 19 அறைகளுடன் வணிகக் கட்டடம் கட்டப்பட்டிருந்தது. அவற்றில், பல அறைகள், தங்க நகை தயாரிப்புக்கான தொழிற்கூடங்களுக்கு வாடகைக்கு விடப்பட்டிருந்தன.

இதையறிந்த மாநகராட்சி நகர அமைப்பு அதிகாரிகள், அந்த கட்டடத்துக்கு நோட்டீஸ் கொடுத்தனர். அங்கிருந்த தொழிற்கூடங்களை காலி செய்ய அவகாசம் தரப்பட்டது. கோவை மாநகராட்சி நகர அமைப்பு அலுவலர் குமார் தலைமையில், உதவி நகர அமைப்பு அலுவலர் ஜெயலட்சுமி மற்றும் ஊழியர்கள், நேற்று காலையில் அந்த கட்டடத்தை மூடி 'சீல்' வைத்தனர்.

மேலும் விதிமீறல் கட்டடம் என்பதற்கான அறிவிப்பையும் அங்கு ஒட்டினர். பல ஆண்டுகளுக்குப் பின்பு, கோவையில் விதிமீறல் வணிகக் கட்டடம் மீது எடுத்துள்ள இந்த அதிரடி நடவடிக்கை, விதிகளை மீறி வணிகக் கட்டடம் கட்டியுள்ள பலருக்கும் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதேபோல, 'பார்க்கிங்'கை வணிகப்பகுதியாக மாற்றிய கட்டடங்களுக்கும் சீல் வைக்க வேண்டுமென்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

Newsletter

வி தி லீடர் ஆலோசனைக் கூட்டத்தில் 500 பேர் பங்கேற்பு

பெரியநாயக்கன்பாளையம் அருகே நடைபெற்ற வி தி லீடர் இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று உறுப்ப...

மலுமிச்சம்பட்டி சிக்னலில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பல் பிடிப்பு

கோவை மலுமிச்சம்பட்டி சிக்னலில் பச்சிளம் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பலை இளைஞர்கள் பிடித்து போலீசார் மற்றும் குழந...

தேவனாம்பாளையம் பகுதியில் நாளை மின்தடை

தேவனாம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், தேவனாம்பாளையம் உள்ளிட்ட பல பகுதிகளில்...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவருக்கு குண்டர் சட்டம்

கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீது க...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவர் மீது குண்டர் சட்டம்

கோவை மாவட்டத்தில் சட்டவிரோத கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீத...

சிறுபான்மையினர் நல விடுதிகளில் சேர ஜூலை 15 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்ட சிறுபான்மையினர் நல விடுதிகளில் கல்லூரி, ஐடிஐ மற்றும் பாலிடெக்னிக் மாணவர்கள் சேருவதற்கான தகுதிகள் அறிவிக்கப்ப...