ஐஸ்கிரீம் குச்சியில் ஆயிரத்து 330 திருக்குறளை எழுதி பொள்ளாச்சியை சேர்ந்த ஆசிரியை அசத்தல்

தமிழ் மொழி மீதும் திருக்குறள் மீதும் அதிகம் பற்று கொண்ட ஆசிரியர் கீதா, திருக்குறளையும் அதில் உள்ள வாழ்க்கை முறை கருத்துக்களையும் மாணவர்களிடையே கொண்டு சேர்க்கும் வகையில் ஆயிரத்து 330 திருக்குறளை நோட்டில் எழுதி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்துள்ளார்.


கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள சின்னாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கீதா. அறிவியல் பட்டதாரி ஆசிரியரான இவர் பொள்ளாச்சி அருகே உள்ள ஏரிப்பட்டி அரசு பள்ளியில் பணியாற்றி வருகிறார்.

தமிழ் மொழி மீதும் திருக்குறள் மீதும் அதிகம் பற்று கொண்ட ஆசிரியர் கீதா, திருக்குறளையும் அதில் உள்ள வாழ்க்கை முறை கருத்துக்களையும் மாணவர்களிடையே கொண்டு சேர்க்கும் வகையில் ஆயிரத்து 330 திருக்குறளை நோட்டில் எழுதி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்துள்ளார்.

இந்த நிலையில் தன்னால் பயின்று வரும் மாணவர்களும் மட்டுமல்ல, அனைத்து தரப்பு மாணவர்களும், பொது மக்களும் திருக்குறள் குறித்து அறிந்து கொள்ளும் வகையில் ஐஸ் கிரீம் குச்சியில் ஆயிரத்து 330 திருக்குறளை எழுதி பல்வேறு இடங்களில் நடைபெறும் கண்காட்சியில் வைத்து மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தமிழக கல்வித்துறை சார்பில் தென்கொரியாவில் தமிழ் சங்கம் சார்பில் நடைபெற்ற வானவில் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அறிவியல் பட்டதாரி ஆசிரியர் கீதா, தான் ஐஸ்கிரீம் குச்சியில் எழுதிய ஆயிரத்து 330 திருக்குறளில் 650 திருக்குறளை எழுதிய குச்சியை தமிழக கல்வித்துறை அமைச்சர் அன்பின் மகேஷ் பொய்யாமொழி மூலம் தென் கொரியா தமிழ் சங்கத்திற்கு பரிசாக வழங்கினார்.

மீதமுள்ள ஐஸ்கிரீம் குச்சியில் எழுதிய திருக்குறளை மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கண்காட்சியாக ஆங்காங்கே வைத்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். கொரோனா முழு அடைப்பு காலத்தில் பள்ளிகள் விடுமுறை நாட்களில் வீட்டிலிருந்து மாணவர்களுக்கு பாடம் எடுத்ததற்காக தமிழக அரசு சார்பில் நல்லாசிரியர் விருதும் கடந்த 2021 ஆம் ஆண்டு வழங்கப்பட்டுள்ளது.

உலகப் பொதுமறையான திருக்குறளில் சொல்லாத கருத்துக்களை இல்லை. அந்த கருத்துக்கள் குறித்து மாணவர்கள், பொதுமக்கள் இடையே விழிப்புணர்வை வெளிப்படுத்தும் வகையில் ஐஸ்கிரீம் குச்சியில் திருக்குறளை எழுதி இருப்பதாகவும், மாணவர்களுக்கு திருக்குறளை மனப்பாடம் செய்ய வைக்கும் முயற்சியில் ஐஸ்கிரீம் குச்சியில் எழுதி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதாக ஆசிரியர் கீதா தெரிவித்தார்.

Newsletter

Teen Girl Dies After Family of Three Consumes Pesticide Near Perur in Coimbatore

In a tragic incident, a family of three allegedly consumed pesticide at their residence in Arumugagoundanur near Perur,...

கோவையில் இயற்கை உபாதைக்கு சென்றவரிடம் கத்திமுனையில் வழிப்பறி: 2 பேர் கைது

கோவை புலியகுளம் அம்மன்குளம் பகுதியில் இயற்கை உபாதைக்கு சென்ற எலக்ட்ரீசியன் மிதுன்குமாரிடம் கத்தி காட்டி மிரட்டி ரூ.7 ஆயி...

Biker Run Over by Bus on Sathy Road in Coimbatore

In a horrific accident, 33-year-old Balamurugan died after falling from his bike and being run over by a bus near Prozon...

தொண்டாமுத்தூர் அரசு விடுதி உணவு வீடியோ: தவறான தகவல் என அதிகாரி தெரிவிப்பு

கோவை தொண்டாமுத்தூரில் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் தங்கும் சமூக நல விடுதியில் 48 மாணவர்கள் தங்கியுள்ளனர். சப்பாத்தி முறைய...

கோவையில் சாலை சீரமைப்பு மற்றும் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: அமைச்சர் தலைமையில் ஆய்வுக் கூட்டம்

கோவை ஆர்.எஸ்.புரம் கலையரங்கத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே. சம்பத்குமார் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்...

கோவையில் ‘டெங்கு விழிப்புணர்வு வீதி’ நிகழ்ச்சி

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்.67க்கு உட்பட்ட காந்திபுரம், நியூ சித்தாபுதூர் அன்னபூர்ணா லே-அவுட் பகுதியில் செ...