கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற நபரால் பரபரப்பு

கடந்த இரண்டு வருடமாக தன்னுடைய நிலத்திற்கு பட்டா, சிட்டா கேட்டு ஆட்சியரிடம் தொடர்ந்து மனு அளித்ததாகவும், எந்தவித நடவடிக்கை எடுக்காததால் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாகவும் தீக்குளிக்க முயன்ற சண்முகசுந்தரம் என்பவர் காவல்துறையினரிடம் தெரிவித்தார்.


கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை மக்கள் குறை தீர்ப்பு முகாம் நடைபெற்று வருகிறது. இதனிடைய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்க்கு இன்று மனு அளிக்க வந்த கோவை பட்டணம் பகுதியை சேர்ந்த சண்முகசுந்தரம் என்பவர் ஆட்சியர் அலுவலக நுழைவாயில் அருகே திடீரென பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்துள்ளார்.



இதனையடுத்து அங்கிருந்த போலீசார் தீக்குளிக்க முயன்ற சண்முகசுந்தரத்தை தடுத்து நிறுத்தினர்.



போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் கடந்த இரண்டு வருடமாக தன்னுடைய நிலத்திற்கு பட்டா சிட்டா கேட்டு ஆட்சியரிடம் தொடர்ந்து மனு அளித்ததாகவும், எந்தவித நடவடிக்கை எடுக்காததால் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. தொடர்ந்து போலீசார் சண்முகசுந்தரத்தை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் செப். 24-ல் நேரடி மாணவர் சேர்க்கை

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் தனியார் இணைப்புக் கல்லூரிகளில் காலியாக உள்ள இளமறிவியல் இடங்களை நிரப்ப நேரடி மாணவர...

கோவை மாவட்ட சாலைகள் பாதுகாப்பு சங்கத்தின் 14-வது மகாசபைக் கூட்டம்

கோவை மாவட்ட சாலைகள் பாதுகாப்பு சங்கத்தின் 14-வது மகாசபைக் கூட்டம் கோவையில் நடைபெற்றது. சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், ப...

தேசிய அளவிலான சிறிய ரக ரேஸ் கார் பந்தயத்தில் கோவை ஈ.ஏ.எஸ்.ஏ., கல்லூரி மாணவர்கள் அணி இரண்டாமிடம்

கோவை நவக்கரையில் உள்ள ஈ.ஏ.எஸ்.ஏ., என்ஜினீயரிங் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மெக்கானிக்கல் என்ஜினீயரிங் இரண்டாமாண்டு மாண...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் செப்டம்பர் 21ஆம் தேதி நிலவரப்படி 45.77 அடியாக உயர்ந்துள்ளது. 90 அடி க...

கோவையில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் செப்டம்பர் 21 நிலவரப்படி ஆனைமலையை அடுத்த ஆழியாறு அணையில் நீர்மட்டம் 63.3 அடியாகவும், பொள்ளாச்சியை அடுத...

கோவை பீளமேடு கவுன்சிலர் பள்ளி உணவின் தரம் மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம், வார்டு எண் 27, பீளமேடு பகுதியில் செப்டம்பர் 21, 2026 அன்று வார்டு கவுன்சிலர் அம்பிகா தனப...