தமிழ்நாடு வேளான்மைப் பல்கலைக்கழகத்தில் கால்நடைகளுக்கு மரியாதையை செலுத்தும் விதமாக பட்டி பொங்கல் கோலாகலம்

பட்டி பொங்கலை முன்னிட்டு வேளாண் பல்கலையில் உள்ள, பருத்தி, நெல் மற்றும் தோட்டக்கலை துறைகளில் பணிபுரியும் விவசாய பண்ணை தொழிலாளர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினருக்கு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன.


கோவை: கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலையில், ஒவ்வொரு ஆண்டும் பட்டி பொங்கல் விழா விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி பட்டி பொங்கல் விழாவுக்கு, மாடுகளை ஊர்வலமாக அழைத்து வந்து சூரியனுக்கு படையல் வைத்து பொங்கலை, மாடுகளுக்கும் உணவாக கொடுத்தனர்.



வேளாண் பல்கலையில் உள்ள, பருத்தி, நெல் மற்றும் தோட்டக்கலை துறைகளில் பணிபுரியும் விவசாய பண்ணை தொழிலாளர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினருக்கு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. கயிறு இழுக்கும் போட்டிகள், சிலம்பாட்டம் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன.

போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு வேளாண் பல்கலை துணைவேந்தர் கீதாலட்சுமி அவர்கள் பரிசுகளை வழங்கினார். பின்னர் ஒன்பது திரவியங்கள் நிரப்பப்பட்ட பாத்தியில் பசுமாட்டை மிதிக்க வைத்தனர். இதில் நவதானிய குங்குமம் உள்ள பாத்தியில் பசு கால் வைத்ததால் இந்த ஆண்டு நல்ல மழை பெய்து விவசாயம் செழித்து மங்களகரமாக இருக்கும் என வேளாண் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் துணைவேந்தர் கீதாலட்சுமி கூறும்போது, பட்டி பொங்கல் விழா என்பது உழவர்களுக்கு மட்டுமல்ல, உழவுத் தொழிலோடு சம்பந்தப்பட்ட அனைத்து உயிர்களுக்கும் சேர்த்து கொண்டாடப்படும் பொதுவான விழாவாகும் எனவும், வேளாண் மக்கள் உழவுத்தொழில் செய்து அறுவடை செய்த தானியங்களை, இயற்கையின் கடவுளான சூரியனுக்கு படைத்து மகிழ்கின்ற நாளாக, ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

இதில் பட்டி மிதிக்கும் நிகழ்ச்சியில் 9 திரவியங்கள் நிரப்பப்பட்ட பாத்தியில் பசு மாட்டை மிதிக்க வைத்து, எந்த பாத்தியில் மிதிக்கிறதோ அந்த பாத்தியில் உள்ள பொருள் சார்ந்த தானியம் வளம் பெருகும் என்பது ஐதீகம். பாரம்பரியமாக இவ்விழா பல்கலைக்கழகத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருவது பண்ணை தொழிலார்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்துவதாக கூறினார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...