கோவை விமான நிலையத்தில் உள்நாட்டு விமான சேவைகள் குறைப்பு

கோவை, சென்னை இடையே இயக்கப்படும் 3 விமானங்கள், கோவை, ஹைதராபாத் இடையே இயக்கப்படும் 2 விமானங்கள் மற்றும் கோவை, பெங்களூர் இடையே இயக்கப்படும் 1 விமானம் ஆகியவற்றின் சேவை நிறுத்தப்பட்டுள்ளது.


கோவை: கோவை விமான நிலையத்திலிருந்து 27 உள்நாட்டு விமான சேவைகளும், 2 சர்வதேச விமான சேவைகளும் வழங்க முடியும் என்ற நிலையில் சமீப காலமாக விமான சேவைகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

விமானப் போக்குவரத்து தலைமை இயக்குநரகம் (DGCA) உத்தரவின்படி தனியார் விமான நிறுவனமான இண்டிகோவின் 30 விமான சேவைகள் நாடு முழுவதும் அண்மையில் நிறுத்தப்பட்டது. இதில் இண்டிகோ கோவைக்கு வழங்கிய 6 சேவைகள் பாதிப்புக்குள்ளாகி உள்ளது.

கோவை, சென்னை இடையே இயக்கப்படும் 3 விமானங்கள், கோவை, ஹைதராபாத் இடையே இயக்கப்படும் 2 விமானங்கள் மற்றும் கோவை, பெங்களூர் இடையே இயக்கப்படும் 1 விமானம் ஆகியவற்றின் சேவை நிறுத்தப்பட்டுள்ளது.

இம்மாதம் 4 ஆம் தேதி முதல் இந்த சேவை குறைப்பு துவங்கிய நிலையில் இதன் காரணமாக கோவையில் இருந்து இப்பகுதிகளுக்கு விமானம் வழியே செல்வது பயணிகளுக்கு சவாலாக இருக்கிறது. விமான சேவைகளுக்கான டிமாண்ட் அதிகரிக்க டிக்கெட் கட்டணமும் பெருமளவு உயர்ந்திருக்கிறது.

இதனால் விமான போக்குவரத்து தலைமை இயக்குனரகம் இந்த உத்தரவை அறிவித்திருக்கிறது என்பது முழுமையாக இன்னும் வெளிவரவில்லை என்றாலும் தகவல்களின்படி இண்டிகோ வைத்துள்ள A320 என்ற வகை விமானங்களில் ஏற்பட்ட சில தொழில்நுட்ப கோளாறுகள் காரணமாக இந்த விமான சேவைகள் நிறுத்தப்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது.

அதேபோல இண்டிகோ நிறுவனம் தனது A320வகை விமானத்திற்கு மாற்றாக சில இடங்களில் ATR இனம் மற்றொரு வகை விமானத்தை அறிமுகப்படுத்தவும் இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. இண்டிகோ விமான நிறுவனத்தில் A320 ரக விமானங்களே அதிகம் உள்ளது என்பதும், 2023ல் தனது விமானங்களில் எரிபொருளை 6 கிலோ வரை மிச்சப்படுத்துவதற்காக Flap - 3 landing எனும் அபாயகரமான தரையிறங்கும் முறையை பின்பற்ற தனது பைலட்டுகளுக்கு பரிந்துரைத்து, அதை பின்பற்ற வைத்ததற்காக அந்த நிறுவனத்திற்கு விமானப் போக்குவரத்து தலைமை இயக்குநரகம் ரூ.30 லட்சம் அபராதம் விதித்தது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் புதிய Pre-Incubation Centre மற்றும் Startup Studio தொடக்கம்

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தின் 'கற்பகம் புத்தாக்கம் மற்றும் இன்குபேஷன் கவுன்சில்' (KIIC), தனது புதிய 'Pre-Incubatio...

2016 ஆனைமலை இளைஞர் கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை: கோவை மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு

ஆனைமலை காவல் நிலையத்தில் குற்ற எண் 369/2016-ன் கீழ் பதிவான கொலை வழக்கில், மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த பாப்பான் @ சுதானந்தம...

ஜெம் வீரமணி வழக்கு: கோவை காவல் ஆணையர் உள்பட 2 ஐபிஎஸ் அதிகாரிகள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

ஜெம் வீரமணி வழக்கு தொடர்பாக கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் மற்றும் கூடுதல் ஆணையர் அருண் ஆகிய இரு மூத்த ஐபிஎஸ் அதிகா...

கோவை–போத்தனூர் இடையே பராமரிப்பு பணி: செப்.25, 26-ல் இரு மெமு ரயில் சேவையில் மாற்றம்

செப்டம்பர் 25 மற்றும் 26, 2026 ஆகிய தேதிகளில் கோவை-போத்தனூர் ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெற...

கோவையில் பார் ஊழியரை கத்தியால் மிரட்டி பணம் பறித்த ரவுடி கைது

கோவை புலியகுளம் ரோடு பங்கஜாமில் ரோடு பகுதியில் உள்ள சன்ரிச் 11 - 11 பாரில் ஊழியர் பாண்டியராஜனிடம் இலவச மதுபானம் கேட்டு ம...

கோவை தடாகம் சாலையில் ஆம்புலன்ஸ் பணிமனையில் தீ விபத்து

கோவை தடாகம் சாலையில் உள்ள கோயில்மேடு அருகே ஆம்புலன்ஸ் பணிமனையில் திடீரென தீ பரவியது. இதனால் கரும்புகை மேகங்களாக சுற்றுவட...