தொப்பம்பட்டி பிரிவில் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் எமரால்டு மருத்துவ நல மையம் திறப்பு

எமரால்டு ஜுவல் இண்டஸ்ட்ரி இந்தியா லிமிடெட் நிறுவனம் தொடங்கி 40 ஆண்டுகள் ஆவதை ஒட்டி இந்நிறுவனத்தின் சமூகப் பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ் கிரிசா அறக்கட்டளை மூலம் எமரால்டு மருத்துவ நல மையம் திறக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவை தொப்பம்பட்டி பிரிவு பகுதியில் செயல்பட்டு வரும் எமரால்ட் ஜுவல் இண்டஸ்ட்ரி இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ் கிரிஷா அறக்கட்டளை மூலம் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் குறைந்த செலவில் மருத்துவம் பார்த்துக் கொள்ளும் வகையில் அனைத்து வசதிகளுடன் கூடிய எமரால்டு மருத்துவ நல மையம் திறக்கப்பட்டுள்ளது. இதனை கே.ஜி.மருத்துவமனை தலைவர் பக்தவச்சலம் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.



கோவை தொப்பம்பட்டி பிரிவு பகுதியில் எமரால்டு ஜுவல் இண்டஸ்ட்ரி இந்தியா லிமிடெட் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனம் தொடங்கி 40 ஆண்டுகள் ஆவதை ஒட்டி இந்நிறுவனத்தின் சமூகப் பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ் கிரிசா அறக்கட்டளை மூலம் எமரால்டு மருத்துவ நல மையம் திறக்கப்பட்டுள்ளது.

இந்த மருத்துவ மையம் மூலம் அருகில் உள்ள கிராமப்புறம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள ஏழை எளிய மற்றும் அனைத்து மக்களும் பயன்பெறும் வகையில் சலுகை கட்டணத்தில் பல்வேறு மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்படுகிறது. இம்மையத்தில் மருத்துவரின் ஆலோசனை கட்டணமாக ரூபாய் 50 மட்டுமே பெறப்படுகிறது. மேலும் மருந்துகளுக்கு 20% வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.

இம்மையத்தின் திறப்பு விழாவில் கே.ஜி மருத்துவமனையின் தலைவர் பத்மஸ்ரீ பக்தவச்சலம் கலந்து கொண்டு ரிப்பன் பட்டி திறந்து வைத்தார். தொடர்ந்து சிறப்பு விருந்தினர்கள் குத்து விளக்கேற்றி மருத்துவமனை செயல்பாடுகளை தொடங்கி வைத்தனர்.

இந்நிகழ்ச்சியில் காவல்துறை ஆணையர் பாலகிருஷ்ணன், தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறையின் இணை இயக்குனர் சீனிவாசகம், எமரால்டு நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர் கே.சீனிவாசன், பெரியநாயக்கன்பாளையம் அரசு மருத்துவமனை மருத்துவர் சேரலாதன், குருடம்பாளையம் ஊராட்சி தலைவர் ரவி, மாவட்ட கவுன்சிலர் கார்த்திக், ஒன்றிய கவுன்சிலர் மாணிக்கம் உள்ளிட்ட சிறப்பு விருந்தினர்கள் மருத்துவமனையின் ஒவ்வொரு பிரிவுகளையும் ரிப்பன் வெட்டி திறந்து வைத்து மருத்துவமனையை பார்வையிட்டனர்

இந்த மருத்துவமனையில் பொது மருத்துவம், சர்க்கரை நோய்க்கான சிகிச்சை, குழந்தைகள் நலனுக்கான சிகிச்சை, பல் மருத்துவம் இருதய நோய்களுக்கான சிகிச்சை, மகளிர் நலம் மற்றும் மகப்பேறு மருத்துவம், ஆயுர்வேத மருத்துவம், இயற்கை மருத்துவம், உளவியல் சம்பந்தமான ஆலோசனைகள், பிசியோதெரபி, லேப், எக்ஸ்ரே உள்ளிட்ட பல்வேறு மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன.

தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்கள் கௌரவிக்கப்பட்டு சிறப்புரையாற்றினர்.



இதில் பேசிய கே.ஜி மருத்துவமனை தலைவர் பக்தவச்சலம் தனக்கே உரிய நகைச்சுவை பாணியில் கலகலப்பாக உரையாற்றினார். மேலும் இங்கு சிகிச்சை பெறும் நோயாளிகளில் மேல் சிகிச்சைக்காக கே.ஜி மருத்துவமனையில் சேரும்போது 25% கட்டண சலுகை வளங்குவதாக அறிவித்தார்.

தொடர்ந்து பேசிய எமரால்டு நிறுவனத் தலைவர் சீனிவாசன் எமரால்டு நிறுவனம் தொடங்கி 40 ஆண்டு ஆவதை ஒட்டி இந்த ஆண்டு 40 விதமான நல பணிகளை மேற்கொள்ள இருப்பதாக தெரிவித்தார். அதன் ஒரு பகுதியாகவே இம்மருத்துவ நல மையம் திறக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார், அதைத்தொடர்ந்து சிறப்பு விருந்தினர்கள் வாழ்த்துரை வழங்கினர். தொடர்ந்து அப்பகுதியைச் சேர்ந்த சிறுவர்களின் சிலம்பாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது.

இவ்விழாவில் கே.சி.டி தொண்டு நிறுவன ட்ரஸ்டி கருணாகரன், வெங்கட கோபால், எம்ராய்டு நிறுவன இயக்குனர் தியான், மருத்துவர் ராதிகா, சந்தோஷ் கிருஷ்ணா, மருத்துவர் முத்துக்குமார், தமிழ்செல்வன் ஊராட்சி கவுன்சிலர்கள் மற்றும் அரசு துறை அதிகாரிகள் எமரால்டு நிறுவனத்தின் இயக்குனர்கள், அலுவலர்கள், எமரால்டு நிறுவன ஊழியர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை மாநகராட்சி மேற்கு மண்டல வளர்ச்சிப் பணிகளை மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் வளர்ச்சிப் பணிகளை ஆணையர் கட்டா ரவி தேஜா IAS நேரில் ஆய்வு செய்தார். காலை உணவு திட்ட சம...

கோவை மாநகராட்சி மேற்கு மண்டல வளர்ச்சிப் பணிகளை மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் வளர்ச்சிப் பணிகளை ஆணையர் கட்டா ரவி தேஜா IAS நேரில் ஆய்வு செய்தார். காலை உணவு திட்ட சம...

கோவை கணேசபுரம் பள்ளி கட்டுமானத்தை மேயர் நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம் கணேசபுரம் பகுதியில் ரூ.95 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் மாநகராட்சி நடுநிலைப் பள...

கோவை பீளமேடு பகுதியில் மழைநீர் வடிகால், சாக்கடை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் ரூ.10 லட்சம் மழைநீர் வடிகால் பணி, சாக்கடை அடைப்பு சரிசெய்தல், குப்பை சேகரிப்பு, மரக்குப...

கோவை மாநகராட்சியில் சாலையோர வியாபாரிகளுக்கான வங்கிக் கடன் சிறப்பு முகாம்

கோவை மாநகராட்சியில் சாலையோர வியாபாரிகளுக்கு ரூ.15,000 வங்கிக் கடன் வழங்க ஆகஸ்ட் 24 முதல் 29 வரை பிரதான அலுவலகம் மற்றும்...

ஓணம் பண்டிகை: பெங்களூரு-திருவனந்தபுரம் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கம்

ஓணம் பண்டிகையையொட்டி பயணிகளின் அதிகரித்த தேவையை கருத்தில் கொண்டு தெற்கு ரயில்வே பெங்களூரு SMVT மற்றும் திருவனந்தபுரம் வட...