ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவிற்கு விடுமுறை அளிக்குமாறு கோவையில் ஹிந்துஸ்தான் மக்கள் சேவா இயக்கம் கோரிக்கை

மெக்கா, ஜெருசலேம் போன்ற தளங்களுக்கு செல்வதற்கு சலுகைகள் அளிக்கப்படுவது போல் அயோத்தி ராமர் கோவிலுக்கு செல்வதற்கும் மாநில அரசு சார்பில் சலுகைகள் அறிவிக்க வேண்டும் என்று ஹிந்துஸ்தான் மக்கள் சேவா இயக்க நிர்வாகிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


கோவை: வருகின்ற 22ஆம் தேதி அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலில் கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு தமிழக அரசு தமிழ்நாடு முழுவதும் பொது விடுமுறை அளிக்க வேண்டும் என இந்துஸ்தான் மக்கள் சேவா இயக்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.



இது குறித்து தமிழக முதல்வருக்கு மனு அனுப்ப வந்திருந்த இவ்வியக்கத்தின் தலைவர் லோட்டஸ் மணிகண்டன் மற்றும் நிர்வாகிகள் ராமர் சிலை, மற்றும் பதாகைகளை எடுத்து வந்து கோரிக்கையை வலியுறுத்தினர்.



இது குறித்து லோட்டஸ் மணிகண்டன் கூறுகையில், ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவை காண்பதற்கு இந்தியாவில் உள்ள அனைத்து இந்து மக்களும் தயாராகி வருவதாகவும், பல்வேறு மக்களும் நேரில் செல்வதற்கு தயாராகி வருவதாகவும், அன்றைய தினம் வீடுகளில் விளக்கேற்றி வழிபாடு நடத்த தயாராகி வருவதாகவும், தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் நேரலையை காண்பதற்கு பலரும் ஆர்வம் காட்டி வருவதால் தமிழக அரசு அன்றைய தினம் பொது விடுமுறை அளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.



மேலும் மெக்கா, ஜெருசலேம் போன்ற தளங்களுக்கு செல்வதற்கு சலுகைகள் அளிக்கப்படுவது போல் அயோத்தி ராமர் கோவிலுக்கு செல்வதற்கும் மாநில அரசு சார்பில் சலுகைகள் அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் பல்வேறு மாநகராட்சி பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதிக்குட்பட்ட மாநகராட்சி வார்டு எண் 27, பீளமேடு பகுதியில் செப்டம்பர் 17, 2026 அன்று வார்டு கவுன்சி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆனைமலை ஆழியாறு அணையில் 65.45 அடியாகவும், பொள்ளாச்சி பரம்பிக்குளம் அணையில் 5...

கோவையில் ரோட்டராக்ட் கிளப் ஆஃப் கோவை நைட்ஸ் சார்பில் ARENA ஸ்போர்ட்ஸ் மீட்

கோவை வெங்கிட்டாபுரம் பகுதியில் உள்ள மாநகராட்சி கமல்நாதன் நினைவு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில், தேசிய விளையாட்டு தினத்தை மு...

கோவை வார்டுகள் 12, 13-ல் வளர்ச்சிப் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண்.12 மற்றும் 13க்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெறவுள்ள வளர்ச்சித் திட்டப் பணிகள் தொட...

காணியாளம்பாளையம் MIRA HOMES பகுதியில் ஈக்கள் தொல்லை: உடனடி நடவடிக்கை கோரி மனு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தாலுகா கக்கடவு ஊராட்சிக்கு உட்பட்ட காணியாளம்பாளையம் MIRA HOMES DTCP அப்ரூவல் வீட்டுமனை பகுதி...

இடையர்பாளையத்தில் காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு கூட்டம்

கோவை மாநகர் மாவட்டம் கவுண்டம்பாளையம் சர்க்கிள் கமிட்டி சார்பாக இந்திய தேசிய காங்கிரஸ் மறு சீரமைப்பு இயக்கத்தின் எஸ் எஸ்...